ஒரு முறை நடவு… 30 ஆண்டுகள் அறுவடை! – ஒரு ஏக்கரில் 90 டன் மகசூல்… ரூ.5,60,000 வருமானம்…

Sugarcane

இனிக்கும் இயற்கை கரும்பு! தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நெல், எலுமிச்சை, கரும்பு… எனப் பல பயிர்களிலும் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன் பாடில்லாமல் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மகசூலை எடுத்துள்ளார். பசுந்தாள் உரப் பயிர்களைத் தொடர்ந்து மண்ணில் சாகுபடி செய்து, மட்க வைப்பதுதான் இவர் பின்பற்றும் நுட்பம். மொத்தம் 28 ஏக்கரில் கரும்புச் சாகுபடி செய்து வருகிறார். இதில், 18 ஏக்கரில் 30-வது மறுதாம்பும், 10 ஏக்கரில் 2-வது மறுதாம்பும் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் 18 ஏக்கரில் மறுதாம்பு கரும்பு அறுவடை சமீபத்தில் நடந்தது. இயற்கை முறையிலான கரும்பு (கோ-86032) மறுதாம்புவின் 30-வது அறுவடையைப் பார்வையிட்டு, மகசூலை ஆய்வு செய்திட தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவுப்படி, தென்காசி…

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க முத்தான யோசனைகள்!

Organic Farming Tips

விவசாயத் துறையில் தமிழக அரசு பல புதிய மாற்றங்களை உருவாக்கும் சூழல் தெரிகிறது. குறிப்பாக, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பது முதலமைச்சரின் பேச்சு, அறிக்கைகளில் தெரிகிறது. ‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்று பசுமை விகடனின் தாரக மந்திரத்தை முதலமைச்சர் உச்சரிக்கிறார். இது வரவேற்புக்குரிய செயல். விவசாயத்துக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசு, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகள் நலன்களைக் கவனத்தில் கொள்ளவும் சில ஆலோசனை களை முன்வைக்கிறேன். இயற்கை விவசாயத்தைத் தீவிரமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டுமென்றால், அதற்காகத் தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கெனத் தனியான இயற்கை விவசாயக் கொள்கை ஒன்றையும் உருவாக்க வேண்டும். விவசாயி களின் அறிவு, தமிழகத்தின் விவசாயப் பண்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும். வேளாண் துறையில் உள்ள அலுவலர்களுக்கு…

மேலும் படிக்க

மூலிகை பயிர்கள்

Aloe Vera Benefits

அவுரி மூலிகை செடி சாகுபடி அவுரி “அவுரி’ என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் வரை சத்தமில்லாமல் வருவாய் ஈட்டலாம். தூத்துக்குடி சென்னா என்றழைக்கப்படும் இந்த மூலிகைச் செடிகள் 90 நாட்கள் பயிராகும். ஆண்டுதோறும் பருவ மழையை ஒட்டி நவம்பர் இறுதியில் விதைள் விதைக்கப்படுவது வழக்கம். எக்டேருக்கு 20 கிலோ விதை விதைத்தால் போதுமானது. களை எடுப்பு மற்றும் உரம் போட தேவையில்லை. அதுவாகவே வளர்ந்து பயன்தரக் கூடியது. முறைகள் செடிகள் முழுவதும் மஞ்சள் நிறத்தில் பூ பூத்து, காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும். மல்லிகைக்கு ஊடு பயிராக இந்த “அவுரி’யை பயிரிட்டுள்ளேன். வறட்சியை தாங்கி விளையக்கூடியது. குறைந்த அளவே தண்ணீர் போதுமானது. எக்டேருக்கு ஒரு டன் வரை காய்ந்த இலைகள் மற்றும் காய்கள்…

மேலும் படிக்க

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்துவது எப்படி?

Rice_Gall_Midge

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈயின் புழுக்கள் தண்டை துளைத்து குருத்தை தாக்கி சேதம் ஏற்படுத்தும். இந்த ஈக்கள் கொசுவைப்போல நீண்ட கால்களுடன் இருக்கும். இவை இரவு வேளையில் சுறுசுறுப்பாக இருக்கும். தளிர் இலைகளின் அடிப்பரப்பில் தனியாக அல்லது குவியலாக 100 – 300 முட்டைகள் இடும். 2 – 3 நாட்களில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். இதன் புழுக்கள் தண்டை துளைத்து குருத்தை தாக்கும் போது உட்கருத்தின் இயல்பான வளர்ச்சி தடைபடுகிறது. அதிலிருந்து தோன்றும் இலை உறை, புழு தோற்றுவிக்கும் சில நொதிகளால் நீண்ட குழாய் போன்ற பாகம் வளரும். இதை ஆனைக்கொம்பு என்கிறோம். இப்புழுக்கள் 5 முதல் 6 வார வயதுள்ள இளம்செடிகளை அதிகம் தாக்கும். ஈயாக வெளிவந்த பின், குழாய் காய்ந்துவிடும். இதனால் 50 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். கருப்புநிற ‘பிளாட்டிகேஸ்டர் ஒரைசா’…

