உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி | India will emerge as global semiconductor manufacturing hub PM Modi assured

புதுடெல்லி: உலகளவில் செமிகண்டக்டர் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மூன்று செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதற்கான அனுமதியை பிப்ரவரி 29-ல் மத்திய அமைச்சரவை வழங்கிய நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் நேற்று மேலும் கூறியதாவது: இந்திய செமிகண்டக்டர் தயாரிப்பு இலக்கை அடைவதற்கான திட்டத்தின் கீழ் 3 ஆலைகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்வழங்கியது. இது, தொழில்நுட்பத்தில் இந்தியா சுயசார்பை நோக்கி செல்வதற்கான உறுதியான பாதையை வகுக்கும். அத்துடன், செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்க வகை செய்யும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். குஜராத்தில் தோலேரா, அசாமின் மோரிகான் மற்றும் குஜராத்தில் சனந்த் ஆகிய மூன்று இடங்களில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலை நிறுவப்படும் என்று மத்திய மின்னணு மற்றும்…

மேலும் படிக்க

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ இன்று அறிமுகம்: காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி | Launch of UPI today in Sri Lanka Mauritius PM Modi participates virtual video

புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரிஷியஸ் ஆகிய இருநாடுகளில் இன்று யுபிஐ சேவை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இந்நிகழ்வில் இலங்கை அதிபர்ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொள்ளவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதன்படி, இனி இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். அதேபோல், அவ்விரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளும் யுபிஐ சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். யுபிஐ தவிர்த்து, ரூபே அட்டை சேவையும் மொரிஷியஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈஃபிள் டவரில் யுபிஐ: கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஃபிள்…

மேலும் படிக்க

2024-25 இடைக்கால பட்ஜெட்: பிரதமர் மோடியின் அடுத்த 25 ஆண்டுகால இலக்கை நோக்கிய பயணம் | interim Budget for is a journey towards next 25 year goal of Prime Minister Modi

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார். இது அவர் நிதி அமைச்சாராக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட். நிர்வாகம், மேம்பாடு, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல விதங்களில் வலுவான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை நிர்மலா சீதாரமன் தன் பட்ஜெட் உரையில் சுட்டிக் காட்டினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சர்வதேச நாடுகளுடனான உறவு என பல தளங்களில் கடந்த 10 ஆண்டில் இந்தியா மேம்பாடு அடைந்துள்ளது. இந்நிலையில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்குக்கான பாதை…

மேலும் படிக்க

கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.50,000 கோடி அந்நிய முதலீடு: பிரதமர் மோடி | 50000 crore foreign investment in food processing sector in last 9 years PM Modi

புதுடெல்லி: உலகின் உணவு கூடமாக இந்தியாவை வெளிப்படுத்த ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ என்ற பெயரில் முதல் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. இந்நிலையில் இந்தாண்டு சிறுதானியங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு 2-வது ‘வோர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று முதல் 5-ம் தேதி வரைநடத்தப்படுகிறது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களின் சிஇஓ.க்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் இந்திய சமையல் கலைஞர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்திய பாரம்பரிய சமையல் வகைகளை செய்து காட்டுகின்றனர். அரசு அமைப்புகள், தொழில் துறையினர், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் இதரபிரிவினர், வேளாண்…

மேலும் படிக்க

ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் திறமையான தொழிலாளரை வழங்கும் நாடு இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் | India is country that provides skilled labor to entire world PM Modi is proud

புதுடெல்லி: ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா நாடு முழுவதும் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஜி-20 அமைப்பின் தொழிலாளர் நலத்துறை, வேலைவாய்ப்பு துறை அமைச்சர்களின் மாநாடு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி காணொளி வாயிலாக பேசியதாவது: தற்போது 4-வது தொழிற்புரட்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த காலத்தில் உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. புதிய தொழில் நுட்பங்களால் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. மாநாடு நடைபெறும் இந்தூரில் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பணியாற்றும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும். திறன், மறு திறன், உயர் திறன் என்ற வகையில்…

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் இந்திய பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்துமா? | Will Prime Minister Narendra Modi’s US visit impact the Indian economy

கரோனா பெருந்தொற்று, அதன்பிறகு உக்ரைன் – ரஷ்யா போர் ஆகிய முக்கிய காரணங்களால் பெரும்பாலான உலக நாடுகள் பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா, டாலர் அச்சடித்து மக்களுக்கு கரோனா நிவாரணமாக வழங்கியது. இதன் காரணமாக 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார இறுக்கம் நீங்கவில்லை. இந்த சூழ்நிலையில், இந்தியா ஒரு பிரகாசமான பொருளாதார சூழ்நிலையில் உள்ளது. காரணம், நமது நாட்டில், 2022-23 நிதியாண்டுக்கான வளர்ச்சி வீதம், 7.2 சதவீதமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர, நமது நாட்டில், இளைய தலைமுறை எண்ணிக்கை மற்றும் திறன்மிக்க மக்கள் வளம் அதிகம் உள்ளது. மேலும், நமது உற்பத்தித் துறையில் புள்ளிவிவரங்கள் வளர்ச்சிக் கணக்கைக் கொடுக்கிறது. நாட்டின் வர்த்தக நிலவரத்தின் கண்ணாடியாக திகழும் ஜிஎஸ்டி வசூல் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து ஏழுமுகமாக…

மேலும் படிக்க