உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி | India will emerge as global semiconductor manufacturing hub PM Modi assured

புதுடெல்லி: உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கான அனுமதியை பிப்ரவரி 29-ல் மத்திய அமைச்சரவை வழங்கிய நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் நேற்று மேலும் கூறியதாவது: இந்திய செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கை அடைவதற்கான திட்டத்தின் கீழ் 3 ஆலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. இது, தொழில்நுட்பத்தில் இந்தியா சுயசார்பை நோக்கி செல்வதற்கான உறுதியான பாதையை வகுக்கும். அத்துடன், செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்க வகை செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். குஜராத்தில் தோலேரா, அசாமின் மோரிகான் மற்றும் குஜராத்தில் சனந்த் ஆகிய மூன்று இடங்களில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை நிறுவப்படும் என்று மத்திய மின்னணு மற்றும்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி | Launch of UPI today in Sri Lanka Mauritius PM Modi participates virtual video

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கை அதிபர்ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்ளவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈஃபிள் டவரில் யுபிஐ: கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள்…

மேலும் படிக்க

2024-25 இடைக்கால பட்ஜெட்: பிரதமர் மோடியின் அடுத்த 25 ஆண்டுகால இலக்கை நோக்கிய பயணம் | interim Budget for is a journey towards next 25 year goal of Prime Minister Modi

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார். இது அவர் நிதி அமைச்சாராக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட். நிர்வாகம், மேம்பாடு, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல விதங்களில் வலுவான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை நிர்மலா சீதாரமன் தன் பட்ஜெட் உரையில் சுட்டிக் காட்டினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சர்வதேச நாடுகளுடனான உறவு என பல தளங்களில் கடந்த 10 ஆண்டில் இந்தியா மேம்பாடு அடைந்துள்ளது. இந்நிலையில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்குக்கான பாதை…

மேலும் படிக்க

கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.50,000 கோடி அந்நிய முதலீடு: பிரதமர் மோடி | 50000 crore foreign investment in food processing sector in last 9 years PM Modi

புதுடெல்லி: உலகின் உணவு கூடமாக இந்தியாவை வெளிப்படுத்த ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ என்ற பெயரில் முதல் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இந்நிலையில் இந்தாண்டு சிறுதானியங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு 2-வது ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று முதல் 5-ம் தேதி வரைநடத்தப்படுகிறது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களின் சிஇஓ.க்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் இந்திய சமையல் கலைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்திய பாரம்பரிய சமையல் வகைகளை செய்து காட்டுகின்றனர். அரசு அமைப்புகள், தொழில் துறையினர், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் இதரபிரிவினர், வேளாண்…

மேலும் படிக்க

சிக்கில் செல் இரத்த சோகையை கட்டுப்படுத்த மத்திய அரசின் புதிய திட்டம்..!

சமீபத்தில் நேசனல் சிக்கில் செல் அனீமியா எலிமினேஷன் மிஷனை (National Sickle Cell Anemia Elimination Mission) இந்தியாவில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சிக்கில் செல் அனீமியா என்பது ஒரு வகையான ரத்த சோகை ஆகும். நாட்டில் இருக்கும் சுமார் 17 மாநிலங்களில் வசிக்கும் 7 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. Sickle Cell Anemia-வால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு,  ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் அடக்கம். கணிசமான எண்ணிக்கையிலான பழங்குடி மக்களை பாதித்துள்ள சிக்கில் செல் அனீமியா நோயிலிருந்து 2047-ஆம் ஆண்டுக்குள் மக்களை காப்பாற்றும் நோக்கில் தேசிய அளவிலான  சிக்கில் செல் அனிமீயா 2047 என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் துவக்கி வைத்துள்ளார். முன்னதாக மத்திய நிதியமைச்சர்…

மேலும் படிக்க

நெல் உள்பட 14 வகை பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு: மத்திய அரசு

கரீப் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 143 ரூபாய் வீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 2023-24-ம் ஆண்டில் வேளாண் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொருட்களை விளைவிப்பதற்கான செலவில் 50 சதவீதம் அளவுக்கு வருவாய் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண ரக நெல்லின் ஆதார விலை குவிண்டாலுக்கு 2,183 ரூபாயாகவும், முதல் தர நெல்லின் விலை 2.203 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சோளத்துக்கான ஆதார விலை 2,990 ரூபாயிலிருந்து 3,225 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கம்புக்கான ஆதார விலை 2,350…

மேலும் படிக்க