இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை தொடங்கினார் மோடி | Modi launched UPI service in Sri Lanka Mauritius

புதுடெல்லி: மொரிஷியஸ், இலங்கை நாடுகளில் யுனிஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவையை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான தினம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவீண் ஜெக்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யுபிஐ சேவையை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாகும். யுபிஐ சேவை அறிமுகம் மூலம் எல்லை தாண்டிய நிதி பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, எல்லை தாண்டிய உறவும் வலுப்படும். நமது வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கிறோம். இது, நமது மக்களின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இவ்வாறு பிரதமர் கூறினார். மொரிஷியஸ் பிரதமர் ஜெக்நாத்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | PM Modi on launch of UPI services in Sri Lanka, Mauritius

புதுடெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், காணொலி காட்சி இவ்விரு நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய பெருங்கடலில் உள்ள மூன்று நாடுகளுக்கும் (இந்தியா, இலங்கை, மொரிஷியஸ்) இந்த நாள் ஒரு சிறப்பான நாள். நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவு நவீன டிஜிட்டல் முறையில்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி | Launch of UPI today in Sri Lanka Mauritius PM Modi participates virtual video

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கை அதிபர்ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்ளவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈஃபிள் டவரில் யுபிஐ: கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள்…

மேலும் படிக்க

இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை மத்தள விமான நிலையத்தை வாங்க ரஷ்யா ஆர்வம் | Russia is Interested on Buying Sri Lanka’s Mattala Airport along with India

ராமேசுவரம்: இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் சேர்ந்து வாங்குவதற்கு ரஷ்யா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவரது சொந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டம் மத்தளவில் கடந்த 2009-ம் ஆண்டு சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் இந்த விமான நிலையத்துக்கு மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டு கடந்த 19.03.2013 அன்று மகிந்த ராஜபக்ச திறந்து வைத்தார். ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் 3500 மீட்டர் நீளம் 75 மீட்டர் அகலத்தில் ஓடு பாதை உள்ளது. மேலும் 115 அடி உயரக் கட்டுப்பாட்டு கோபுரமும் உண்டு. இந்த…

மேலும் படிக்க

இலங்கையில் முதலீடு செய்ய கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு | Coimbatore Entrepreneurs Invites to Invest on Sri Lanka

கோவை: கோவை தொழில் முனைவோர் இலங்கையில் முதலீடு செய்ய முன் வரவேண்டும் என, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் அழைப்பு விடுத்தார். இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை) சார்பில் தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஸ்வரன் பங்கேற்ற சிறப்புக் கூட்டம், அவிநாசி சாலையிலுள்ள தொழில் வர்த்தக சபை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை கோவை துணைத் தலைவர் ராஜேஷ் டி லுந்த் தலைமை வகித்தார். இதில் தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஸ்வரன், வணிக மேம்பாட்டு பிரிவு அதிகாரி ஞானதேவா ஆகியோர் பேசியதாவது: தீவு நாடான இலங்கை, அண்டை நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான் மட்டுமின்றி ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுடனும் நட்புடன் செயலாற்ற விரும்புகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன்…

மேலும் படிக்க

இந்திய ரூபாய் மதிப்பின்படி நீங்கள் பணக்காரராக உணரக்கூடிய 10 நாடுகளின் பட்டியல் இதோ..

கம்போடியா : உலகிலேயே மாபெரும் வழிபாட்டுத் தலமாக கருதப்படும் அங்கோர்வாட் இந்நாட்டில் உள்ளது. பழம்பெரும் கலாச்சாரம், கடற்கரைகள், சுவைமிக்க உணவுகள் போன்றவை இந்நாட்டின் பெருமைகளாக உள்ளன. இங்கு இந்திய ரூபாய் மதிப்பு 49.42 கம்போடியன் ரியால் ஆகும். Source link

மேலும் படிக்க