ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தி இலக்கை அடைய முடியும்: மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நம்பிக்கை | Electronics manufacturing target of Rs 25 lakh crore can be achieved minister

புதுடெல்லி: 30,000 கோடி டாலர் அதாவது ரூ.25 லட்சம் கோடிக்கு மின்னணு சாதன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு எட்டக்கூடியதே என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உற்பத்தி துறையை ஊக்குவிப் பதற்கான மத்திய அரசின் செயல் திட்டங்களுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 30,000 கோடி டாலர் மதிப்புக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு வரும் ஆண்டுகளில் எளிதில் எட்டப்படும். இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலமாக 10,000 கோடி டாலர் வருமானமாக ஈட்டப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரயில்வே துறையில் விரிவாக்க பணிகள் மற்றும் நவீனமாக்கல் நடவடிக்கைகளும்…

மேலும் படிக்க

2024-ல் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்த இலக்கு: சென்னை ஐஐடி | IIT Madras targets incubating 100 start-ups in 2024

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், 2024-ம் ஆண்டில் குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட் அப்களுக்கு தொழில் ஊக்குவிப்பு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதன் இயக்குநர் பேராசிரியர் காமகோடி தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டில் சென்னை ஐஐடியின் இலக்குகள் என்னென்ன என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “2023-ம் ஆண்டில் சென்னை ஐஐடி-யால் பல்வேறு லட்சியங்களை அடைய முடிந்தது. கடந்த ஆண்டில் ஐஐடி சான்சிபார் வளாகம் உள்பட பல்வேறு முக்கிய திட்டப் பணிகளை நாங்கள் மேற்கொண்டோம். முதன்முறையாக வெளிநாட்டில் நிறுவப்பட்ட ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தொடங்கப்பட்டிருப்பதுடன், மேலும் இதே முறையில் பல்வேறு அம்சங்களை மேற்கொள்ளவிருக்கிறோம். பல்துறை அறிவியலைக் கற்பிக்க புதிய பள்ளி ஒன்றையும் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறோம். தற்போது நாம் பல்துறைக் கல்வியை நோக்கி நகர்ந்து செல்வதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நடப்பு…

மேலும் படிக்க