வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர் | Fish Prices Rise Due to Lack of Supply @ Vellore

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும்,…

மேலும் படிக்க

போதிய விலை கிடைக்காததால் வெல்லம் தயாரிப்பை கைவிட தயாராகும் வேலூர் விவசாயிகள் | Vellore Farmers Preparing to Abandon Jaggery Production Due to Insufficient Price

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி பரப்பளவு குறைந்து வருவதால் வெல்லம் தயாரிப்பை கைவிடும் முடிவில் இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை செழிப்பாக்கியதில் பாலாறுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பாலாற்றில் ஓடும் வெள்ளப் பெருக்கால் ஆற்றையொட்டிய நிலப்பரப்புகளின் விவசாயம் வளம் கொழித்தது. நெல்லுக்கு அடுத்தபடியாக பணப் பயிர்களான கரும்பு, வாழை உள்ளிட்டவை விவசாயிகளின் வாழ்க்கையை பெரிதாக வளர்த்தது. வேலூர் மாவட்டத்தில் ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு உயிர் தந்த வாழையும், கரும்பும் இன்று கை கொடுக்காமல் உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டிருந்தது என்பதற்கு உதாரணமாக இருப்பது இங்குள்ள சர்க்கரை ஆலைகளை உதாரணமாக கூறலாம். வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்தனர். அதேபோல், சர்க்கரை ஆலைகளுக்கு இணையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…

மேலும் படிக்க

களிமண் பற்றாக்குறை, வெயில் குறைவு, கூலி உயர்வால் மண்பாண்ட உற்பத்தி மந்தம்: தமிழக அரசு உதவுமா? | Pottery production was slow in vellore

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. போதிய வெயில் இல்லாததால் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பானை உற்பத்தியைச் செய்ய முடியவில்லை என்றும், களிமண் தட்டுப்பாடு காரணமாகக் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உற்பத்தி, வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக மண்பாண்டத் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். தைப்பொங்கல் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது கரும்பு, புதுப்பானையில் பொங்கப்படும் பச்சரிசி பொங்கலும் தான். பொங்கல் பண்டிகையுடன் பொங்கல் பானையைப் பிரிக்க முடியாத நிலை தலைமுறை தலைமுறையாக நீடிக்கிறது. இன்றைய நவீனக் காலத்தில் இயற்கையை நோக்கித் திரும்பி வரும் மக்கள் பழமையை அதிகமாகத் தேடிச் செல் கின்றனர். அந்த வகையில் இத்தனை ஆண்டு காலம் பித்தளைப் பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கல் வைத்து பண்டிகையைக் கொண்டாடிய மக்கள் சமீப காலமாக மண் பானையில் பொங்கல்…

மேலும் படிக்க

மணல் தட்டுப்பாட்டால் வேலூரில் கட்டுமான பணிகள் தொய்வு – மாற்று என்ன? | Due to shortage of sand, construction work is delayed in vellore

வேலூர்: கந்தனேரி மணல் குவாரியில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதால், மணல் கிடைக்காமல் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், எம்-சாண்ட் கிடைப்பதிலும் சிக்கல் இருப்பதால் மணல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தனியார் கட்டுமான நிறுவனத்தினர் கோரிக்கை வைக்கின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட அரும்பருதியில் கடந்த ஓராண்டாக இயங்கி மணல் குவாரி மூடப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கந்தனேரி கிராம பாலாற்றில் மணல் அள்ளும் பணி நடைபெற்று வந்தது. பொதுப்பணித்துறை இணையதளம் மற்றும் செல்போன் செயலி வழியாக முன்பதிவு செய்யப்படும் லாரிகளில் மணல் விற்பனை நடைபெற்றது. கந்தனேரியில் லாரிகளுக்காக இயக்கப்படும் இந்த குவாரியில் இருந்து மணல் அள்ளப்பட்டு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு டிப்பர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன. பாலாற்றில்…

மேலும் படிக்க