குதிரைவாலி சாகுபடி

barnyard millet

புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது. ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் ‘ரெசிபி’யாக மாறிவருவது, ஒரு வரலாற்று முரண்! எளிய மக்களுக்கும் கிடைக்கும் உணவாக இவற்றை மாற்றினால், உண்மையான பயன் கிடைக்கும். பற்றாக்குறை காலப் பயிர்பொதுவாக குதிரைவாலி(barnyard millet) பயிரானது வறட்சி, மண் உவர்ப்பு ஆகியவற்றைத் தாங்கி வளரக்கூடிய…

மேலும் படிக்க

கம்பு பயிர் சாகுபடி

pearl millet

சிறுதானிய பயிர்களில் சத்து மிகுந்த கம்பை பயிரிட்டு விவசாயிகள் பெருமளவில் லாபம் ஈட்டலாம். சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும். கம்பு குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும் செழித்து வளரக் கூடியது. உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது. கம்பு தானியமாக மட்டுமல்லாமல் சிறந்த கால்நடைத் தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் வரும் சத்துக் குறைபாட்டைப் போக்க கம்பு மிகச் சிறந்த தானியமாகும். கம்பு ரகங்கள் பருவம் விதையளவு ஒரு எக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைப்பு முறையைப் பொறுத்து விதை அளவு மாறுபடும். சால் விதைப்பு பரவலாக நடைமுறையில் உள்ளது. விதை நேர்த்தி ஒரு…

மேலும் படிக்க