விரிவாக்க திட்டம் தாமதம்: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கோவை விமான நிலையம் | Expansion Project Delayed: Coimbatore Airport Continues to be Neglected

கோவை: கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட விமான நிலையங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு காட்டும் அக்கறை கோவை விமான நிலையத்தின் மீது காட்டப்படுவதில்லை என பயணிகள், எம்.பி உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய விமான நிலையமாக கோவை பீளமேடு விமான நிலையம் திகழ்கிறது. ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கும் பயனளித்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்றபோதும் இன்று வரை ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளி நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப் படுகின்றன. இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த விமானம் கரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விமான நிலைய வளர்ச்சிக்காக கடந்த 2010-ம் ஆண்டு 627 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட விரிவாக்க திட்டம், நிலம் ஆர்ஜித பணிகளை தமிழக…

மேலும் படிக்க

தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி – கூடுதல் செலவால் உற்பத்தியாளர்கள் தவிப்பு | Delayed Salt Production on Tuticorin – Producers Suffer Due to Extra Cost

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்த உப்பளங்களை சீரமைத்து, உப்பு உற்பத்திக்கு தயார்படுத்தும் பணிகளை உப்பள உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர். சீரமைக்க பல மடங்கு கூடுதல் செலவாகும் என்றும் உப்பு உற்பத்தியும் மூன்று மாதங்கள் வரை தாமதமாகும் எனவும் உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர்…

மேலும் படிக்க

தாமதமாகும் விமானங்களை ரத்து செய்யலாம்: விமான போக்குவரத்து இயக்குநரக புதிய விதிகள் சொல்வது என்ன? | Can delayed flights be cancelled new rules of the DGCA 

புதுடெல்லி: குளிர்காலத்தில் வடமாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், இந்தக் குழப்பமான சூழ்நிலையை கையாள்வதற்கு புதிய விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ளது. பயணம் மறுக்கப்படுதல், விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் போன்ற காரணங்களால் விமான நிறுவனங்களால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து கூறும் DGCA நிலையான இயக்க விதிகள் (SOP) குறிப்பிட்ட காரணங்களுக்களுக்காகவோ அல்லது மூன்று மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகும் விமானங்களை ரத்து செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் SOP-யை உடனடியாக கடைபிடிக்க வேண்டும். என்றாலும் விமான நிறுவனங்களின் கட்டுப்பாட்டையும் மீறிய அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும்போது இந்த விதிகள் பொருந்தாது என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நிலையான இயக்க விதிகள்: விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களின் எவ்வளவு நேரம் தாமதமாகும் என்ற சரியான தகவல்களை தெரிவிக்க…

மேலும் படிக்க