வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர் | Fish Prices Rise Due to Lack of Supply @ Vellore

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும்,…

மேலும் படிக்க

செங்குன்றம் பகுதிக்கு ஆந்திர நெல் வரத்து குறைந்ததால் அரிசி விலை உயர்வு | Rice Prices Rise Due to Decrease on Andhra Paddy Supply to Red Hills Region

திருவள்ளூர்: செங்குன்றம் பகுதிக்கு ஆந்திராவில் இருந்து வரும் நெல் வரத்து குறைந்ததால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அரிசி விலை உயர்ந்துள்ளது என அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலவாயல், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், சுமார் 55 நெல் மண்டிகளும், 40 அரிசி மண்டிகளும் செங்குன்றம் பகுதியில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் அரிசி தேவையை பூர்த்தி செய்யும் செங்குன்றம் பகுதிக்கு நாள் தோறும் ஆந்திராவில் இருந்து சுமார் நூறு லாரிகளில் நெல்வரத்து இருக்கும். அது தற்போது 50 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி விலை உயர்ந்துள்ளது என, அரிசி வியாபாரிகள்…

மேலும் படிக்க

சீசன் முடிவடைந்து வரத்து குறைந்ததால் பழநியில் கொய்யா விலை உயர்வு | Guava Prices Rise on Palani Due to End of Season and Reduced Supply

பழநி: பழநி ஆயக்குடியில் கொய்யா வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. 20 கிலோ கொய்யா ரூ.1,200-க்கு விற்பனையாகிறது. பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரபூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 டன் வரை கொய்யா விற்பனையாகும். கடந்த மாதம் கொய்யா சீசன் நிறைவடைந்ததால் அதன் வரத்தும் குறைய தொடங்கியது. தற்போது வரத்து மேலும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு பெட்டி (20 கிலோ) ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. தற்போது ஒரு பெட்டி ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகிறது. இது குறித்து கொய்யா விவசாயிகள் கூறியதாவது: ஒரு பெட்டி ( 20 கிலோ ) கொய்யா ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றால் விவசாயிகளுக்கு விலை கட்டுப்படியாகும்.…

மேலும் படிக்க

தேவை அதிகரிப்பு; வரத்து குறைவு – சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை உயர்வு | Increase on Demand; Lack of Supply – Rise on Prices of Small Onions and Big Onions

சேலம்: பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. சமையலுக்கு அத்தியாவசிய தேவையான காற்கறிகளில் ஒன்றாக, வெங்காயம் உள்ளது. இதில், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் என இரண்டுமே மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் வரை, சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50-க்கும், பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30-க்கும் விற்பனையானது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்துள்ளது. சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் அதிக பட்சம் கிலோ ரூ.70-க்கும், பெரிய வெங்காயம் ரூ.65-க்கும் விற்பனையாகிறது. வெளிச் சந்தைகளில், வெங்காயத்தின் தரத்துக் கேற்ப, விலை மேலும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வெங்காய வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியது: ”சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் சின்ன…

மேலும் படிக்க

சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பதால் ஓசூர் மக்கள் கவலை | Small Onion Prices Rise Again: Hosur Residents Worried as they Sell at Rs.100 Per KG

ஓசூர்: ஓசூரில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால், நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மலர்கள் மற்றும் காய் கறிகள் சாகுபடிக்குக் கைகொடுப்பதால், இப்பகுதி விவசாயிகள் மலர்கள் மற்றும் காய் கறி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சிறிய வெங்காயம் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தொடர் மழை பெய்ததால், சின்ன வெங்காயம் மகசூல் பாதிக்கப்பட்டு, ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. அதன் பின்னர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து சந்தைக்குச் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறைந்தது. கடந்த மாதம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விலை குறைந்தது. இதனிடையே, கடந்த சில வாரங்களாக வெளி…

மேலும் படிக்க

பண்டிகை நாட்களால் தேங்காய் விலை உயர்வு: கிருஷ்ணகிரி தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி | Coconut Prices Rise Due to Festivals: Krishnagiri Coconut Farmers Happy

கிருஷ்ணகிரி: முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களால் பயன்பாடு அதிகரித்து தேங்காய் விலை உயர்ந்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் மற்றும் தேங்காய் வர்த்தகத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் எனப் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். மகசூல் அதிகரிப்பும்..விலை வீழ்ச்சியும்: நிகழாண்டில் தென்னை மரங்களில் வழக்கத்தை விட மகசூல் அதிகரித்தால், தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால், கடந்த மாதங்களில் தேங்காயை இருப்பு வைக்காமல், கிடைக்கும் விலைக்கு வெளி மாநிலங்களுக்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அடுத்தடுத்து வரும் முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களால் தேங்காய் விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருவதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1.50 கோடி தேங்காய்: இது தொடர்பாக அரசம்…

மேலும் படிக்க