வேளாண்மைத்துறை மானியங்கள்

வேளாண்மைத்துறை மானியங்கள்

தரிசு, களர், உவர் நிலங்களுக்கு மானிய உதவி ஒருசில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன. அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது. என்ன செய்ய வேண்டும்? களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் செய்ய நிலம் 25 முதல் 30 சென்ட்  பரப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும். பெரிய நிலமாக இருந்தால் நடுவில் வாய்க்கால் அமைக்கலாம். நிலத்தின் சரிவுக்கு ஏற்ப வடிகால்கள் அமைக்க வேண்டும். வயலின் பரப்பிற்கேற்ப ஜிப்சத்தை கணக்கிட்டு பரவலாக இட்ட பிறகு சுமார் 10 செ.மீ. நீர் தேக்கி நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தில் தேக்கிய நீர் தானாகவே…

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS – திட்டம் குழந்தைகளுக்கு தடுப்புசி போடுவத்றகு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவு செய்தால் போதும், தடுப்பூசி போடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும். இதற்கு national vaccine reminder என்று பெயர். எப்படி பதிவு செய்வது? உங்களுடைய செல்போனின் மெசேஜ் பாக்ஸில் Immunize என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு உங்கள் குழந்தையின் பெயரை டைப் பெய்து விட்டு, ஒரு ஸ்பேஸ் விட வேண்டும். பின்னர் உங்கள் குழந்தையின் பிறந்த தேதியை டைப் செய்து 566778 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு, Immunize Harish 10-09-2015 என்று டைப் செய்து அனுப்பினால், உடனே…

மேலும் படிக்க

தேசிய கால்நடை அபிவிருத்தித் திட்டம்

தேசிய கால்நடை அபிவிருத்தித் திட்டம்

தேசிய கால்நடை அபிவிருத்தித்திட்டம் 2014-2015 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. கால்நடை அபிவிருத்தியின் அளவிலும், தரத்திலும் மேம்பாட்டை உறுதி செய்யவும், கால்நடை வளர்ப்போடு தொடர்புடைய அனைவரின் திறமைகளையும் படிப்படியாக உருவாக்கவும் இந்தத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் நோக்கங்கள்1) வளர்ப்புப் பறவைகள் உட்பட வீட்டு விலங்குகள் அனைத்தினுடைய நீடித்த வளர்ச்சியும் மேம்படும். 2) தீவனப்பயிர்கள் பயிரிடப்படும் பரப்பை அதிகரிப்பது, தரமான தீவன விதைகள், தொழில்நுட்ப மேம்பாடு, விரிவாக்கம், அறுவடைக்குப் பிந்தைய நிர்வாகம், செய்முறைகள் ஆகியவற்றை வெவ்வேறுபட்ட வேளாண் தட்பவெப்பநிலைகளுக்கு உகந்தவகையில் அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் தேவைக்கும் கிடைப்பதற்குமுள்ள இடைவெளியைக் குறைப்பது. 3) தரமான தீவனங்களின் உற்பத்தியைத்தீவிரமாக்குவது. ஆற்றல்மிக்க விதை உற்பத்திச் சங்கிலி மூலம் தரமான தீவனவிதைகளின் உற்பத்தியைத் தீவிரப்படுத்துவது. விவசாயிகளின் தீவிரமான ஈடுபாட்டுடனும், விதைக் கழகங்கள், விவசாயிகளின் கூட்டுறவு அமைப்புகள், தனியார் முயற்சிகள், பால்பண்ணைகள் ஆகியவற்றின் உடனுழைப்புடனும் இவற்றை…

மேலும் படிக்க

தீவன உற்பத்தி மேம்படுத்தும் திட்டம்

தீவன உற்பத்தி மேம்படுத்தும் திட்டம்

தீவன உற்பத்தி மேலாண்மை மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் ஒரு மத்திய அரசின் நிதி உதவி பெறும் தீவன உற்பத்தி மேலாண்மை திட்டத்தினை மாநிலங்களில் தீவன உற்பத்தி அதிகரிப்பதற்காக அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 2005-06 ஆம் ஆண்டு முதலே கீழ்க்கண்ட நான்கு பகுதிகளாக அமல்படுத்தப்பட்டு வருகிறது தீவனக்கட்டிகள் உற்பத்தி செய்யும் மையங்களை அமைத்தல் புல்வெளிகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் தீவன விதை உற்பத்தி மற்றும் விநியோகம் உயிர்த்தொழில் நுட்பத்துடன் கூடிய ஆராய்ச்சித்திட்டங்கள் இந்த மத்திய அரசின் நிதியுதவி பெறும் தீவன மேம்பாட்டுத்திட்டம், இருக்கக்கூடிய தீவனங்களை முறையாக உபயோகித்தலுக்காக 2010 ஆண்டிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.141.10 கோடி நிதியுதவியுடன் இத்திட்டம் கீழ்க்கண்ட புதிய அம்சங்களை அல்லது புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியுள்ளது. தீவன பரிசோதனைக்கூடங்களை மேம்படுத்துதல் தீவன வைக்கோல் வெட்டும் இயந்திரங்களை அறிமுகம்…

