ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தி இலக்கை அடைய முடியும்: மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நம்பிக்கை | Electronics manufacturing target of Rs 25 lakh crore can be achieved minister

புதுடெல்லி: 30,000 கோடி டாலர் அதாவது ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு எட்டக்கூடியதே என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உற்பத்தி துறையை ஊக்குவிப் பதற்கான மத்திய அரசின் செயல் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 30,000 கோடி டாலர் மதிப்புக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு வரும் ஆண்டுகளில் எளிதில் எட்டப்படும். இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலமாக 10,000 கோடி டாலர் வருமானமாக ஈட்டப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரயில்வே துறையில் விரிவாக்க பணிகள் மற்றும் நவீனமாக்கல் நடவடிக்கைகளும்…

மேலும் படிக்க