தங்கம் விலை அதிரடி உயர்வு: வரலாற்றில் முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டியது | Gold price surges – crosses Rs 48 thousand for first time in history

சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை இன்று (மார்ச் 5) ஒரேநாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,440-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 என்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. இன்று தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.48,120 என்ற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை…

மேலும் படிக்க

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு | Will Coconut Oil be Sold on Tamil Nadu Ration Shops? – Expectations of Farmers

ஒட்டன்சத்திரம்: கேரளாவைப் போல் தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்து எண்ணெய் தயாரித்து ரேஷனில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழநி, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 31,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. இது மட்டுமின்றி தேங்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில், தேங்காய்களை உலர்த்தி கொப்பரைகளான பின்பு, அதை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளுக்கு விவசாயிகள் அனுப்பு கின்றனர். தற்போது தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை தினமும் சரிவடைந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கிறது. கேரள மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள் முதல்…

மேலும் படிக்க

தமிழகத்தில் கோடை காலத்தில் தினசரி மின் தேவை 19,000 மெகாவாட்டாக உயர வாய்ப்பு | Daily Power Demand on Tamil Nadu During Summer is Likely to Rise to 19000 MW

கோவை: தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு தினசரி மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் சீரான மின் விநியோகத்துக்கும் தயார் நிலையில் உள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தினசரி மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன் யூனிட். இதில் மத்திய கிரிட் ( மின் கட்டமைப்பு ) மூலம் 209.52 மில்லியன் யூனிட், அனல் மின் நிலையத்தால் 94.75, ஹைட்ரோ திட்டத்தில் 7.11, காஸ் 5.55, காற்றாலை 22.26, சூரிய ஒளி 32.2, பையோ திட்டத்தில் 12.14 மில்லியன் யூனிட் வீதம் மின் உற்பத்தி கிடைத்துள்ளது.…

மேலும் படிக்க

பொள்ளாச்சி பகுதியில் கடும் வறட்சி – தென்னை மரங்களை காக்க போராடும் விவசாயிகள் | Severe Drought on Pollachi – Farmers Struggling to Save Coconut Trees

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை வறட்சியில் இருந்து காக்க பணம் செலவழித்து தண்ணீர் வாங்கி ஊற்ற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் பருவமழை தவறியதால், இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே கடும் வறட்சி நிலவி வருகிறது. பாசன நீர் ஆதாரங்கள் வற்றியதால், பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக நெகமம் பகுதியில் நீர்ப் பாசனம் அதிகம் தேவைப்படும் தென்னை மரங்களை காக்க, மாதந் தோறும் ஆயிரக் கணக்கான ரூபாய் தண்ணீருக்காக செலவழிக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இது குறித்து நெகமம் காணியாலம் பாளையத்தை சேர்ந்த விவசாயி கந்த வடிவேல் கூறியதாவது: தென்னையில் உயர் கலப்பின ரகங்களுக்கு, உயிர் தண்ணீராக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் ஒரு நாளைக்கு 85 லிட்டர் அளிக்க வேண்டும். நாட்டுரக மரங்களுக்கு 65 லிட்டர்…

மேலும் படிக்க

சுவிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தகவல் | Agreement with Swiss Company: Tiruppur Exporters Association Info

திருப்பூர்: வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் நடைபெறும் உற்பத்தியை ஆவணப்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ‘ஃபுளூசைன் டெக்னாலஜி’ நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்திய அளவில் வீட்டு உபயோக ஆயத்த ஆடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப் படுவதை ஆவணப் படுத்தி உறுதி செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் வீட்டு உபயோக ஆயத்த ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் வாயிலாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஃபுளூசைன் டெக்னாலஜி நிறுவனத்துடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் சுவிட்சர்லாந்தின் ஃப்ளூசைன் டெக்னாலஜி…

மேலும் படிக்க

பதநீர் சுரப்பு குறைந்ததால் மத்தூர் பகுதியில் பனை வெல்லம் உற்பத்தி 70% பாதிப்பு | Palm Jaggery Production on Mathur Region has been Affected by 70% Due to the Decrease on Palm Water Secretion

கிருஷ்ணகிரி: போதிய மழையின்மை மற்றும் பனியின் தாக்கத்தால் மத்தூர் பகுதியில் பனை மரங்களில் பதநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், பனை வெல்லம் உற்பத்தி 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர், போச்சம்பள்ளி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. குறிப்பாக, மத்தூர் பகுதியில்250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதநீர் இறக்கி பனைவெல்லம் தயாரிக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். 100 லிட்டர் பத நீரில் 20 கிலோ: பனை மரங்களில் ஆண் மற்றும் பெண் வகைகள் உள்ளன. இதில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை ஆண் பனை மரங்களிலிருந்தும், மார்ச் முதல் ஜூன் வரை பெண் பனை மரங்களிலிருந்தும் பதநீர் இறக்கப்பட்டு பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. 100 லிட்டர் பனை வெல்லத்தைக் காய்ச்சினால் சுமார் 20 கிலோ பனை வெல்லம்…

