காய்க்காத நெல்லிக்கு நம்மாழ்வார் சொல்லிய தீர்வு!

Amla

‘‘எங்கள் தோட்டத்தில் 5 வருஷம் ஆன நெல்லி மரங்கள் உள்ளன. ஆனால், இவை இன்னும் காய்க்கவில்லை. என்ன காரணம், காய்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?’’ – டாக்டர் டி.அருள்மொழிவர்மன், முசிறி. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மனோகரன் பதில் சொல்கிறார். ‘‘உங்களைப் போலவே என் தோட்டத் திலிருந்த நெல்லி மரங்களும் காய்க்காமலிருந்தன. 2012-ம் வருஷம் ஜூன் மாசம் 3-ம் தேதி என் வாழ்கையில் மறக்க முடியாத நாள். என்னுடைய நீண்ட நாள் வேண்டு கோளுக்கு இணங்க பண்ணைக்கு வந்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா. என் ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அங்குலம் அங்குலமாக நடந்து நின்று நிதானித்துச் சுற்றிப் பார்த்தார். ‘நெல்லிக்காய் ஆயுளைக் கூட்டும் அற்புதக்கனி. மலைப்பிரதேசத்தில் நன்றாக வளரக்கூடிய மரம். இங்கு அந்த அளவுக்குச் சிறப்பாக வளராது. இருந்தாலும் நான் சொல்லுற விஷயத்தை…

மேலும் படிக்க

நுண்ணூட்டக் கலவை இயற்கையா, செயற்கையா?

நுண்ணூட்டக் கலவை

‘‘இயற்கை வழியில் விவசாயம் செய்து வருகிறோம். தென்னை மரங்களுக்குத் தனியாக நுண்ணூட்டச்சத்து கொடுத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று வேளாண்மைத் துறையில் சொன்னார்கள். அதன்படி நுண்ணூட்டக் கலவையை வாங்கித் தென்னை மரங்களுக்கு வைத்தோம். ஆனால், அது இயற்கையான பொருள் அல்ல. ரசாயன கலவை என்று ஒரு நண்பர் சொல்கிறார். இது உண்மையா? இயற்கை முறையில் நுண்ணூட்டச் சத்துகளைக் கொடுப்பது எப்படி?’’ வெங்கடேச பெருமாள், சோழவரம். தஞ்சாவூரைச் சேர்ந்த மூத்த வேளாண் விஞ்ஞானி முனைவர் அ.உதயகுமார் பதில் சொல்கிறார். “வேளாண்மைத்துறை மூலமும் உரக்கடைகள் மூலமும் விற்பனை செய்யப்படும் நுண்ணூட்டக் கலவை (Mineral Mixture) ரசாயனப் பொருள்தான். இயற்கை வழி பண்ணையில் இதைப் பயன்படுத்த வேண்டாம். இதற்கு மாற்றாக இயற்கை இடுபொருள்கள் நிறைய உள்ளன. சத்துக்குறைபாட்டில் உள்ள மனிதனுக்கு வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தும் உடல் நலனைக் காக்கலாம். சத்து நிறைந்த…

மேலும் படிக்க

வறட்சியில் வளம் தரும் மரங்கள்

Trees For Dryland

அகர் மரத்தின் மையப்பகுதியில் சந்தன மரத்தில் இருப்பதுபோல வாசனை மிகுந்த வைரப்பகுதி உருவாகும். இந்த வைரப்பகுதியை அரைத்து அகர் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரங்களை தென்னை, பாக்கு, மா, மலைவேம்பு, சந்தனம், சவுக்கு மற்றும் பல வகையான தோப்புகளிலும் கலந்து பயிர் செய்யலாம். பத்து ஆண்டுகள் வளர்ந்த ஒரு அகர் மரம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம்.சந்தன மரங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளர்க்க சுதந்திரம் உண்டு. அறுவடை செய்திட வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். வறண்ட பாறை நிலங்களில் கூட வளமுடன் வளர்ந்து பலகோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் தெய்வீக மரமாகும். வீடுகள், தோட்டங்கள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் அதிக பராமரிப்பு இன்றி வளர்க்கலாம். வளர்க்க அனுமதி பெற வேண்டியது இல்லை. அச்ச மின்றி வளர்க்கலாம். ஏக்கருக்கு 450 மரங்கள் வளர்க்கலாம். பதினைந்து ஆண்டுகளில்…

மேலும் படிக்க

கோ. நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை கட்டுரை

இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல  லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் .கரூர் வானகத்தின் வாயிலாக பலருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தவர் திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் . இவர் இயற்கை விவசாயம் பற்றி அதிகம் களம் இறங்கி  கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டு என்ற ஒரு வெளிநாட்டு இயற்கை விவசாயி அவர்களிடம் தான் . நம்மாழ்வார் அவர்களுக்கு உலக விவசாயம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிகம் பயன் படுத்தும் விவசாய முறைகள்மற்றும் அது பற்றிய அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. பாரம்பரிய விதைகள் மேலான காதல்: இந்திய பாரம்பரியமான அனைத்து விதை ரகங்களை மிக அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். பாரம்பரிய விதிகம்…

மேலும் படிக்க