முகத்தை தங்கம் போல் மின்னச் செய்யும் மாதுளை ஃபேஷியல் சீரம்

pomegranate for glowing skin

மாதுளை பழம் எல்லோருக்குமே பிடித்த பழங்களில் ஒன்று. அது நம்முடைய ரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதோடு ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையை செய்கிறது. இதன் மூலம் உடல் உள்ளுறுப்புகள் மட்டும் இன்றி சருமமும் பொலிவடையும். சமீப காலங்களில் ஃபேசியல் சீரமங்கள் மிகப் பிரபலமடைந்து வரும் நிலையில் இந்த மாதுளை பழத்தை வைத்து நாம் இயற்கையான முறையில் வீட்டிலேயே எப்படி சருமத்தை பளபளவென வைத்துக் கொள்ள ஒரு சீரம் தயாரிக்கலாம் என்று இங்கே பார்க்கலாம். சரும பராமரிப்பில் முகத்திற்கு பயன்படுத்தப்படும் ஃபேசியல் சீரம் வகைகள் சமீபத்தில் மிகப் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் இவை மிகவும் விலை அதிகமாக விற்கப்படுகின்றன. அதோடு எல்லோருக்கும் எல்லா வகையான சீரம் வகைகளும் பலன் கொடுப்பதில்லை. ஆனால் இயற்கையான பொருள்கள் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி பலன் கொடுக்கக்கூடியவையாக இருக்கின்றன. அதனால் இயற்கையான பொருள்களை வைத்து நாமே…

மேலும் படிக்க

முகம் கலராக வேண்டுமா? இந்த 5 பழங்களை முகத்தில் அப்ளை பண்ணுங்க…skin whitening tips

Health Benifits

பழங்கள் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். குறைந்த கலோரியில் அதிக ஊட்டச்சத்துக்க்ளைப் பெறுவதற்கு பழங்கள் உதவி செய்யும். அதேபோல சரும பராமரிப்பிலும் சரும ஆரோக்கியத்திலும் பழங்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்த பழங்கள் உதவி செய்யும். அப்படி சருமத்தை கலராக்க உதவும் பழங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம். சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு மட்டும் இல்லாமல் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், பிக்மண்டேஷள் ஆகியவற்றையும் நீக்குவதில் பழங்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அதேபோல சருமத்தை மென்மையாக மாற்றவும் செய்யும். இதற்கான நாம் என்ன மாதிரியான பழங்களை தேர்வு செய்யலாம் என்று பார்க்கலாம். சரும நிறத்தை மேம்படுத்தும் ஆப்பிள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் பழங்களில் ஆப்பிளும் முக்கியமான ஒன்று. அதோடு சருமத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவி செய்கிறது. ஆப்பிள்…

மேலும் படிக்க

அன்னாசி பழத்தை பேஸ்பேக்காக அப்ளை செய்தால் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்

pineapple health benefits

அன்னாசி பழம் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் பழங்களில் ஒன்றாக இருக்கிறது. வைட்டமின் சி நிறைந்த பழங்களில் ஒன்றான பைனாப்பிள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அன்னாசி பழத்தை வெறும் ஆரோக்கியத்திற்காக மட்டுமின்றி அழகுக்காகவும் பயன்படுத்த முடியும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. சருமத்தை அழகாக வைத்திருக்க அன்னாசியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி இரண்டும் அதிகமாக இருக்கின்றன. இவையிரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவன. குறிப்பாக நார்மல் ஸ்கின் மற்றும் ஆயில் ஸ்கின் இரண்டுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது தொடங்கி முகத்தை பளபளப்பாக்கவும் மாசு மருவற்ற சருமத்தை பெறவும் பல வழிகளில் அன்னாசியை பயன்படுத்த முடியும். க்ளியர் சருமத்துக்கு அன்னாசி பழம் அன்னாசியில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது பருக்களுக்கு…

மேலும் படிக்க

முகப்பருக்கள் வராமல் தடுக்கக்கூடிய பழங்கள்

Fruits-that-can-prevent-Pimples

மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆரஞ்சு: தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது. பருப்புகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஆரோக்கியமான கொழுப்புகளாகும். எனவே அது தோல் அடுக்குகளில் தேங்கியுள்ள ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அகற்றுவத்தால் உங்களை சூடாக வைத்திருக்கும். பச்சை காய்கறிகள்: கீரை, முட்டைக்கோஸ், வெந்தயம், கடுகு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள். பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் அதீத மாற்றங்கள் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும். பீன்ஸ்: துத்தநாகம் பெரும்பாலும் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.…

மேலும் படிக்க

உங்க கருப்பான கைகளையும் கால்களையும் வெள்ளையா மாற்ற இத செஞ்சா போதுமாம்…!

