மின்சார வாகனத் துறையில் தொழில்முனைவோர் கவனம் செலுத்த பிரதமர் மோடி அறிவுரை @ மதுரை | The role of MSME is important for the economic development of the country: PM Modi

மதுரை: “நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு சிறு, குறு தொழிற்சாலைகள் இன்றியமையாதது” என மதுரை தொழில்முனைவோர் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மதுரை டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் சிறு, குறு தொழில்முனைவோர் (ஆட்டோமேட்டிவ் பிரிவு) மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியது: “சிறு, குறு தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இக்கள்) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழில், பொருளாதாரத்தின் ஒரு சக்தியாக உள்ளது. உலகளாவிய எம்எஸ்எம்இ சங்கிலியில் இந்தியா வலுவான இடத்தை பெற்றுள்ளது. கரோனா காலத்தில் இந்திய எம்எஸ்எம்இ-க்களின் திறன் முக்கியமானது. எம்எஸ்எம்இயின் எதிர்காலத்தை நாட்டின் எதிர்காலமாக பார்க்கிறோம். கரோனா காலத்தில் லட்சக்கணக்கானோரின் வேலைகளை காப்பாற்றியது எம்எஸ்எம்இக்கள் தான். ஒவ்வொரு துறைகளிலும் எம்எஸ்எம்இ-க்களுக்கு குறைந்த விலையில் கடன்கள், செயல்பாட்டு மூலதனத்துக்கான வசதிகள் அளிக்கப்படுகிறது. நாட்டின் சிறு தொழில்…

மேலும் படிக்க

இரு தரப்பு வர்த்தகத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்க இந்தியா – கிரீஸ் முடிவு: பிரதமர் மோடி | India, Greece have agreed to take bilateral trade to two times by year 2030: PM Modi

புதுடெல்லி: இந்தியா – கிரீஸ் இடையேயான வர்த்தகத்தை 2030ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன், அந்நாட்டு தூதுக்குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, “கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசையும் அவரது தூதுக்குழுவையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு நான் கிரீஸ் சென்றேன். அதனைத் தொடர்ந்து கிரீஸ் பிரதமர் இந்தியா வந்திருப்பது, இரு நாட்டு உறவின் வலிமைக்கு அடையாளம். 16 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் பிரதமர் இந்தியா வந்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடனான பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இருநாட்டு வர்த்தகத்தை வரும் 2030க்குள் இரட்டிப்பாக்கத் தேவையான…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | PM Modi on launch of UPI services in Sri Lanka, Mauritius

புதுடெல்லி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், காணொலி காட்சி இவ்விரு நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய பெருங்கடலில் உள்ள மூன்று நாடுகளுக்கும் (இந்தியா, இலங்கை, மொரிஷியஸ்) இந்த நாள் ஒரு சிறப்பான நாள். நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவு நவீன டிஜிட்டல் முறையில்…

மேலும் படிக்க

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் – திருப்பூர் தொழில் துறையினர் கருத்து | Central Govt’s Interim Budget – Opinion of Tiruppur Industry

திருப்பூர்: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இது தொடர்பாக திருப்பூர் தொழில் துறையினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஏ.சக்திவேல் ( பியோ தலைவர் ): மத்திய பட்ஜெட் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. வலுவான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கில் உள்ளதால் வரவேற்கிறேன். ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதிக்கான மாநில, மத்திய வரிகள் திரும்பப்பெறும் திட்டத்தைமார்ச் 31-ம் தேதி 2026 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஏ.சக்திவேல் தொழில் நுட்ப மேம்படுத்துதல் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இறக்குமதி வரிகள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது ஒருவித சமநிலையோடு கூடிய திருப்தியை அளிக்கிறது. கே.எம்.சுப்பிரமணியன் …

மேலும் படிக்க

2 கோடி வீடுகள் முதல் ‘வரி வழக்கு’ ரத்து வரை: இடைக்கால பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள் என்னென்ன? | Central Interim Budget 2024 – What are the new announcements?

