இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை தொடங்கினார் மோடி | Modi launched UPI service in Sri Lanka Mauritius

புதுடெல்லி: மொரிஷியஸ், இலங்கை நாடுகளில் யுனிஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவையை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நட்பு நாடுகளுக்கு இன்று சிறப்பான தினம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவீண் ஜெக்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யுபிஐ சேவையை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பானதாகும். யுபிஐ சேவை அறிமுகம் மூலம் எல்லை தாண்டிய நிதி பரிவர்த்தனைகள் மட்டுமின்றி, எல்லை தாண்டிய உறவும் வலுப்படும். நமது வரலாற்று உறவுகளை நவீன டிஜிட்டல் முறையில் இணைக்கிறோம். இது, நமது மக்களின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இவ்வாறு பிரதமர் கூறினார். மொரிஷியஸ் பிரதமர் ஜெக்நாத்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | PM Modi on launch of UPI services in Sri Lanka, Mauritius

புதுடெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், காணொலி காட்சி இவ்விரு நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய பெருங்கடலில் உள்ள மூன்று நாடுகளுக்கும் (இந்தியா, இலங்கை, மொரிஷியஸ்) இந்த நாள் ஒரு சிறப்பான நாள். நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவு நவீன டிஜிட்டல் முறையில்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி | Launch of UPI today in Sri Lanka Mauritius PM Modi participates virtual video

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கை அதிபர்ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்ளவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈஃபிள் டவரில் யுபிஐ: கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள்…

மேலும் படிக்க