Doctor Vikatan: அல்சரை குணப்படுத்துமா அம்மான் பச்சரிசி? |Does Amman Pacharisi cure ulcer problem?

Doctor Vikatan:அல்சருக்கு அம்மான் பச்சரிசி பொடியைப் பயன்படுத்தலாமா… அப்படியானால் எத்தனை நாள்களுக்கு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? – Sathyamoorthi Palanisamy, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா இயற்கை மருத்துவர் யோ. தீபா அம்மான் பச்சரிசி செடிக்கு `ஆஸ்துமா செடி” என இன்னொரு பெயரும் உண்டு. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்தத் தாவரம், மூச்சிரைப்புக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. முகப்பரு, மரு, காயங்கள் என சருமப் பிரச்னைகளுக்கு அம்மான் பச்சரிசியை அதிக அளவில் பயன்படுத்தும் வழக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அம்மான் பச்சரிசி என்ற பெயரை வைத்து இது ஒருவகையான அரிசிபோல என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இது அரிசி அல்ல, ஒருவகை மூலிகைச் செடி. இந்தச் செடியின் விதைகள், நெல்போல காட்சியளிப்பதால் இப்படியொரு பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. Source link

மேலும் படிக்க

Athlete: ஓட்டப்பந்தய வீரராக இருக்க ஜீன் முக்கியம்… அந்த ஸ்பெஷல் ஜீன் என்ன?! -ஆய்வு | Athletic skill related with gene – Research

ஸ்பீட் ஜீனுக்கும், விளையாட்டிற்கும் உள்ள தொடர்பென்ன?!… ACTN3 என அழைக்கப்படும் ஸ்பீட் ஜீன், ஆல்ஃபா-ஆக்டினின்-3 என்ற புரதத்தை என்கோட் (Encode) செய்கிறது. தசைநார்களில் வேகமாக இழுக்கும் போது மட்டுமே இந்தப் புரதம் வெளிப்படுத்தப்படும்.  எலும்பு தசைகள் நூற்றுக்கணக்கான, சில நேரங்களில் ஆயிரக்கணக்கான தசை நார்களால் ஆனது. அவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டு இணைப்பு திசுக்களில் மூடப்பட்டிருக்கும். இந்த எலும்பு தசை நார் எவ்வளவு வேகமாகச் சுருங்குகிறது என்பதைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.  நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களில் `டைப் I’ அல்லது `ஸ்லோ ட்விச்’ (slow-twitch) தசைநார்கள் இருக்கும். அதுவே பளு தூக்குபவர்கள் மற்றும் குறைந்த தூரம் ஓடும் தடகள வீரர்களில் `டைப் II’ அல்லது `ஃபாஸ்ட்-ட்விச்’ (fast-twitch) தசைநார்கள் இருக்கும். விளையாட்டின் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய 200க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஜீன் மாறுபாடுகள் உள்ளன. இவற்றில்…

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு பாப்கார்ன் கொடுப்பது ஆரோக்கியமானதா? |Doctor Vikatan: Is it healthy to give children popcorn?

தவிர, பாப்கார்னில் வைட்டமின் பி, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகளும் இருக்கும். ஆனால், பாப்கார்னின் ஆரோக்கியம் என்பது அது எந்த முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. அதாவது, சிறிதுகூட எண்ணெயோ, வெண்ணெயோ, உப்போ சேர்க்காமல் தயாரிக்கப்படும்பட்சத்தில் அது முழுக்க முழுக்க ஆரோக்கியமானதுதான். ஆனால், அதுவே நிறைய எண்ணெய், வெண்ணெய், உப்பு, செயற்கை சேர்க்கைகள், சுவையூட்டிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் பாப்கார்ன் என்றால் ஆரோக்கியமற்ற உணவு என்பதில் சந்தேகமில்லை. பாப்கார்ன்! கொழுப்பு சேர்க்காத பாப்கார்னை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆரோக்கியமாகத் தயாரிக்கப்படுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம், சுகாதாரமாகத் தயாரிக்கப்படுவதும். கண்ட இடங்களில் தயாரிக்கப்படுவதை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள். எந்த வயதுக் குழந்தைக்கு அதைக் கொடுக்கிறீர்கள் என்பதும் முக்கியம். ரொம்பவும் சின்னக் குழந்தைகள் என்றால் பாப்கார்ன் தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது என்பதால் கவனம் தேவை. எனவே, என்ன சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்து, மென்று விழுங்கத் தெரிந்த வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அதைக் கொடுக்கவும். உங்கள்…

மேலும் படிக்க

Sexual Health: தாம்பத்ய உறவுக்கு ஆடைகள் ரொம்ப அவசியம்…காமத்துக்கு மரியாதை – 148 – Colourful dresses very important for sexual life..!

