தங்கம் விலை அதிரடி உயர்வு: வரலாற்றில் முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டியது | Gold price surges – crosses Rs 48 thousand for first time in history

சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்துவந்த தங்கத்தின் விலை இன்று (மார்ச் 5) ஒரேநாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,440-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 என்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டி தங்கம் விற்பனை ஆகிறது. இன்று தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.48,120 என்ற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை…

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசத்துக்கு 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி | approval to export 64400 tonnes of onion to Bangladesh uae

புதுடெல்லி: மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) இதுகுறித்து வெளியிட்ட அறிவிக்கையில் கூறியுள்ளதாவது: தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் 64,400டன் வெங்காயத்தை ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிடத்தக்க அளவுவெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்சிஇஎல் மூலம் ஐக்கிய அரபுஅமீரகத்துக்கு காலாண்டுக்கு 3,600 டன் அளவு உச்சரவரம்புடன் 14,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று வங்கதேசம் உள்ளிட்ட நேச நாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு வெங்காயஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது. 2023 டிசம்பர் 7-ல் வெளியான அறிவிப்பின்படி வெங்காயம் ஏற்றுமதிக்கு இம்மாதம் 31-ம் தேதிவரை மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், உள்நாட்டுசந்தைகளில் வெங்காயத்தின் கையிருப்பு போதுமான அளவில்இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விலை சரிவை தடுக்கும் நோக்கில் நட்பு நாடுகளுக்கு…

மேலும் படிக்க

உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கை 30% ஆக உயர்த்த இலக்கு | target to increase India s share of total world milk production to 30 percentage

புதுடெல்லி: உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனீஷ் ஷா தெரிவித்துள்ளார். உலக அளவில் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தினமும் 23.5 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் மொத்த பால் உற்பத்தியில் 24 சதவீதம் ஆகும். இந்நிலையில், இதை 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மனீஷ் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து மனீஷ் ஷா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது உலகின் மொத்த பால் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை இந்தியா வழங்குகிறது. 2030-ம்…

மேலும் படிக்க

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்கப்படுமா? – விவசாயிகள் எதிர்பார்ப்பு | Will Coconut Oil be Sold on Tamil Nadu Ration Shops? – Expectations of Farmers

ஒட்டன்சத்திரம்: கேரளாவைப் போல் தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்து எண்ணெய் தயாரித்து ரேஷனில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழநி, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 31,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. இது மட்டுமின்றி தேங்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில், தேங்காய்களை உலர்த்தி கொப்பரைகளான பின்பு, அதை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளுக்கு விவசாயிகள் அனுப்பு கின்றனர். தற்போது தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை தினமும் சரிவடைந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கிறது. கேரள மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள் முதல்…

மேலும் படிக்க

இடுபொருட்களின் விலை உயர்வால் ஆவின் ஐஸ்கிரீம் விலை அதிகரிப்பு | Increase in price of Aavin ice cream due to increase in price of inputs

சென்னை: இடுபொருட்களின் விலை உயர்வால், 4 வகையான ஐஸ்கிரீம் விலையை அதிகரித்துள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் சாக்கோ பார், பால் வெண்ணிலா, கிளாசிக் கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லேட் ஆகிய 4 வகையான ஐஸ் கிரீம்களின் விலை ரூ.2முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த விலைஉயர்வு நேற்று முதல் அமலுக்குவந்தது. இதற்கு பால் முகவர்கள்சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விலை உயர்வுக்கு இடுபொருட்களின் விலை உயர்வே காரணம் என்று ஆவின் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகபால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம்…

மேலும் படிக்க

தமிழகத்தில் கோடை காலத்தில் தினசரி மின் தேவை 19,000 மெகாவாட்டாக உயர வாய்ப்பு | Daily Power Demand on Tamil Nadu During Summer is Likely to Rise to 19000 MW

கோவை: தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு தினசரி மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் சீரான மின் விநியோகத்துக்கும் தயார் நிலையில் உள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தினசரி மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன் யூனிட். இதில் மத்திய கிரிட் ( மின் கட்டமைப்பு ) மூலம் 209.52 மில்லியன் யூனிட், அனல் மின் நிலையத்தால் 94.75, ஹைட்ரோ திட்டத்தில் 7.11, காஸ் 5.55, காற்றாலை 22.26, சூரிய ஒளி 32.2, பையோ திட்டத்தில் 12.14 மில்லியன் யூனிட் வீதம் மின் உற்பத்தி கிடைத்துள்ளது.…

