பெண்களின் உதடு வெடிப்புக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்

பெண்களின் உதடு வெடிப்புக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்

பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம். பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகமானால் அது நோய்த்தொற்றாகிவிடும். சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம். கற்றாழை ஜெல்: இது குளிர்ச்சி தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி பூஞ்சை எதிர்ப்பு பண்பு கொண்டது. உதடு உலர்ந்து வெடிப்புடன் வலியும் ஏற்பட்டால் கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இது பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடியது. கற்றாழை ஜெல்லை எடுத்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் குளிரவைக்க வேண்டும். பின்பு ஆன்டி பாக்டீரியல் கிளீன்சர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்திவிட்டு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில்…

மேலும் படிக்க

கால் வலி போக்கும் கல்தாமரை

கல்தாமரை

முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது. எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும், இல்லாவிடில் எலும்பு சந்திப்புகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், சிவப்பு என…

மேலும் படிக்க

20 வகையான பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில்…

மேலும் படிக்க

அல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்

அல்சருக்கு எளிய வீட்டு வைத்தியம்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு மிகப்பெரிய மூலகாரணமாகும். சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம். (home remedies for ulcer) தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. இதேபோன்று தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து ந்தாலும் அல்சர்…

மேலும் படிக்க