மேலும் படிக்க

எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்

எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த 6 வழிகள்

மிகவும் வளர்ந்த இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கும் விவசாய நிலங்களிலும், கிராமப் பகுதிகளில் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும், பசுமை குடில் போன்ற மிகப்பெரும் அமைப்புகளுக்குள் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும் இஸ்ரேலவிவசாயிகள் அந்த இடங்களில் ஆந்தைகள்  வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் எந்தவித தடங்கலுமின்றி எலியை கட்டுப்படுத்த முடிகிறது. இதன் மூலம் எந்த விதமான ரசாயனங்களை பயன்படுத்தாமல், இயற்கையின் உயிர் சங்கிலியின் முறையில்  ஆந்தைகளைக் கொண்டு எலி தொல்லையை கட்டுப்படுத்தி வருகின்றனர். வயல்களில் இருக்கும் கலைகள் மற்றும் பொருட்களை அகற்றுவதன் மூலம் எலிகள் வயல்களில் தெரியும் பொழுது அதனை பிடிக்கவும் பிடித்து அழிக்கவும் முடியும். நிலத்தின் வரப்பை  செங்குத்தாக அமைக்காமல் 45 டிகிரி சாய்வாக  அமைப்பின் மூலம் எலி தொல்லையில் இருந்து விடுபட முடியும். நம்முடைய நிலத்தில் இருக்கிற எலி தொல்லையை குறைப்பதற்கு நம்ம வயல்களில் இருக்கிற வரப்புகளின் உயரத்தையும்…

மேலும் படிக்க

தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்

Tomato cultivation methods

தக்காளியானது, மெக்ஸிகோ நாட்டின் பூர்வீக மக்களின் உணவு பயன்பாட்டிலிருந்தது. அங்கிருந்து ஸ்பானிஷ்காரர்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டத்திற்கு பரவியது. ஐரோப்பியர் மூலமாக இந்தியாவுக்கு கிடைத்ததாக வரலாறு. தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சாகுபடிக்கு வெப்பம் மிகவும் அவசியம். குளிர் பிரதேசங்களில் சாகுபடி செய்வது கடினமாகும். நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது. சூரிய ஒளியைப் பொறுத்து பழங்களின் வண்ணம் மற்றும் தன்மைகள் மாறக்கூடும். தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய வேளாண் விரிவாக்கத் தொழில்நுட்ப வல்லுநர் இரா. வசந்தகுமார் கூறியது: தக்காளிச் செடிகள் பொதுவாக 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளரும். வலுவற்ற தண்டுகள் கொடியைப் போல வளருவதால், தாங்கிப் பிடிக்க பந்தல் போன்று குச்சிகளின் உதவி தேவைப்படும். காய்கள் அதிகம்…

மேலும் படிக்க

தக்காளி ரகங்கள்

Tomatto-Varities

இரகங்கள்: கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி அர்கா அஹ்தி. தக்காளி வீரிய ஒட்டு கோ – 3 HN2 x CLN2123A வின் வீரிய ஒட்டு. மகசூல் 96.2 டன்/ எக்டர். பயிரின் வயது 140-145 நாட்கள். பயிர் பாதி நிர்ணயிக்கப்பட்டு (90-95 செ.மீ) மற்றும் அதிக அடர்த்தி நடவு முறைக்கு உகந்தது. பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவு, குழுக்கள் 3-5 ஆகவும் அதிக விளைச்சல் இலைசுருள் வைரசிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டதுடன், வேர் முடிச்சு நூற்புழுவிற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. கோ.டி.எச் 1 (1998) வீரிய…

மேலும் படிக்க

பூச்சி, நோய்க் கட்டுப்பாடு

pest and disease control

இந்தத் தொகுப்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு போன்றவற்றை பற்றி பார்ப்போம். நெல் மழைக்காலங்களில் நிலவும் காலநிலை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு, புகையான் பூச்சி தாக்குதலுக்கு சாதகமானதாக உள்ளது. இலை சுருட்டுப் புழு தொடர் மழை, பனி மூட்டம் காரணமாக நெல்லில் இலை சுருட்டுப் புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்தப் புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இந்த பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயம் தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வயலில் புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். தாவர பூச்சிக் கொல்லியான…

மேலும் படிக்க

மூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம்

Mooligai-Maniyangal

இப்பொழுது மக்களிடம் மூலிகை பொருட்கள் மீது அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் அதன் உற்பத்தியானது மிகவும் குறைவு. எனவே விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி வருகிறது. விவசாயிகள் அதனை பெற்று பயனடையலாம். சரி இங்கு மூலிகை பயிர்களுக்கான விவசாய மானியம் பற்றி படித்தறிவோம் வாங்க. விவசாய மானியம்: மூலிகை பயிர் வாரியமானது அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75% உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலம் பயிர்களுக்கு 50% மற்ற மூலிகைகளுக்கு 20% மானியம் வழங்குகிறது. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை 1 ஏக்கருக்கு சாகுபடி செய்ய மூலிகை துறை வாரியத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. 20% மானியம்: வசம்பு, சோற்றுக்கற்றாழை, பேரத்தை, சித்திரத்தை, தண்ணீர் விட்டான் கிழங்கு, வேம்பு, நீர் பிரம்மி, சாரணத்தி, சென்னா…

மேலும் படிக்க

மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA

mappillai-samba

பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் (Strength) உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா(Samba Groom) என்று பெயர் இட பெற்றது. தனித்துவம் (Specialty): இந்தியாவில் தொன்றுதொட்டு பயிரிடப்படும் பாரம்பரிய (Traditional)நெல் வகைகள் மிகவும் மருத்துவக் குணம்(Medicinal Value) வாய்ந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை  உடையது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி((Immunity Power). இதில் புரதம்(Protein), நார்சத்து (Fibre) மற்றும் உப்பு (Salt) சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது. மாப்பிள்ளை சம்பா  உண்பதால் ஏற்படும் பயன்கள்: நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetes)…

மேலும் படிக்க