ஆடைக்கும் தாம்பத்திய உறவுக்கும் அப்படியொரு நெருக்கமிருக்கிறது. இதைப் படித்தவுடனே, `புருஷன் வேலை செஞ்சு அலுத்து, களைச்சு வீட்டுக்கு வர்றப்போ அழுக்கு நைட்டியோட நிக்காம, அழகா புடவை கட்டிட்டு நிக்கணும்னு மனைவிக்கு டிப்ஸ் கொடுக்கப்போறீங்களா? நாங்களும் வேலைக்குப் போறோம். எங்களுக்கும் களைப்பு வரும். இதுல வீட்லயும் அழகா டிரெஸ் பண்ணிட்டு இருக்க முடியாது” என்று உங்களில் பலருக்கும் தோன்றலாம். ஆனால், இந்தக் கட்டுரை மனைவி கண்ணுக்குக் கணவனும், கணவன் கண்ணுக்கு மனைவியும் அழகாகத் தெரிவதன் மூலம் அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை பற்றித்தான் பேசவிருக்கிறது. பேசுபவர் மனநல மருத்துவர் அசோகன். ”நாவல்களில் நாயகன், நாயகியை அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய ஆடை பற்றிய வர்ணனைகள் அதிகமிருக்கும், அதேபோல, திரைப்படங்களிலும் நாயகன், நாயகியை அறிமுகப்படுத்துகையில் அவர்களுடைய ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். `சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு’, `சுடிதார் அணிந்து வந்த…

மேலும் படிக்க

Doctor  Vikatan: ஃபைப்ராய்டு கட்டிகளால் உருவாகும் முகப்பருக்கள்… சிகிச்சைகள் என்ன? |What are the treatments for acne caused by fibroids?

Doctor  Vikatan: உறவினருக்கு ஃபைப்ராய்டு பிரச்னை  இருக்கிறது. அவருக்கு வயது 40. அவருக்கு முகத்தில் ஆழமான பருக்கள்  புதிது புதிதாகத்  தோன்றுகின்றன. சரும மருத்துவரை அணுகியபோது பருக்கள் வரக் காரணம் ஃபைப்ராய்டுதான் என்கிறார்.  என் உறவினர், ஃபைப்ராய்டுக்கு  எந்தச் சிகிச்சையும் எடுக்கவில்லை. அவர் எணணெய், கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுபவர் கிடையாது. ஆனாலும் ஏன் இப்படி வர வேண்டும்…. அவரது முகம் சரியாக வாய்ப்பு உண்டா? – ஸ்ரீ. மல்லிகா குரு, சென்னை-33 பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் முதல் விஷயம்…. உங்கள் உறவினருக்குச் சொல்லப்பட்டது போல ஃபைப்ராய்டு பிரச்னையால், சருமத்தில் எந்தப் பிரச்னைகளும் வர வாய்ப்பில்லை.  Source link

மேலும் படிக்க

Happy Teeth: கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை… குழந்தையை பாதிக்குமா? I Can dental treatment during pregnancy affect the baby?

பிளீச்சிங் உள்ளிட்ட அழகியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் பல் சிகிச்சைகள் எதையும கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாது. காரணம் அந்த சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள், ரசாயனங்கள் போன்றவை கர்ப்பிணிகளுக்கு எவ்வித விளைவை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது” என்றார். பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும். பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள். Source link

மேலும் படிக்க

Obesity: உடல் பருமனோடு வாழும் 1 பில்லியன் மக்கள்… உலகமும் அதிகரிக்கும் உடல்பருமனும் – ஆய்வு!|Over 1 Billion People Around The World Are Obese: Study

உலகமும் அதிகரிக்கும் உடல்பருமனும்… உடல்பருமன் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தகவல்கள், *உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரில் 160 மில்லியன் பேர் (65 மில்லியன் சிறுமிகள் மற்றும் 94 மில்லியன் சிறுவர்கள்) உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ல் இந்த எண்ணிக்கை 31 மில்லியனாக இருந்தது.  *பெரியவர்களில் 879 மில்லியன் பேர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 504 மில்லியன் பெண்கள், 374 மில்லியன் ஆண்கள் உள்ளனர். Weight (Representational Image)Photo by Ketut Subiyanto from Pexels *பெரியவர்களில், உடல் பருமன் விகிதம் பெண்களில் இருமடங்காகவும், ஆண்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்காகவும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, எல்லா நாடுகளிலும் உடல் பருமனாவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.   *1990 முதல் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் குறைவான எடையால் (Underweight) பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் விகிதம் பெண்களில் ஐந்தில் ஒரு…

