உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி | India will emerge as global semiconductor manufacturing hub PM Modi assured

புதுடெல்லி: உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கான அனுமதியை பிப்ரவரி 29-ல் மத்திய அமைச்சரவை வழங்கிய நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் நேற்று மேலும் கூறியதாவது: இந்திய செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கை அடைவதற்கான திட்டத்தின் கீழ் 3 ஆலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. இது, தொழில்நுட்பத்தில் இந்தியா சுயசார்பை நோக்கி செல்வதற்கான உறுதியான பாதையை வகுக்கும். அத்துடன், செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்க வகை செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். குஜராத்தில் தோலேரா, அசாமின் மோரிகான் மற்றும் குஜராத்தில் சனந்த் ஆகிய மூன்று இடங்களில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை நிறுவப்படும் என்று மத்திய மின்னணு மற்றும்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி | Launch of UPI today in Sri Lanka Mauritius PM Modi participates virtual video

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கை அதிபர்ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்ளவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈஃபிள் டவரில் யுபிஐ: கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள்…

மேலும் படிக்க

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம்: சூரத் வைர சந்தையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி | PM Modi inaugurates World s Largest Office Building Surat Diamond Market

சூரத்: குஜராத் மாநிலத்தில் சூரத் வைர சந்தை கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகத்தை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக உருவெடுத்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது பரபரப்பான நேரத்தில் 600 சர்வதேச பயணிகள் மற்றும் 1,200 உள்நாட்டு பயணிகளை கையாளும் திறன் கொண்டது. ஆண்டுக்கு 55 லட்சம் பயணிகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இதையடுத்து, உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமான சூரத் வைரச் சந்தையை (எஸ்.டி.பி.) பிரதமர் மோடி திறந்து வைத்தார். சூரத் நகருக்கு அருகே காஜோட் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. அதிநவீன வசதிகளைக்…

மேலும் படிக்க

இந்தியாவின் முதலீட்டு சூழல் குறித்து நம்பிக்கை தெரிவித்த அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு | pm Modi praises American based Indian businessmen confidence investment in India

புதுடெல்லி: இந்தியாவின் முதலீட்டு சூழல் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் பாலாஜி எஸ்.ஸ்ரீநிவாசனுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிலிக்கான்பள்ளத் தாக்கின் முக்கிய முதலீட்டாளர் மற்றும் தொழில்முனைவோராக திகழ்பவர் ஸ்ரீநிவாசன். இவர்முன்பு கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் காயின்பேஸின் தலைமைதொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது இவர் பலநிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றின் இணை நிறுவனராக உள்ளார். இவர் அண்மையில், “இந்தியா வின் வளர்ச்சி திறனை உலகம் இன்று உற்று நோக்குகிறது. வலிமையான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியா உலகுக்கு நல்லது’’ என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து உலக முதலீட்டாளர்களிடையே இந்திய சந்தையின் முதலீடு, வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைந்தது. இந்த நிலையில், ஸ்ரீநிவாசனின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி பாரட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ்வலைதளத்தில், “அமெரிக்கதொழில் முனைவோரின் இந்தகருத்து…

மேலும் படிக்க

பிரதமரின் வெகுமதி நிதி 15-வது தவணை விடுவிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி | Prime Minister’s Reward Fund 15th Tranche Release: Farmers Happy

கோவில்பட்டி: பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதி உதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணையாக ரூ.2000 விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாரத பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்தார். 5 ஆண்டு திட்டமான இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் கடைசி தவணையான 15-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் நேற்று (15-ம் தேதி) விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “2019-ம் ஆண்டு முந்தைய பட்டாதாரர் பெயருக்கு தான் பிரதம மந்திரி விவசாயிகள் வெகுமதி நிதி உதவி திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட்டது. 2019-க்கு பின்னர் புதிதாக…

மேலும் படிக்க

கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.50,000 கோடி அந்நிய முதலீடு: பிரதமர் மோடி | 50000 crore foreign investment in food processing sector in last 9 years PM Modi

புதுடெல்லி: உலகின் உணவு கூடமாக இந்தியாவை வெளிப்படுத்த ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ என்ற பெயரில் முதல் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இந்நிலையில் இந்தாண்டு சிறுதானியங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு 2-வது ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று முதல் 5-ம் தேதி வரைநடத்தப்படுகிறது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களின் சிஇஓ.க்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் இந்திய சமையல் கலைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்திய பாரம்பரிய சமையல் வகைகளை செய்து காட்டுகின்றனர். அரசு அமைப்புகள், தொழில் துறையினர், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் இதரபிரிவினர், வேளாண்…

மேலும் படிக்க