வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு @ வேலூர் | Fish Prices Rise Due to Lack of Supply @ Vellore

வேலூர்: வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,000 வரையும், சிறிய வஞ்சிரம் ரூ.500 முதல் ரூ.600 வரையும், சங்கரா ரூ.450 முதல் ரூ.500 வரையும், நண்டு ரூ.400 முதல் ரூ.500 வரையும், இறால் ரூ.400 முதல் ரூ.500 வரையும், கடல் வவ்வா ரூ.700 முதல் ரூ.650 வரையும்,…

மேலும் படிக்க

சீசன் முடிவடைந்து வரத்து குறைந்ததால் பழநியில் கொய்யா விலை உயர்வு | Guava Prices Rise on Palani Due to End of Season and Reduced Supply

பழநி: பழநி ஆயக்குடியில் கொய்யா வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. 20 கிலோ கொய்யா ரூ.1,200-க்கு விற்பனையாகிறது. பழநி, ஆயக்குடி, சட்டப்பாறை, அமரபூண்டி, சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 டன் வரை கொய்யா விற்பனையாகும். கடந்த மாதம் கொய்யா சீசன் நிறைவடைந்ததால் அதன் வரத்தும் குறைய தொடங்கியது. தற்போது வரத்து மேலும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு பெட்டி (20 கிலோ) ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. தற்போது ஒரு பெட்டி ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகிறது. இது குறித்து கொய்யா விவசாயிகள் கூறியதாவது: ஒரு பெட்டி ( 20 கிலோ ) கொய்யா ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றால் விவசாயிகளுக்கு விலை கட்டுப்படியாகும்.…

மேலும் படிக்க