விரிவாக்க திட்டம் தாமதம்: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கோவை விமான நிலையம் | Expansion Project Delayed: Coimbatore Airport Continues to be Neglected

கோவை: கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட விமான நிலையங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு காட்டும் அக்கறை கோவை விமான நிலையத்தின் மீது காட்டப்படுவதில்லை என பயணிகள், எம்.பி உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை பீளமேடு விமான நிலையம் திகழ்கிறது. ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கும் பயனளித்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்றபோதும் இன்று வரை ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப் படுகின்றன. இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் கரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமான நிலைய வளர்ச்சிக்காக கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட விரிவாக்க திட்டம், நிலம் ஆர்ஜித பணிகளை தமிழக…

மேலும் படிக்க

கோவை விமான நிலையத்தில் சரக்கு கையாளுகை அதிகரிப்பு | Increase on Cargo Handling at Coimbatore Airport

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் வெளி நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,413.16 டன் மற்றும் உள் நாட்டு பிரிவில் 7,145.70 டன் என மொத்தம் 8,559 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கோவை பீளமேடு விமான நிலையம் கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள கோவை உள்ளிட்ட சுற்றுப் புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் சராசரியாக 23 முதல் அதிகபட்சமாக 28 விமானங்கள் வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்கப் படுகின்றன. ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் சேவை மட்டுமின்றி சரக்கு போக்குவரத்தை கையாள்வதற்கு…

மேலும் படிக்க

மத்திய, மாநில அரசுகள் மோதலால் மதுரையில் முடங்கிய சர்வதேச விமான நிலைய திட்டம்! | international airport issue in madurai

மதுரை: தென் தமிழகத்தில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களுக்கும் சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை உள்ளது. ஆனால், இந்த விமானநிலையத்தை இதுவரை சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படவில்லை. இதனால், காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த விமான நிலையம் செயல்படுகிறது. குறிப்பிட்ட உள்நாட்டு நகரங்கள், மூன்று வெளிநாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டும் ஆண்டுக்கு 12 லட்சம் பயணிகள், மதுரை விமானநிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். 24 மணி நேர விமானசேவை தொடங்கப்பட்டு முக்கிய வெளிநாடுகள், உள்நாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டால் சென்னைக்கு அடுத்து மதுரை விமானநிலையமும், அதைச் சார்ந்த தென் மாவட்டங்களும் பெரும் வளர்ச்சிபெறும். தற்போது கன்னியாகுமரியை…

மேலும் படிக்க

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை பெறும் விவகாரம்: அரசு நிபந்தனை தொடர்பாக ஆணையம் விரைவில் முடிவு | Land Acquisition for Coimbatore Airport Expansion: Commission to Decide Soon on Govt Condition

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தில், நிபந்தனைகளுடன் தமிழக அரசு ஒப்படைத்த நிலத்தை பெறுவது தொடர்பாக விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) விரைவில் முடிவு செய்யும் என, விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார். இதற்கிடையே, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் ஓடுபாதை நீளத்தை அதிகரித்தல், சர்வதேச தர அந்தஸ்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் கடந்த 2010-ல் அறிவிக்கப்பட்டது. பத்தாண்டுகளாக முடங்கி கிடந்த நில ஆர்ஜித பணிகள் திமுக அரசு பொறுப்பேற்ற பின் வேகமெடுத்தது. மொத்தம் 558.87 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் குத்தகை அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. நிலத்தை பெறுவது தொடர்பாக விமான நிலைய…

மேலும் படிக்க

600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியும் முடங்கி கிடக்கும் கோவை விமான நிலைய விரிவாக்கம் | 600 Acres Land Acquisition and Stalled Airport Expansion

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு 600 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நிபந்தனை குறித்து விமான நிலைய ஆணையகம் பரிசீலித்து வருகிறது. நிலத்தை பெற காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விரிவாக்க திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. கோவை சர்வதேச விமான நிலையத்தை ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் சராசரியாக 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த இத்திட்டம், திமுக அரசு பொறுப்பேற்ற பின்…

மேலும் படிக்க

விமான நிலைய சோதனையின்போது லேப்டாப்பை வெளியே எடுக்கச் சொல்வது ஏன் தெரியுமா?

நாம் விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தால், பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே விமானத்தில் ஏற முடியும். முதலில் விமான நிலையத்திற்குச் சென்றதும், பயணிகளின் பைகள் அனைத்தும் சோதனை செய்யப்படும். நமது பாதுகாப்பு கருதியே இதை செய்கிறார்கள் என்றாலும் நமக்கு எரிச்சலாக இருக்கும். பைகளின் உள்ளே இருக்கும் பொருட்களை வெளியே எடுங்கள் என அவர்கள் கூறும்போது பலருக்கும் கோபம் வரும். முக்கியமாக, இத்தகைய பாதுகாப்பு சோதனையின் போது, பைகளில் இருக்கும் லேப்டாப், மொபைல் போன், சார்ஜர், பவர் பேங்க் போன்ற மின்சாதனங்களை தனியாக வெளியே எடுத்து வைக்குமாறு கூறுவார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள் தெரியுமா? விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே ஸ்கேனர்கள் : விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனர்கள் எக்ஸ்ரே கதிர்களை வெளிப்படுத்தும். இந்த கதிர்கள் நமது பொருட்களில் ஊடுறுவி பைகளின் உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும்…

மேலும் படிக்க

விரைவுபடுத்தப்படுமா கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம்? | Will Coimbatore Airport Expansion Plan Be Accelerated?

கோவை: தொழில் துறை உட்பட பல்துறை வளர்ச்சியில் பங்களித்துவரும் கோவை விமான நிலையத்தில் விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள், விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் சராசரியாக 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. உள்நாட்டு பிரிவில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனேஉள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. ஓட்டு மொத்த கொங்கு நாட்டின் தொழில், கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட…

மேலும் படிக்க

ஒரு செட் இட்லி, வடை ரூ.200 – கோவை விமான நிலைய உணவகங்களில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை | selling food items at higher prices in coimbatore airport

கோவை: கோவை விமான நிலையத்தில் உணவு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 25-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் நலனுக்காக விமான நிலைய வளாகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை கடைகள் செயல்படுகின்றன. இத்தகைய உணவகங்களில் உணவுப் பொருட்கள் விலை அதிகமாக உள்ளதாகவும், அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் சிலர்: தொழில், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக பலர் விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். முன்பு செல்வந்தர்கள் மட்டுமே விமானத்தில் சென்று வந்த நிலையில் இன்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும்…

மேலும் படிக்க