மேலும் படிக்க

ஏற்றுமதி பணி ஆணைகள் அதிகரிப்பு – நிலையான வளர்ச்சி பாதையில் வார்ப்படம், பம்ப்செட் தொழில் | Increase on Export Work Orders – Casting, Pumpsets Industry on Steady Growth Path

கோவை: தொழில் நகரான கோவை வார்ப்படம், பம்ப்செட் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு தொழில் துறையும் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை எதிர்கொண்டன. மூலப்பொருட்கள் விலை உயர்வு, போதிய பணி ஆணைகள் கிடைக்கப்பெறாதது உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக விளங்கின. இந்நிலையில், சமீப காலமாக மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளதாலும், நிலையாக உள்ளதாலும் தொழில் நிறுவனங்களில் நிலையான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வார்ப்பட தேசிய தொழில் அமைப்பின் ( ஐஐஎப் ) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: பொதுவாக தொழில் துறை வளர்ச்சியை கணக்கிடும் கருவியாக வார்ப்பட தொழில் திகழ்கிறது. பெரும்பாலான பொருட்கள் உற்பத்திக்கு வார்ப்படம் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம். வார்ப்பட தொழில் வளர்ச்சி பெற்றால் ஒட்டுமொத்த தொழில் துறையும்…

மேலும் படிக்க

இலவம் காய் விளைச்சல் அதிகரிப்பு: தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி | Increase on Ilavam Panju Fruit Yield: Theni Farmers are Happy

கண்டமனூர்: தேனி மாவட்டத்தில் பரவலாக இலவம் காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பக் கரை, சோத்துப்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், போடி, முந்தல், குரங்கணி, சிறைக்காடு, வருசநாடு, வாலிப்பாறை, அரசரடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இலவம் மரங்கள் அதிகம் உள்ளன. கன்றுகளை நட்டு 3 ஆண்டு களில் பலன் தரும். பின்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் பூ பூத்து பிப்ரவரியில் இலவம் பிஞ்சுகளாக மாறுகின்றன. பின்பு காய்கள் திரட்சியாக மாறி ஏப்ரலில் இதன் பட்டைகள் காய்ந்து பஞ்சு எடுக்கும் பருவத்துக்கு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் இம்மரங் களில் பூக்கள் அதிக அளவில் பூத்தன. இவை பிஞ்சாக மாறி காய் பருவத்துக்கு வந்துள்ளன. தற்போது இலைகள் உதிர்ந்து மரங்களில் காய்கள் மட்டுமே கொத்து கொத்தாக காய்த்துள்ளன. கடந்த…

மேலும் படிக்க

பழநியில் கொய்யா விலை வீழ்ச்சி – ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை | Guava Prices Fall on Palani – Selling at Rs.25 Per KG

பழநி: பழநியில் கொய்யா வரத்து மெல்ல அதிகரித்து வருவதால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரப்பூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைபட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக் டேர் பரப்பளவில் லக்னோ-49 ரக கொய்யா சாகுபடி செய்யப் படுகிறது. இங்கு விளையும் கொய்யாவுக்கு தனி கிராக்கி உண்டு. நாள்தோறும் 20 டன்: கொய்யாவுக்கென பிரத்யேகமாக, ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே திறந்த வெளியில் தனிச்சந்தை செயல் படுகிறது. இந்த சந்தையில் காலை 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் அனைத்து கொய்யாவும் விற்பனை செய்யப்பட்டு விடும். நாள்தோறும் 20 டன் கொய்யா விற்பனையாகும். இங்கிருந்து வெளி மாவட்டம், வெளி மாநில வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். நேரடி விற்பனை என்பதால் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள்…

மேலும் படிக்க

வருமானவரி சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: ஈரோட்டில் 5,000 கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டம் | Protest against Income Tax Amendment: Textile Traders Protest by Closing 5000 Shops on Erode

ஈரோடு / மேட்டூர் / நாமக்கல்: வருமானவரி சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் 5,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறு, குறு தொழில்கள் தங்களது வணிகக் கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் ( பிரிவு 43 பி ( எச் ) ) காரணமாக சிறு, குறு வணிக நிறுவனங்களின் இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள், 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால், அவை வருமானமாக கருதப்பட்டு, அவற்றிற்கு வரி விதிக்கப்படும். இந்த சட்டத் திருத்தத்தால், ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் அல்லது ஓராண்டுக்கு…

மேலும் படிக்க