tips-to-lighten-your-dark-hands-and-feet-in-tamil

கோடை வெப்பம் அதிகமாக இருந்தபோதிலும் உங்கள் முகம் ஒளிரும். அதற்காக பல விஷயங்களை நீங்கள் செய்திருப்பீர்கள். ஆனால் சூரியனின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக கருப்பாக மாறிய உங்கள் கால்களையும் கைகளையும் நீங்கள் வெறுக்கிறீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நம் கால்களும் கைகளும் நம் உடலின் மற்ற பாகங்களை விட கருமையாக மாறும் போக்கு உள்ளது என்பது அனைவரும் தெரிந்த உண்மை. சூரியனின் கடுமையான கதிர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நம் தோல் மெலனின் உற்பத்தி செய்கிறது. மேலும் மெலனின் கருமையான சருமத்தைக் குறிக்கிறது. மேலும், உங்கள் உடலின் இந்த இரண்டு கருப்பு பாகங்களால் நீங்கள் சங்கடப்பட்டால், உங்கள் கால்களையும் கைகளையும் ஒளிரச் செய்ய உதவும் உதவிக்குறிப்புகளை நாங்கள் இக்கட்டுரையின் மூலம் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். எலுமிச்சை எலுமிச்சை ஒவ்வொரு வீட்டிலும் காணப்படுகிறது மற்றும் உடலின் கருமையான…

மேலும் படிக்க

வெயிலால் உங்க சருமம் கருமையாகாம இருக்கணுமா? இத செய்யுங்க போதும்…

home-remedies-to-protect-your-skin-from-tanning

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், தொடக்கத்திலேயே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக சூரியனின் புறஊதாக் கதிர்கள் சருமத்தை மோசமாக பாதிக்கக்கூடியது. இந்த புறஊதாக் கதிர்கள் சருமத்தின் நிறத்தை கருமையாக்குவதோடு மட்டுமின்றி, சரும புற்றுநோயை உண்டாக்கும் அளவில் மோசமானது. இந்த புறஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கு கடைகளில் ஏராளமான சன் ஸ்க்ரீன் லோஷன்கள் விற்கப்படுகின்றன. கெமிக்கல் நிறைந்த சன் ஸ்க்ரீன் லோஷன்களை சருமத்திற்கு பயன்படுத்தும் அதே வேளையில் இயற்கை வழிகளையும் மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதேடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, சூரியனால் சருமம் எப்படி கருமையாகிறது தெரியுமா? சூரிய கதிர்கள் சருமத்தில் படும் போது, சருமமானது புறஊதாக் கதிர்களை உறிஞ்சுவதற்கு அதிக மெலனினை வெளியிடுகிறது. இதன் விளைவாகவே வெயிலில் சுற்றினால் சருமம் கருமையாகிறது. சரி, இப்போது வெயிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கும் சில இயற்கை…

மேலும் படிக்க

பாதங்களுக்கு மசாஜ் தெரபி

Foot Massage

மிகவும் பயனுள்ள ஓர் மருத்துவ சிகிச்சையில் ஒன்று தான் மசாஜ் தெரபி. ஏனெனில் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, டென்சன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை. ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில்…

மேலும் படிக்க

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

Orange_Juice_Benefits

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின்…

மேலும் படிக்க

முடி உதிர்தலை தடுக்க இயற்கையாக உதவும் எளிமையான வழிமுறைகள்!

Ayurvedic-Remedies-to-Stop-Hair-Fall

முடி உதிர்தல் பிரச்சனை தானாகவே சில நாட்களில் குணமடைந்துவிட கூடிய பிரச்சனைதான். ஆனால் அது இயல்பான முடி உதிர்தலாக இருக்க வேண்டும். பொதுவாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரை முடி இழப்பை சந்திப்பது பொதுவானது. சில நேரங்களில் இந்த முடி உதிர்வானது அதிகமாக இருக்க காரணங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தற்காலிகமானதே. அதிகமான மருந்துகள் எடுத்துகொள்ளும் போது,தைராய்டு பிரச்சனை இருக்கும் போது (தைராய்டு பரிசோதனைக்கு பிறகு மருந்துகள் எடுத்துகொள்வதால் இது கட்டுப்படும்) உச்சந்தலையில் தொற்று, அழுக்கு அதிகமாக இருக்கும் போது, கர்ப்பகாலத்திலும் பிரசவத்துக்கு பின்பும் என இந்த காலகட்டங்களில் முடி உதிர்வு அதிகமாக இருந்தால் அது நாளடைவில் சரியாகிவிடக்கூடும். ஆனால் இது தொடர்ந்தால் அது வேறு ஏதோ பிரச்சனைக்குரிய காரணமாக இருக்கலாம். அதை தவிர்த்தால் முடி உதிர்வு நிச்சயம் தடுக்கலாம். இவற்றோடு இயற்கையாக முடி…

மேலும் படிக்க

இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற குறிப்புகள்

Beauty Tips

இரசாயனங்கள் என்றும் உங்களுக்கு நிரந்திரமான தீர்வை தரவல்லது அல்ல. தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற லாப நோக்குடன் தான் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மற்றும் இதில் சிலவன பக்கவிளைவுகள் தரக்கூடியதும் கூட. எனவே, இயற்கையான முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வை அளிக்கும். கேரட் மற்றும் பால் கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும். கேரட், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும் எலுமிச்சை சாறு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன்…

மேலும் படிக்க