ஜிபிஎஸ் மூலமான சுங்கக் கட்டண வசூல் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் | Toll collection through GPS to be introduced soon Union Minister Nitin Gadkari

புதுடெல்லி: தற்போது சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விரைவிலேயே ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் ஜிபிஎஸ் மூலமான சுங்க வசூல் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், வரும் ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக நடை முறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்பு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். பாஸ்டேக் முறை நடைமுறைக்கு வந்த பிறகு, இந்தக் காத்திருப்பு நேரம்வெகுவாக குறைந்தது. இந்நிலையில், சுங்கச் சாவடிகளுக்குப் பதிலாக ஜிபிஎஸ் முறையில் வசூல் செய்யும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்படி, வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். ஜிபிஎஸ் மூலம், வாகனங்களின் பயண தூரம்…

மேலும் படிக்க

அடுத்த 4 ஆண்டுகளில் வாகன தயாரிப்பில் இந்தியா முதலிடம்: நிதின் கட்கரி தகவல் | India to be number one in auto manufacturing in next 4 years Nitin Gadkari

புதுடெல்லி: சில தினங்களுக்கு முன்பு செக் நாட்டில் நடைபெற்ற உலக சாலை மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய வாகனத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வாகன சந்தை மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலகளாவிய வாகனத் துறையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாம் இடம்பிடித்துள்ளது. சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் அடுத்த 4 ஆண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடிக்கும்” என்று தெரிவித்தார். சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் அளவில் முதலீடு செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஹூண்டாய்…

மேலும் படிக்க

டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு விளக்கம் | 10% additional GST as pollution tax on diesel vehicles – Minister  Nitin Gadkari explained

புதுடெல்லி: டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கும் பரிந்துரை எதுவும் மத்திய அரசுக்கு வழங்கப்படவில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். முன்னதாக, காற்று மாசினைக் குறைக்கும் வகையில் டீசல் இஞ்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுத இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “டீசல் வாகன விற்பனைக்கு 10 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து தெளிவுபடுத்துவது அவசியமாகும். தற்போது அது போன்ற எந்தப் பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை. வரும் 2070-க்குள் பூஜ்ஜியம் கார்பன்…

மேலும் படிக்க