வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர் | Fish Prices Rise Due to Lack of Supply @ Vellore

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும்,…

மேலும் படிக்க

போதிய விலை கிடைக்காததால் வெல்லம் தயாரிப்பை கைவிட தயாராகும் வேலூர் விவசாயிகள் | Vellore Farmers Preparing to Abandon Jaggery Production Due to Insufficient Price

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி பரப்பளவு குறைந்து வருவதால் வெல்லம் தயாரிப்பை கைவிடும் முடிவில் இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை செழிப்பாக்கியதில் பாலாறுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் பாலாற்றில் ஓடும் வெள்ளப் பெருக்கால் ஆற்றையொட்டிய நிலப்பரப்புகளின் விவசாயம் வளம் கொழித்தது. நெல்லுக்கு அடுத்தபடியாக பணப் பயிர்களான கரும்பு, வாழை உள்ளிட்டவை விவசாயிகளின் வாழ்க்கையை பெரிதாக வளர்த்தது. வேலூர் மாவட்டத்தில் ஒரு காலத்தில் விவசாயிகளுக்கு உயிர் தந்த வாழையும், கரும்பும் இன்று கை கொடுக்காமல் உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டிருந்தது என்பதற்கு உதாரணமாக இருப்பது இங்குள்ள சர்க்கரை ஆலைகளை உதாரணமாக கூறலாம். வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையால் விவசாயிகள் பெரிதும் பயனடைந்தனர். அதேபோல், சர்க்கரை ஆலைகளுக்கு இணையாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…

மேலும் படிக்க

ஆவினில் 4.5% கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால் முற்றிலும் நிறுத்தம் – வேலூர் மக்கள் அதிருப்தி | Introducing new milk packets with reduced fat content of 1%

வேலூர்: வேலூர் ஆவினில் ஒரு சதவீதம் கொழுப்பு சத்து குறைக்கப்பட்டு புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஆவின் டிலைட் பாலின் தரம் மற்றும் சுவை குறைந்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. மேலும், பொதுமக்களின் ஆதரவை பெற்ற 4.5% கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வேலூர் கூட்டுறவு பால் ஒன்றியம் (ஆவின்) நிர்வாகத்தில் தினசரி சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சுமார் 80 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக மாற்றி 600-க்கும் மேற்பட்ட முகவர்கள் வாயிலாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்களின் அன்றாட தேவைகளில் ஆவின் பால் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது. காரணம், தனியார் பால் பாக்கெட்டுகளின் விலையைவிட மிகவும் குறைவு மற்றும் தரம், சுவை நிறைந்ததாக இருந்தது.…

மேலும் படிக்க