உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி | India will emerge as global semiconductor manufacturing hub PM Modi assured

புதுடெல்லி: உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கான அனுமதியை பிப்ரவரி 29-ல் மத்திய அமைச்சரவை வழங்கிய நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் நேற்று மேலும் கூறியதாவது: இந்திய செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கை அடைவதற்கான திட்டத்தின் கீழ் 3 ஆலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. இது, தொழில்நுட்பத்தில் இந்தியா சுயசார்பை நோக்கி செல்வதற்கான உறுதியான பாதையை வகுக்கும். அத்துடன், செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்க வகை செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். குஜராத்தில் தோலேரா, அசாமின் மோரிகான் மற்றும் குஜராத்தில் சனந்த் ஆகிய மூன்று இடங்களில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை நிறுவப்படும் என்று மத்திய மின்னணு மற்றும்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி | Launch of UPI today in Sri Lanka Mauritius PM Modi participates virtual video

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கை அதிபர்ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்ளவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈஃபிள் டவரில் யுபிஐ: கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள்…

மேலும் படிக்க

2024-25 இடைக்கால பட்ஜெட்: பிரதமர் மோடியின் அடுத்த 25 ஆண்டுகால இலக்கை நோக்கிய பயணம் | interim Budget for is a journey towards next 25 year goal of Prime Minister Modi

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார். இது அவர் நிதி அமைச்சாராக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட். நிர்வாகம், மேம்பாடு, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல விதங்களில் வலுவான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை நிர்மலா சீதாரமன் தன் பட்ஜெட் உரையில் சுட்டிக் காட்டினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சர்வதேச நாடுகளுடனான உறவு என பல தளங்களில் கடந்த 10 ஆண்டில் இந்தியா மேம்பாடு அடைந்துள்ளது. இந்நிலையில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்குக்கான பாதை…

மேலும் படிக்க

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடம்: சூரத் வைர சந்தையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி | PM Modi inaugurates World s Largest Office Building Surat Diamond Market

சூரத்: குஜராத் மாநிலத்தில் சூரத் வைர சந்தை கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகத்தை பின்னுக்குத் தள்ளி உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக உருவெடுத்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது பரபரப்பான நேரத்தில் 600 சர்வதேச பயணிகள் மற்றும் 1,200 உள்நாட்டு பயணிகளை கையாளும் திறன் கொண்டது. ஆண்டுக்கு 55 லட்சம் பயணிகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இதையடுத்து, உலகின் மிகப்பெரிய அலுவலக கட்டிடமான சூரத் வைரச் சந்தையை (எஸ்.டி.பி.) பிரதமர் மோடி திறந்து வைத்தார். சூரத் நகருக்கு அருகே காஜோட் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 67 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. அதிநவீன வசதிகளைக்…

மேலும் படிக்க

இந்தியாவின் முதலீட்டு சூழல் குறித்து நம்பிக்கை தெரிவித்த அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு | pm Modi praises American based Indian businessmen confidence investment in India

புதுடெல்லி: இந்தியாவின் முதலீட்டு சூழல் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் பாலாஜி எஸ்.ஸ்ரீநிவாசனுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிலிக்கான்பள்ளத் தாக்கின் முக்கிய முதலீட்டாளர் மற்றும் தொழில்முனைவோராக திகழ்பவர் ஸ்ரீநிவாசன். இவர்முன்பு கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் காயின்பேஸின் தலைமைதொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது இவர் பலநிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றின் இணை நிறுவனராக உள்ளார். இவர் அண்மையில், “இந்தியா வின் வளர்ச்சி திறனை உலகம் இன்று உற்று நோக்குகிறது. வலிமையான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியா உலகுக்கு நல்லது’’ என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து உலக முதலீட்டாளர்களிடையே இந்திய சந்தையின் முதலீடு, வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைந்தது. இந்த நிலையில், ஸ்ரீநிவாசனின் இந்த கருத்துக்கு பிரதமர் மோடி பாரட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் எக்ஸ்வலைதளத்தில், “அமெரிக்கதொழில் முனைவோரின் இந்தகருத்து…