மேலும் படிக்க

கால்நடை காப்பீட்டுத் திட்டம்

Livestock Insurance Scheme

மத்திய அரசால் அளிக்கப்பட்ட, கால்நடை காப்பீட்டு திட்டமானது(Livestock Insurance Scheme) பத்தாவது ஐந்து ஆண்டு திட்டத்தில் 2005 -2006 மற்றும் 2006-07 லும், 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2007-08 லும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த திட்டமானது தற்போது 300 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த காப்பீட்டு திட்டமானது இரட்டை நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும். மற்றொன்று, கால்நடை காப்பீட்டின் முக்கியவத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து, திட்டத்தை பிரபலப்படுத்தி, கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாகும். இந்த திட்டத்தின்கீழ், உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டிற்கான பிரிமிய…

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

குறிக்கோள்கள் பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களை இணைத்து செயல்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், வருடம் முழுவதும் தொடர்ந்து பண வரவுக்கு வழி செய்தல், வருடம் முழுவதும் குறிப்பாக விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருள்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளத்தை மேம்படுத்துதல், பயிரின் மகசூலை பெருக்குவதோடு உரச் செலவுகளைக் குறைக்க முடியும். துணைத் தொழில்கள் நன்செய் நிலத்தில் பயிருடன் கோழி அல்லது புறா அல்லது ஆடு அல்லது மீன் வளர்ப்பு போன்ற தொழில்களை ஒருங்கிணைக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 70 சதவீதம் பயிர்ச் சாகுபடி செய்வதற்கும், 10 சதவீதம் தீவனப் பயிர்ச்…

மேலும் படிக்க

உணவு தானியங்கள், அழுகக்கூடிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வசதிக்கான கிசான் ரத் செயலி

Kisan Rath App

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகள் நலனுக்கான செயலியைத் உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி, விவசாய மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை போக்குவரத்து வாகனங்களைத் தேடும் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்குப் பெரிதும் பயன்படும். விளை நிலங்களில் இருந்து மண்டிகள், விவசாய உற்பத்தி அமைப்பின் சேகரிப்பு மையங்கள், உணவுக் கிடங்குகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்வது உள்ளிட்டவை முதல்நிலை போக்குவரத்தாகும். மண்டிகளில் இருந்து பொருள்களை மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலான மண்டிகள், பதப்படுத்தும் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், மொத்த விற்பனையாளர்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை இரண்டாம் நிலை போக்குவரத்தாகும். சாகுபடியும், அறுவடையும் தொடர்ந்து நடக்கும் போது, கிசான் ரத் செயலி, விளையும் இடத்திலிருந்து மண்டிக்கும், அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள பிற மண்டிகளுக்கும் பொருள் போக்குவரத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கும்,…

மேலும் படிக்க

ஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்

ஆராய்ச்சி மண் வள அட்டை

மண் வள அட்டை விவசாயிகளின் நிலங்களை அளவிட்டு, மண்ணை வகைப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யும் ஆராய்ச்சி மூலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக மண் வகையை அறிந்து, மகசூலைப் பெருக்க மண் வள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி வசூலிக்கக் கிராமங்கள் வாரியாக நில அளவீடு செய்து, புல எண் வாரியாகக் கிராம வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரைபடங்களைக் கொண்டே நில அளவீடும், புல எண் வாரியாகக் கிராம வரைபடங்களும் கையாளப்பட்டு வருகின்றன. முதுகெலும்பு இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனைக் காக்கவும், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான மேம்பாட்டு வசதிகளையும் அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்வது கானல் நீராகவே இருந்து வந்தது. இந்நிலையை மாற்றக் கிராமங்களில் புல எண் வாரியாக விவசாய நிலங்களைப் பிரித்து,…

மேலும் படிக்க