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ-வாக தமிழர் நியமனம் | Tamil appointed as CEO of American company

கலிஃபோர்னியா: ஸ்னோஃபிளேக் (Snowflake) அமெரிக்காவை சேர்ந்த கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனம் ஆகும். இத்துறையில் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பிராங் ஸ்லூட்மேன் பொறுப்பில் இருந்தார். கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அவர் ஓய்வு பெற்ற நிலையில், புதிய சிஇஓ-வாக ஸ்ரீதர் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீதர் ராமசாமி 1967-ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற அவர், 1989-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டுகாலம் பணியாற்றியஅவர், 2019-ம் ஆண்டு நீவா நிறுவனத்தை நண்பருடன் இணைந்து தொடங்கினார். இந்நிறுவனத்தை 2023-ம் ஆண்டு ஸ்னோஃபிளேக் நிறுவனம் கையகப்படுத்தியது. இதையடுத்து ஸ்னோஃபிளேக் நிறுவனத்தில் இணைந்த ராமசாமி அங்கு முக்கியமான தயாரிப்புகளை அறிமுகம் செய்தார். Source link

மேலும் படிக்க

ஆவின் ஐஸ்கிரீம் விலை இன்று முதல் ரூ.5 வரை உயர்வு: பால் முகவர்கள் கண்டனம் | aavin ice cream price hike

சென்னை: ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை இன்று முதல் உயர்த்தப்படுகிறது. இது குறித்து ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘ஐஸ்கிரீமில் சாக்கோ பார், பால் வெண்ணிலா, கிளாசிக் கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லேட் ஆகிய 4 வகையான ஐஸ்கிரீம்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு: 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 100 எம்.எல். எடை கொண்ட கிளாசிக் கோன் வெண்ணிலை ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும், 100 எம்.எல். எடைகொண்ட கிளாசிக் கோன் சாக்லேட் விலைரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின்ஐஸ்கிரீம்…

மேலும் படிக்க

பொள்ளாச்சி பகுதியில் கடும் வறட்சி – தென்னை மரங்களை காக்க போராடும் விவசாயிகள் | Severe Drought on Pollachi – Farmers Struggling to Save Coconut Trees

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களை வறட்சியில் இருந்து காக்க பணம் செலவழித்து தண்ணீர் வாங்கி ஊற்ற வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் பருவமழை தவறியதால், இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே கடும் வறட்சி நிலவி வருகிறது. பாசன நீர் ஆதாரங்கள் வற்றியதால், பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக நெகமம் பகுதியில் நீர்ப் பாசனம் அதிகம் தேவைப்படும் தென்னை மரங்களை காக்க, மாதந் தோறும் ஆயிரக் கணக்கான ரூபாய் தண்ணீருக்காக செலவழிக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இது குறித்து நெகமம் காணியாலம் பாளையத்தை சேர்ந்த விவசாயி கந்த வடிவேல் கூறியதாவது: தென்னையில் உயர் கலப்பின ரகங்களுக்கு, உயிர் தண்ணீராக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் ஒரு நாளைக்கு 85 லிட்டர் அளிக்க வேண்டும். நாட்டுரக மரங்களுக்கு 65 லிட்டர்…

மேலும் படிக்க

சுவிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தகவல் | Agreement with Swiss Company: Tiruppur Exporters Association Info

திருப்பூர்: வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் நடைபெறும் உற்பத்தியை ஆவணப்படுத்துவது தொடர்பாக, சுவிட்சர்லாந்து நாட்டின் ‘ஃபுளூசைன் டெக்னாலஜி’ நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்திய அளவில் வீட்டு உபயோக ஆயத்த ஆடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப் படுவதை ஆவணப் படுத்தி உறுதி செய்து, சான்றிதழ் அளிக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் வீட்டு உபயோக ஆயத்த ஆடை, வீட்டு அலங்கார பொருட்கள், திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் வாயிலாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஃபுளூசைன் டெக்னாலஜி நிறுவனத்துடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட உள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் சுவிட்சர்லாந்தின் ஃப்ளூசைன் டெக்னாலஜி…

மேலும் படிக்க