ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசத்துக்கு 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி | approval to export 64400 tonnes of onion to Bangladesh uae

புதுடெல்லி: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) இதுகுறித்து வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் 64,400டன் வெங்காயத்தை ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடத்தக்க அளவுவெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்சிஇஎல் மூலம் ஐக்கிய அரபுஅமீரகத்துக்கு காலாண்டுக்கு 3,600 டன் அளவு உச்சரவரம்புடன் 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று வங்கதேசம் உள்ளிட்ட நேச நாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு வெங்காயஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது. 2023 டிசம்பர் 7-ல் வெளியான அறிவிப்பின்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு இம்மாதம் 31-ம் தேதிவரை மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், உள்நாட்டுசந்தைகளில் வெங்காயத்தின் கையிருப்பு போதுமான அளவில்இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விலை சரிவை தடுக்கும் நோக்கில் நட்பு நாடுகளுக்கு…

மேலும் படிக்க

உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கை 30% ஆக உயர்த்த இலக்கு | target to increase India s share of total world milk production to 30 percentage

புதுடெல்லி: உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனீஷ் ஷா தெரிவித்துள்ளார். உலக அளவில் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தினமும் 23.5 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் மொத்த பால் உற்பத்தியில் 24 சதவீதம் ஆகும். இந்நிலையில், இதை 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மனீஷ் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து மனீஷ் ஷா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது உலகின் மொத்த பால் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை இந்தியா வழங்குகிறது. 2030-ம்…

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ-வாக தமிழர் நியமனம் | Tamil appointed as CEO of American company

கலிஃபோர்னியா: ஸ்னோஃபிளேக் (Snowflake) அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனம் ஆகும். இத்துறையில் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பிராங் ஸ்லூட்மேன் பொறுப்பில் இருந்தார். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அவர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய சிஇஓ-வாக ஸ்ரீதர் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீதர் ராமசாமி 1967-ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டுகாலம் பணியாற்றியஅவர், 2019-ம் ஆண்டு நீவா நிறுவனத்தை நண்பருடன் இணைந்து தொடங்கினார். இந்நிறுவனத்தை 2023-ம் ஆண்டு ஸ்னோஃபிளேக் நிறுவனம் கையகப்படுத்தியது. இதையடுத்து ஸ்னோஃபிளேக் நிறுவனத்தில் இணைந்த ராமசாமி அங்கு முக்கியமான தயாரிப்புகளை அறிமுகம் செய்தார். Source link

மேலும் படிக்க

லட்டு பிரசாதம் விலையை குறைக்க இயலாது: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி திட்டவட்டம் | Laddu prasadam price cannot be reduced tirumala Tirupati Devasthanam official

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க இயலாது என தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருமலையில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும்நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்தேவஸ்தான நிர்வாக அதிகாரிதர்மாரெட்டி கலந்து கொண்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவாரி சேவைக்கான வயது உச்சவரம்பை 60 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், 60 வயதுக்குட்பட்டவர்களால்தான் பக்தர்களுக்கு தேவையான சேவையை செய்ய முடிகிறது. மேலும், ஸ்ரீவாரி சேவை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் தேவையான லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. லட்டுவின் தரம், எடை குறையவில்லை. ஆனால், பக்தர்கள் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க…

மேலும் படிக்க

கோதுமை உற்பத்தி 11.2 கோடி டன் எட்டும் | Wheat production will reach 11 crore tonnes

புதுடெல்லி: நடப்பு பயிர் ஆண்டில் கோதுமை உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் 11.2 கோடி டன்னை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஜூலை முதல் 2024 ஜூன் வரையிலான நடப்பு பயிர் ஆண்டில் முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய வேளாண் அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, கோதுமை உற்பத்தி முந்தைய பயிர் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு பயிர் ஆண்டில் 1.32 சதவீதம் அதிகரித்து 11.2 கோடி டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதி ஆண்டில் கோதுமை உற்பத்தி 11.05 கோடி டன்னாகவும், 2021-22 பயிர் ஆண்டில் 10.77 கோடி டன்னாகவும் இருந்தது. Source link

மேலும் படிக்க

நீரிழிவு நோய் உட்பட 69 மருந்துகளுக்கு விலை நிர்ணயம்: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு | Pricing of 69 drugs including diabetes National Drug Pricing Authority notification

