கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்: மார்ச் 11 முதல் அமல் | Coimbatore – Bengaluru Vande Bharat Train Time Change: Effective March 11th

கோவை: கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் தினமும் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. பெங்களூருவில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது.பயணிகள் சிரமப்படுவதால், ரயில் இயக்க நேரத்தை மாற்றவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, ரயில் இயக்கப்படும் நேரத்தை மாற்றி தெற்கு ரயில்வே அறிவித்தது. வரும் மார்ச் 11-ம் தேதி முதல் இந்த நேர மாற்றம் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வண்டி எண் 20642 / 20641 கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் காலை 7.25 மணிக்கு புறப்பட்டு, திருப்பூருக்கு 8.03 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.42 மணிக்கும், சேலத்துக்கு 9.32 மணிக்கும், தருமபுரிக்கு 10.51 மணிக்கும், ஓசூருக்கு…

மேலும் படிக்க

மார்ச் 5 முதல் கோவை – பெங்களூரு உதய் விரைவு ரயில் தினசரி இயக்கம் | Coimbatore – Bengaluru Uday Express Daily Operation from 5th March

கோவை: கோவை – பெங்களூரு இடையிலான உதய் விரைவு ரயில் வரும் மார்ச் 5-ம் தேதி முதல் தினந்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வண்டி எண் 22666 / 22665 கோவை – பெங்களூரு இடையிலான உதய் விரைவு ரயில் சேவை புதன் கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதய் விரைவு ரயில் சேவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை – பெங்களூரு உதய் விரைவு ரயில் மார்ச் 5-ம் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும். தினமும் கோவையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பெங்களூரில் இருந்து பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை…

மேலும் படிக்க

கோவை மெட்ரோ ரயில் திட்டம்: மத்திய அரசின் நிதி பங்களிப்பை எதிர்பார்க்கும் தமிழக அரசு | Coimbatore Metro Rail Project: The TN Govt is Expecting Financial Contribution from the Central Govt

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. சென்னை, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ளது போல கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுநல அமைப்புகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப் பட்டது. தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரால், கோவைமெட்ரோ ரயில் திட்டத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித் தடங்களில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் வழித்தடமாக உக்கடம் பேருந்து…

மேலும் படிக்க

விரிவாக்க திட்டம் தாமதம்: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கோவை விமான நிலையம் | Expansion Project Delayed: Coimbatore Airport Continues to be Neglected

கோவை: கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட விமான நிலையங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு காட்டும் அக்கறை கோவை விமான நிலையத்தின் மீது காட்டப்படுவதில்லை என பயணிகள், எம்.பி உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை பீளமேடு விமான நிலையம் திகழ்கிறது. ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கும் பயனளித்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்றபோதும் இன்று வரை ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப் படுகின்றன. இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் கரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமான நிலைய வளர்ச்சிக்காக கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட விரிவாக்க திட்டம், நிலம் ஆர்ஜித பணிகளை தமிழக…

மேலும் படிக்க

வான்வழியே தொலைநோக்கும் டிரோன்கள் – நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளில் கலக்கும் கோவை நிறுவனம் | Coimbatore company specializing in intelligence, information and data analysis

கோவை: வான்வழி நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளில் நாடு முழுவதும் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது கோவையை சேர்ந்த ‘பேர்டுஸ்கேல் டிரோன்’ நிறுவனம். தொழில் நகரான கோவையை மையமாக கொண்ட இந்நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசுத் திட்டங்களில் வான்வழி நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. உரிய அனுமதி பெற்று செயல்படும் இந்நிறுவனம் அனல் மின்நிலையம், காற்றாலைகள், சூரியஒளி ஆற்றல் மின்உற்பத்தி திட்டங்களின் செயல்பாடுகளை கண்டறிதல், தொழில்துறை சார்ந்த சொத்துகளை வான்வழி ஆய்வு செய்தல், கட்டுமானப் பணிகளின் நிலையை துல்லியமாக கண்டறிதல், வேளாண் துறை மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், நிலங்களை சிறப்பான முறையில் சர்வே செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப உயர்கோபுரங்களில் ஆய்வு செய்யவும்…

மேலும் படிக்க

எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை: கோவை தொழில் துறையினர் @ பட்ஜெட் 2024 | No Emphasis on MSME Development: Coimbatore Industry @ Budget 2024