மேலும் படிக்க

அட்ரீனல் சுரப்பி கட்டிகளுக்கு லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை; மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாதனை! | Meenakshi Mission Removes Rare Adrenal Gland Tumours; Offers Patient a Medication-Free Future

மிகவும் நுட்பமான இந்த அறுவைசிகிச்சைக்கு  அறுவைசிகிச்சை திறன்களும், துல்லியமும் தேவைப்படும்.  2 மணி நேரங்கள் நீடித்த இந்த அறுவைசிகிச்சையை மருத்துவ இயக்குனரும், குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவருமான டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி, குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். N . மோகன், மயக்கமருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். மகாராஜன், ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது.  அறுவைசிகிச்சையின்போதும்  அதற்குப் பிறகும் எந்த சிக்கல்களும் இல்லை.  அறுவைசிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகும் கூட இந்நோயாளியின் இரத்தத்தில் காட்ரிசால் அளவு இயல்பானதாக இருப்பது, இடதுபுற அட்ரீனல் கார்டெக்ஸ்–ன் இயல்பான செயல்பாட்டை சுட்டிக்காட்டுகிறது.  மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி  டாக்டர். B. கண்ணன், இந்த அறுவைசிகிச்சை குறித்து கூறியதாவது: “மிக அரிதான இந்த அறுவைசிகிச்சை சாதனையை செய்ததற்காக திறன்மிக்க எமது மருத்துவக்…

மேலும் படிக்க

Apollo: மலக்குடல் புற்றுநோய்குரிய இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டம் அறிமுகம்!

மலக்குடல் புற்றுநோய்க்கு இந்நாட்டின் ஒரே நான்காம் உயர் நிலை சிகிச்சை மையமான , அப்போலோ அதன் சிறந்த மேலாண்மைக்கான தளத்தை உருவாக்கியிருக்கிறது. அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) மலக்குடல் புற்றுநோயின் மேலாண்மைக்கென்று இந்தியாவின் முன்னோடித்துவமான பிரத்யேக அணுகுமுறையாக அப்போலோ ரெக்டல் கேன்சர் (ARC) சிகிச்சை செயல்திட்டத்தை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. மலக்குடலை அகற்றாமல் தக்கவைப்பது மீது சிறப்பு கவனம் மற்றும் கீமோரேடியோதெரபி, புரோட்டான் தெரபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை உட்பட மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ARC செயல்திட்டம், இந்நாட்டில் வழங்கப்படும் மலக்குடல் புற்றுநோய்க்கான சிகிச்சையை புரட்சிகரமாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்போலோ மலக்குடல் புற்றுநோய் நோயாளிகளின் தனித்துவமான தேவைகளை கவனத்தில் கொள்ளும் இந்த பிரத்யேக முன்னெடுப்பு, சாத்தியமுள்ள மிகச்சிறந்த விளைவுகளை உறுதி செய்ய விரிவான மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய சிகிச்சையினை வழங்குகிறது. அப்போலோ ஹாஸ்பிட்டல் எண்டர்பிரைஸ் லிமிடெட்-ன் நிறுவனர் – சேர்மன் டாக்டர். பிரதாப் சி ரெட்டி, ARC செயல்திட்ட மையத்தை, குரூப்…

மேலும் படிக்க

Doctor Vikatan: ஒவ்வொரு முறை அடிபட்டு, காயம் ஏற்படும்போதும் TT ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமா? |Doctor Vikatan: Is TT Vaccine essential for all wounds?

பத்து வருடங்களுக்கொரு முறை ஒரு பூஸ்டர் டோஸ் டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். எல்லாக் காயங்களுக்கும் டெட்டனஸ் ஊசி போட வேண்டுமா என்பது அந்தக் காயத்தைப் பொறுத்தது. நீங்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுள்ளீர்களா என்பது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். காயம்பட்டதும் மருத்துவரை அணுகினால், அந்தக் காயத்தில் டெட்டனஸ் பாக்டீரியா தொற்ற வாய்ப்பு உள்ளதா, இல்லையா எனப் பார்த்து, ஊசி தேவையா, தேவையில்லையா என்பதை முடிவு செய்வார். TT Vaccine: பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டிருந்தாலும்… ஒருவேளை நீங்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டிருந்தாலும், அந்தக் காயம் டெட்டனஸ் தொற்றுக்கு உள்ளாகலாம் என மருத்துவர் நினைத்தால் ஊசி போட்டுக் கொள்வதில் தவறில்லை. லேசான காயம்தான், அதில் அழுக்கு சேரவில்லை, தவிர, பத்து வருடங்களில் நீங்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்ற நிலையில் ஊசி தேவையில்லை. கர்ப்ப காலத்திலும் இந்த…

மேலும் படிக்க