Last Updated : 01 Feb, 2024 03:17 PM Published : 01 Feb 2024 03:17 PM Last Updated : 01 Feb 2024 03:17 PM புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகள்: அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம். நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும். கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.…

மேலும் படிக்க

நிலக்கரி – எரிவாயு திட்டத்துக்கு ரூ.8,500 கோடி ஊக்கத்தொகை – தனியாருக்கும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் | Cabinet approves the scheme for promotion of Coal Gasification Projects of PSUs and Private Sector 

புதுடெல்லி: அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நிலக்கரி, பழுப்பு நிலக்கரியை எரிவாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டத்துக்கு ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மூன்று பிரிவுகளின் கீழ் ஊக்கத்தொகை அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கான அமைச்சரவை ஒப்புதல் விவரம்: நிலக்கரியை எரிவாயுவாக்கும் திட்டங்களுக்கு மூன்று வகைகளின் கீழ் மொத்தம் ரூ.8,500 கோடி நிதியுதவி வழங்கப்படும். முதல் பிரிவில், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ. 4,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3 திட்டங்களுக்கு ஒட்டு மொத்த மானியமாக ரூ. 1,350 கோடி அல்லது மூலதனத்தில் 15 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும். இரண்டாம் வகைப் பிரிவில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்களுக்கு ரூ.3,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

மேலும் படிக்க

அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Union Cabinet approves conversion of newly opened Ayodhya Airport into International Airport

புதுடெல்லி: அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்திதாம் என்று அறிவிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இந்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி டிச.30-ம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தை சர்வேதேச விமானநிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும்…

மேலும் படிக்க

“உத்தராகண்ட் 10 ஆண்டுகளில் தொழில் மாநிலமாகும்” – டேராடூன் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை | PM Modi inaugurates Global Investors Meet at Uttarakhand

புதுடெல்லி: உத்தராகண்டில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று டேராடூனில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் உத்தராகண்ட் மிகப் பெரிய தொழில் மாநிலமாகும் என நம்பிக்கை தெரிவித்தார். உத்தராகண்ட் தலைநகர் டேராடூனில் சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு இன்று தொடங்கியது. உத்தராகண்டின் ஆளுநர் குர்மீத் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் ராம்தேவ் மற்றும் சர்வதேச தொழில் அதிபர்கள் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வைத்து உரையாற்றினார். அவர் பேசியது: “உத்தராகண்ட்டில் சிறந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. ரயில்வே கட்டமைப்பு விரிவாக்கப்படுகிறது. இந்த மேம்பாடுகள் வழியாக, தொழில் துறையினரை ஈர்க்கும் மாநிலமாக உத்தராகண்ட் உருவெடுத்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் உத்தராகண்ட்…

மேலும் படிக்க

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி | pm Modi discuss Sundar pichai expanding electronics manufacturing eco system

புதுடெல்லி: இந்திய மின்னணுவியல் உற்பத்தி சூழல் விரிவுப் பணியில் கூகுளின் பங்கு மற்றும் அது சார்ந்த திட்டம் குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். இருவரும் விர்ச்சுவல் முறையில் காணொளி மூலம் கலந்துரையாடினர். இதில் ஹெச்பி உடன் இணைந்து இந்தியாவில் குரோம்புக் அசெம்பிள் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டு வருவதற்காக தனது பாராட்டை பிரதமர் மோடி தெரிவித்தார். காந்திநகரில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT) கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் நிறுவும் கூகுளின் திட்டத்தையும் பிரதமர் மோடி வரவேற்றார். மேலும், வரும் டிசம்பர் மாதம் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா நடத்தும் ஏஐ உச்சி மாநாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் வகையில் கூகுளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில் ஜிபே மூலம் யுபிஐ சார்ந்து இந்தியாவில்…

மேலும் படிக்க

தமிழகத்தில் இருந்து இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் – பயன்களை பட்டியலிட்ட வெளியுறவு அமைச்சர் | India-Sri Lanka shipping is the biggest move: External Affairs Minister

புதுடெல்லி: “தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கி இருப்பது, மக்களிடையே தொடர்புகளை வளர்ப்பதற்கான மிகப் பெரிய நடவடிக்கை” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாகை – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து குறித்து பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்த கப்பல் போக்குவரத்து இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மக்களை இணைப்பதற்கான மிகப் பெரிய நடவடிக்கையாகும். இதனை இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அங்கீகரித்துள்ளனர். எதிர்காலத்தில் நாங்கள் குழாய் இணைப்பு, பொருளாதார வழித்தடம் போன்றவற்றை ஏற்படுத்தப் பார்க்கிறோம். இலங்கையில் உள்ள அனைவரும் ஒரே கண்ணியத்துடன் சமமான உரிமைகளுடன் வாழ்வதற்கு ஆதரவு அளிக்கப்படும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கை, அண்டை நாடுகளுடன் உறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில்…

மேலும் படிக்க