கோவை: மத்திய நிதியமைச்சர் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ( எம்எஸ்எம்இ ) வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் ( டாக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ்: சிறு தொழில்களுக்கு எவ்விதமான அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்படாதது, சார்ப்பாஸ் சட்டத்தின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள 6 மாதங்கள் கால அவகாசம் நீட்டிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளுக்காக காத்திருந்த நிலையில் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்ட குறுந் தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின் ( காட்மா ) தலைவர் சிவக்குமார்: தொழில் தொடங்க வட்டி இல்லாகடன் வழங்குவதற்கு ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம்…

மேலும் படிக்க

நாடு முழுவதும் வீடு, விவசாய பம்ப்செட் தேவை அதிகரிப்பு: மீளும் கோவை பம்ப்செட் நிறுவனங்கள் | Increase on Domestic, Agricultural Pumpset Demand Across Country: Rebounding Coimbatore Pumpset Companies

கோவை: நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன் படுத்தப்படும் பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மொத்த பம்ப் செட் தேவையில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பம்ப் செட் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பம்ப்செட் தேவை கணிசமாக குறைந்தது. இந்நிலையில், தற்போது வீடு மற்றும் விவசாய பம்ப்செட் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் எதிர்வரும் மாதங்களில் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும் என்றும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ( சீமா ) தலைவர் விக்னேஷ் கூறியதாவது: பம்ப்செட் தொழில்…

மேலும் படிக்க

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வீழும் விசைத்தறி… மீளுமா? | Coimbatore, Tiruppur Districts Falling Power Loom… Will it Recover?

திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி சத்தம் என்பது உழைப்பின் சங்கீதமாகவே பார்க்கப்படுகிறது. நள்ளிரவு நேரத்திலும் வானொலியில் பாட்டு கேட்டபடி, குடும்பம், குடும்பமாக தறிகளை இயக்கிக் கொண்டிருந்தவர்கள் தான், விசைத் தறித் தொழிலாளர்கள். இன்றைக்கு அந்த காட்சிகள் அரிதாகிவிட்டன. பகல் நேரத்திலேயே வேலை இன்றி பல விசைத் தறிக்கூடங்களில், பூச்சிகள் கூடு கட்டும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. கரோனா பெருந்தொற்றில் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகளை நம்பி, 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட கூலி விவகாரம், பண மதிப்பு நீக்கம், கரோனா மற்றும் பஞ்சு, நூல் விலை உயர்வு என இன்றைக்கு இந்த தொழில் வீழ்ச்சிக்கான காரணங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றுக்கெல்லாம் உச்சமாக மின்…

மேலும் படிக்க

கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளுகை அதிகரிப்பு | Increase on Cargo Handling at Coimbatore Airport

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் வெளி நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,413.16 டன் மற்றும் உள் நாட்டு பிரிவில் 7,145.70 டன் என மொத்தம் 8,559 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கோவை பீளமேடு விமான நிலையம் கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள கோவை உள்ளிட்ட சுற்றுப் புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 23 முதல் அதிகபட்சமாக 28 விமானங்கள் வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்கப் படுகின்றன. ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் சேவை மட்டுமின்றி சரக்கு போக்குவரத்தை கையாள்வதற்கு…

மேலும் படிக்க

ஃபிளாட் பத்திரப்பதிவு செய்வதில் பழைய முறையை பின்பற்ற கோவை கிரெடாய் அமைப்பு கோரிக்கை | Coimbatore CREDAI Organization Request to Follow Old System of Flat Deed Registration

கோவை: தமிழ்நாட்டில் ஃபிளாட் பத்திரப்பதிவு செய்வதில் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோவை ‘கிரெடாய்’ தொழில் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ‘கிரெடாய்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப் பதிவு செய்யும் முறையில் தமிழக அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது. இதுவரை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பிரிக்கப்படாத பாக நில விற்பனைக்கு ஒரு பத்திரப் பதிவு, வாங்கும் ஃபிளாட்டின் கட்டுமான ஒப்பந்தத்துக்கு மற்றொரு பத்திரப்பதிவு என இரு பத்திரப்பதிவுகளை செய்து வந்தனர். புதிய பத்திரப்பதிவு முறையில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. புதிய முறையில் நிலத்துக்கும், கட்டுமான ஒப்பந்தத்துக்கும் சேர்த்து மொத்தமாக 7 சதவீதம் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் அபார்ட்மெண்டுகளுக்கு ஏரியா வாரியாக கைடுலைன் மதிப்பை அரசு…

மேலும் படிக்க