மேலும் படிக்க

கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.50,000 கோடி அந்நிய முதலீடு: பிரதமர் மோடி | 50000 crore foreign investment in food processing sector in last 9 years PM Modi

புதுடெல்லி: உலகின் உணவு கூடமாக இந்தியாவை வெளிப்படுத்த ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ என்ற பெயரில் முதல் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இந்நிலையில் இந்தாண்டு சிறுதானியங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு 2-வது ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று முதல் 5-ம் தேதி வரைநடத்தப்படுகிறது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களின் சிஇஓ.க்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் இந்திய சமையல் கலைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்திய பாரம்பரிய சமையல் வகைகளை செய்து காட்டுகின்றனர். அரசு அமைப்புகள், தொழில் துறையினர், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் இதரபிரிவினர், வேளாண்…

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் இருந்து பிரிக்கக் கோரி பிரதமருக்கு வீடியோ கேமிங் நிறுவனங்கள் கடிதம் | Video-gaming firms write to PMO seeking distinction from real-money gaming industry

புதுடெல்லி: பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் இருந்து வீடியோ கேமிங்கை பிரிக்க வேண்டும் என்று கோரி, பிரதமருக்கு வீடியோ கேமிங் நிறுவனங்கள் கடிதம் எழுதி உள்ளன. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் 45 வீடியோ கேமிங் நிறுவனங்கள் எழுதி உள்ளன. இந்தக் கடிதம் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “ஆன்லைன் கேம்ஸ் என்பது மிகவும் விரிவான அர்த்தம் நிறைந்த ஒரு வார்த்தை. பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுக்களும், வீடியோ கேம்ஸ்களும் ஆன்லைனில் விளையாடப்படுகின்றன. ஆனால், இரண்டும் ஒன்றல்ல. ஆனால், இதில் மிகப் பெரிய குழப்பம் பரவலாக இருக்கிறது. இரண்டும் ஆன்லைன் கேமிங் என்றே அழைக்கப்படுகின்றன. பணத்தை வைத்து ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுக்களை வழங்கும் நிறுவனங்கள் ஸ்போர்ட்ஸ், போக்கர், ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை…

மேலும் படிக்க

ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் திறமையான தொழிலாளரை வழங்கும் நாடு இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் | India is country that provides skilled labor to entire world PM Modi is proud

புதுடெல்லி: ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா நாடு முழுவதும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஜி-20 அமைப்பின் தொழிலாளர் நலத்துறை, வேலைவாய்ப்பு துறை அமைச்சர்களின் மாநாடு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக பேசியதாவது: தற்போது 4-வது தொழிற்புரட்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. புதிய தொழில் நுட்பங்களால் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மாநாடு நடைபெறும் இந்தூரில் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பணியாற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். திறன், மறு திறன், உயர் திறன் என்ற வகையில்…

மேலும் படிக்க

திருப்பூர் பின்னலாடை தொழிலில் நிலவும் பிரச்சினைகள் – பிரதமர், முதல்வருக்கு ‘டீமா’ கடிதம் | Issues on Tiruppur Knitwear Industry – TEAMA Letter to PM, CM

திருப்பூர்: பின்னலாடைத் தொழிலில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் (டீமா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் நேற்று அனுப்பிய கடிதம்: திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மூலமாக ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம், உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாக ரூ.30 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.65 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி நடைபெறுகிறது. இந்தத் தொழில், திருப்பூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. திருப்பூரின் முதுகெலும்பாக உள்ள பின்னலாடைத் தொழில், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பிரச்சினை எதிர்காலத்திலும் தொடர்ந்தால்,…

மேலும் படிக்க

கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்கள், 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்க ஒப்பந்தம்: பிரதமரின் பிரான்ஸ் பயணத்தில் கையெழுத்தாகிறது

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 13, 14 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் 2 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். 14-ம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற உள்ள பிரான்ஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவின் 25-ம் தேதி, தேசிய தின அணிவகுப்பில் அந்நாட்டு படையினருடன் இந்தியப் படையினரும் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

மேலும் படிக்க