தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு; மீண்டும் ரூ.47,000-ஐ கடந்தது | Gold price hiked Rs.800 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ( மார்ச்.2) சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.47,520-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை ஏற்றம் பெற்று வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து, ரூ.5,940-க்கு விற்பனையாகிறது. சரவனுக்கு ரூ.800 அதிகரித்து, ரூ.47,520-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.51,280-க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.77,000 -ஆக இருக்கிறது. Source link

மேலும் படிக்க

வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர் | Fish Prices Rise Due to Lack of Supply @ Vellore

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும்,…

மேலும் படிக்க

கட்டுமான பொருட்கள் விலை 60% உயர்வுள் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு | 60 Percentage Increase in the Price of Construction Materials, the Federation of Contractors Decided to go on Hunger Strike

சேலம்: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்றால் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும், என அரசு ஒப்பந்ததாரர்கள் சேலம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து துறையில் பணியாற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். பொதுப் பணித்துறை, ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் கட்டிட ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கட்டுமான பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை 40…

மேலும் படிக்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.1937.00-க்கு விற்பனை | Commercial cylinder rates raised by Rs 14 ahead of Budget speech

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றியமைக்கின்றன. அந்தவகையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று (பிப்ரவரி 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது.எனினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைப் பட்டியல் விவரம் வருமாறு: …

மேலும் படிக்க

‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ விலை மீண்டும் உயர்கிறது – பிப்.1 முதல் அமல் | ‘M Sand’, ‘B Sand’ Price Hike Again – Effective February 1st

கோவை: தமிழகத்தில் மீண்டும் ‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் உயரும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் புதிய வீடு வாங்குதல் பணிகளை மேற்கொண்டுள்ள மக்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எம் சாண்ட், பி சாண்ட் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் கேசிபி சந்திர பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிரஷர்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கட்டுமான தொழிலை…

மேலும் படிக்க

மின் கட்டண உயர்வு: விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த தொழில் துறையினர் முடிவு | Electricity Tariff Hike: Industry has Decided to Hold Another Protest Soon

கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். நிலைக் கட்டண உயர்வை திரும்ப பெறுதல், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டண முறையை நீக்குதல், மேற்கூரை சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி திட்டங்களுக்கு விதிக்கப்படும் நெட் வொர்க் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழில் துறையினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் தமிழக அரசு சார்பில் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தொழில் துறையினர் அதிருப்தி யடைந்துள்ளனர். தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் ( டேக்ட் ) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய…

மேலும் படிக்க

தங்கம் பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு | Gold Price Increased by Rs.200 Per Pound

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு நேற்று விற்பனையானது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 அதிகரித்தது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.46,760-க்கு விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.50,520-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.78 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.78 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்பட்டது. Source link

மேலும் படிக்க

செங்குன்றம் பகுதிக்கு ஆந்திர நெல் வரத்து குறைந்ததால் அரிசி விலை உயர்வு | Rice Prices Rise Due to Decrease on Andhra Paddy Supply to Red Hills Region

திருவள்ளூர்: செங்குன்றம் பகுதிக்கு ஆந்திராவில் இருந்து வரும் நெல் வரத்து குறைந்ததால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அரிசி விலை உயர்ந்துள்ளது என அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலவாயல், விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. அது மட்டுமல்லாமல், சுமார் 55 நெல் மண்டிகளும், 40 அரிசி மண்டிகளும் செங்குன்றம் பகுதியில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் அரிசி தேவையை பூர்த்தி செய்யும் செங்குன்றம் பகுதிக்கு நாள் தோறும் ஆந்திராவில் இருந்து சுமார் நூறு லாரிகளில் நெல்வரத்து இருக்கும். அது தற்போது 50 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி விலை உயர்ந்துள்ளது என, அரிசி வியாபாரிகள்…

மேலும் படிக்க

கிருஷ்ணகிரியில் 4,735 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி – விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி | Radish Cultivation on 4735 Acres on Krishnagiri – Farmers Happy with Price Hike

கிருஷ்ணகிரி / ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முள்ளங்கி மகசூல் குறைந்து விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 4,735 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். 50 நாட்களில் முள்ளங்கி அறுவடைக்குக் கிடைக்கும் என்பதால், இச்சாகுபடியை விவசாயிகள் பெரிதும் விரும்புகின்றனர். வெளி மாநிலங்களில் விற்பனை: இங்கு அறுவடையாகும் முள்ளங்கி கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திரா மாநிலம் குப்பம் மற்றும் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன. இதேபோல, விவசாயிகளிடமிருந்து வெளியூர் வியாபாரிகள் நேரடியாகக் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்குப் போக்குவரத்து உள்ளிட்ட சந்தை செலவுகள் குறை கின்றது. முள்ளங்கி மகசூல் மற்றும் சந்தை வரவேற்பு ஆகியவற்றின்…

மேலும் படிக்க

பருத்தியை அதிகளவு வாங்கும் வர்த்தகர்களால் விலை உயர வாய்ப்பு – ஜவுளித் தொழிலில் புதிய கவலை | Traders Overbuying Cotton Likely to Push Up Prices – Fresh Concern on Textile Industry

கோவை: நடப்பாண்டுக்கான பருத்தி ‘பீக் சீசன்’ தொடங்கியுள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. இருப்பினும் வர்த்தகர்களே அதிகளவு பஞ்சை வாங்கி வருவதால் எதிர்வரும் மாதங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் தொழில் முனைவோருக்கு மட்டும் விற்பனை செய்ய இந்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவுளித் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும் பருத்தி சீசன் அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் வரை இருப்பது வழக்கம். கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான பருத்தி சீசனில் மொத்தம் 336.60 லட்சம் பேல் ( ஒரு பேல் 170 கிலோ ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டு 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் 316.57 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பருத்தி…

மேலும் படிக்க