தமிழ் வரலாற்றின் பொற்காலம்

தஞ்சை பெரிய கோவில்

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் (985-1014) தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம். பொருளாதாரம், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், நாகரிகம், விவசாயம், கலாச்சாரம், உணவு முறை, போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது. தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை. அந்த ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில். இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது…

மேலும் படிக்க

உடல் நலத்திற்கு செம்பு தண்ணீர்

Copper Water

குடிநீரை காய்ச்சி நன்றாக ஆறவைத்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி அருந்தலாம். இந்த நீரில் சீரகம், ஓமம், துளசி போன்ற உடம்பிற்கு நன்மை பயக்கும் பொருட்களை கலந்து குடிப்பது சிறந்ததே. செம்பு பல்வேறு மருத்துவ ரீதியான  பலன்களைக் கொண்டது. வீட்டில் வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்த முடியாதவர்கள் செம்பு பாத்திரத்தில் 16 மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரை வைத்திருந்தால் அது தானாகவே தண்ணீரில் உள்ள கிருமிகளை அகற்றி சுத்தப்படுத்தி கொடுத்துவிடும். சாதாரணமாக செம்பு பாத்திரம் அல்லது குடத்தில் நீர் நிரப்பப்பட்டு 8 முதல் 10 மணி நேரம் கழித்து அருந்த வேண்டும். அப்போதுதான் அதன் முழுப்பயன் நமக்கு கிடைக்கும். இரவு பாத்திரத்தை நிரப்பி விட்டு 8 மணி நேரம் கழித்து காலையில் எழுந்து பருகுவதால் அதில் நிறைந்திருக்கும் மருத்துவ குணம் நமக்கு முழுவதும் கிடைக்கிறது. இது மிகச்சிறந்த கிருமி நாசினியாக…

மேலும் படிக்க

அறிவும் ஞானமும்

sri ramakrishna paramahamsa

பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாட்கள் பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்கவில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, “இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்து அமர்ந்தார். முதல் மாணவனைப்…

மேலும் படிக்க