புதுடெல்லி: நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தும் மருந்துகள் உட்பட 69 மருந்துகளுக்கான விலை உச்சவரம்பை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் சிடாகிளிப்டின் மற்றும் மெட்ஃபார்மின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை விலை ரூ.13.25 எனவும், உயர் ரத்த அழுத்தத்துக்கு பயன்படுத்தும் ஓல்மெசர்தன் மெடாக்சோமில் (20 எம்ஜி), அம்லோடைபைன் (5எம்ஜி) மற்றும் ஹைட்ரோகுளோரோதையாசைடு (12.5 எம்ஜி) மாத்திரை விலை ரூ.8.92 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 69 வகையான மருந்துகளுக்கு மருந்துகள் விலை கட்டுப்பாடு உத்தரவு 2013-ன்படி உச்சவரம்பு விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஜிஎஸ்டி நீங்கலாக அரசு நிர்ணயித்த விலைதான் அதிகபட்ச சில்லரை விலை. விலை கட்டுப்பாடு உத்தரவு: மேற்கண்ட மருந்துகள் அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதலாக விற்பனை…

மேலும் படிக்க

உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி | India will emerge as global semiconductor manufacturing hub PM Modi assured

புதுடெல்லி: உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கான அனுமதியை பிப்ரவரி 29-ல் மத்திய அமைச்சரவை வழங்கிய நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் நேற்று மேலும் கூறியதாவது: இந்திய செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கை அடைவதற்கான திட்டத்தின் கீழ் 3 ஆலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. இது, தொழில்நுட்பத்தில் இந்தியா சுயசார்பை நோக்கி செல்வதற்கான உறுதியான பாதையை வகுக்கும். அத்துடன், செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்க வகை செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். குஜராத்தில் தோலேரா, அசாமின் மோரிகான் மற்றும் குஜராத்தில் சனந்த் ஆகிய மூன்று இடங்களில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை நிறுவப்படும் என்று மத்திய மின்னணு மற்றும்…

மேலும் படிக்க

சக்கர நாற்காலி கொடுக்காததால் பயணி உயிரிழப்பு: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பு | Passenger dies due to non provision of wheelchair Air India fined Rs 30 lakh

மும்பை: ஏர் இந்தியா விமான பயணிக்கு சக்கர நாற்காலி கொடுக்காமல் அவர் நடந்தே சென்று உயிரிழந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதற்காக அந்தநிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-ம் தேதி நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு வயதான தம்பதி பயணம் செய்துள்ளனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவர்களுக்கு ஏர் இந்தியா சார்பில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் இருந்து டெர்மினலுக்கு நடந்தே வந்த 80 வயதான அந்தப் பயணி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பிப். 16-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஏர் இந்தியா பதிலில், “பயணியின் மனைவிக்கு சக்கர நாற்காலி…

மேலும் படிக்க

உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை, வெடிமருந்து ஆலை தொடக்கம் | Launch of missile ammunition plant in Uttar Pradesh investment of Rs 3000 crore

கான்பூர்: அதானி குழுமம் சார்பில் உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதானி குழுமத்தின் அங்கமான ‘அதானி டிபென்ஸ் அண்ட்ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் சார்பில்உத்தர பிரதேசத்தின் கான்பூரில் 500 ஏக்கர் பரப்பளவில் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு ஏவுகணை மற்றும் வெடிமருந்து உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த திங்கள்கிழமை கான்பூரில் நடைபெற்ற விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று அதானி ஏவுகணை, வெடிமருந்து உற்பத்தி ஆலைகளை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தின் அதானி குழுமம் சார்பில் ஆலைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இங்குஉற்பத்தி செய்யப்படும் ஏவுகணைகள், வெடிமருந்துகள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று தெரிவித்தார். 4,000…

மேலும் படிக்க

டெல்லியில் பாரத் டெக்ஸ் கண்காட்சி தொடக்கம்: ஜவுளித் துறைக்கு முழு ஆதரவு அளிக்க பிரதமர் மோடி உறுதி | Bharat Tex exhibition in Delhi PM Modi pledges full support to textile industry

புதுடெல்லி: டெல்லியில் பாரத் டெக்ஸ் என்ற சர்வதேச கண்காட்சியை நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ஜவுளித் துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘பாரத் டெக்ஸ் 2024‘ என்ற பெயரில் சர்வதேச கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஜவுளித் துறையில் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய ஜவுளி உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களை இணைக்கும் பாலமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான தளமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் அசாம்…

மேலும் படிக்க