சனி தோஷம் நீக்கும் ஸ்லோகம்

நீதியை எடுத்துரைக்கும் சனி பகவாஅன், நம்முடைய கர்ம வினைக்கேற்ற பலனை எப்போதும், எந்த நேரத்திலும் தர தயங்குவதில்லை. அதனால் சனியின் அமைப்பால் ஏற்படும் தோஷத்தால் பல துன்பங்கள் அனுபவிக்க வேண்டியுள்ளது. சனி தோஷம் நீங்கள் எளிய ஸ்லோகம் இதோ. ஏழரைச்சனி மற்றும் சனீஸ்வர கிரகம் சார்ந்த பிற தோஷங்களால் கஷ்டப்படுபவர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சனிக்கிழமை அன்று சனி ஹோரையில் ஜெபிக்கத் துவங்கி, தினமும் குறைந்தது 3 தடவை ஜெபித்து வர சனீஸ்வரர் அருள் கிட்டும். சனீஸ்வர ஸ்லோகம்:- கோணஸ்த பிங்களோ பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்தகோ யமஹ: |சௌரி சனைச்சரோ மந்த பிப்பலாதேன சம்ஸ்துதஹ: |நமஸ்தே கோண ஸம்ஸ்தாய பிங்களாய நமோஸ்துதே

மேலும் படிக்க

உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று தெரியுமா?

கணநாயகாஷ்டகம்

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது. இதனால் தடையில்லாமல் செய்யப் போகிற காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த வகையில் நம்முடைய ஆசைகள் நிறைவேறுவதற்கு, பாவங்கள் நீங்கி நற்கதி அடைவதற்கு இந்த கணநாயகாஷ்டகத்தை எப்படி படிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். விநாயகருடைய மந்திரங்களில் மிக முக்கியமான மந்திரமாக இருக்க கூடிய இந்த கணநாயகாஷ்டகம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி மற்றும் புதன் கிழமைகளில் வெள்ளருக்கு மற்றும் அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபட எத்தகைய வேண்டுதலும் வேண்டியபடி தடையில்லாமல் பலிக்கும் என்கிறது ஆன்மீகம். விநாயகருக்கும், அரச மரத்திற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு.…

மேலும் படிக்க

கிழமைகளும்… விரத பலன்களும்…

Daily Fasting Benefits

ஒவ்வொரு கிழமைகளிலும் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம். ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம். திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். புதன்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.…

மேலும் படிக்க

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

Hanuman-Pancharatnam

அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் ‘ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக… வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம் ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் கருத்து: எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன். தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் கருத்து: பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன். ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம் கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே கருத்து: மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல்…

மேலும் படிக்க

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

Kandha Guru Kavasam

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்சரவணபவ குகா சரணம் சரணம் …… (10) குருகுகா சரணம் குருபரா சரணம்சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவேஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமேதத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …… (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனேஅறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதாஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ …… (20) காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதாபோற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதாபோற்றி போற்றி ஸ்கந்தா போற்றிபோற்றி போற்றி முருகா போற்றிஅறுமுகா போற்றி அருட்பதம்…

மேலும் படிக்க

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

Varahi Amman 108 potri

பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி (108 varahi amman potri).. வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன. ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி ஓம் வாராஹி போற்றிஓம் சக்தியே போற்றிஓம் சத்தியமே போற்றிஓம் ஸாகாமே போற்றிஓம்…

மேலும் படிக்க

108 ஐயப்பன் சரணம்

ஐயப்பன்

1.  ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா5.  ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா 6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா 11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா13. ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா14. ஓம் அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 16. ஓம் அம்பலத்து அரசனே…

மேலும் படிக்க

தினமும் ஸ்கந்த குரு கவசம் சொன்னால் தீரும் பிரச்சனைகள்

ஸ்கந்த குரு கவசம்

செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது. ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் ஸெளம் நமஹ எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள். தினமும் கந்தசஷ்டிகவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும்…

மேலும் படிக்க

குடும்பத்தில் பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன தெரியுமா? மறந்தும் இதை செய்ய மறக்காதீர்கள்!

குபேரன்

குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், பணத் தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உயர மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். செல்வ கடவுளாக இருக்கும் குபேரனை வழிபடுவது கூட செல்வ செழிப்பை அதிகரிக்க செய்யும் ஒரு முக்கிய வழிபாடு ஆகும். குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்க, தன தானியம் பெருக செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள். பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். அதே போல குரு பகவான் வழிபாடு வியாழன் கிழமையில் செய்ய காரிய தடை அகன்று நல்ல விஷயங்கள் நடைபெறத் துவங்கும். உங்கள் படுக்கை அறை அமைப்பு, அங்கு நீங்கள் பணப்பெட்டியை வைத்திருக்கும் திசை ஆகியவை குபேரனுக்கு உகந்த…

மேலும் படிக்க

விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், நீங்கள் நினைத்தது 7 நாட்களில் நடக்கும்

Vinayagar

நினைத்ததை நினைத்த மார்க்கத்தில் நடத்தி தரக்கூடிய சக்தி விநாயகர் வழிபாட்டிற்கு உண்டு. ஏதாவது ஒரு விஷயத்தை நாம் புதியதாக தொடங்குகின்றோம் என்றால், அந்த காரியம் நல்லபடியாக முடிவதற்கு விநாயகரின் ஆசிர்வாதம் கட்டாயம் தேவை. பெரும்பாலும் இது நம் எல்லோருக்கும் தெரியும். வீட்டில் வேறு ஏதாவது தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள், ஹோமங்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வணங்குவது தான் நம்முடைய வழக்கம். விக்னங்களை நீக்கும் விநாயகர் வழிபாட்டில் பிரத்தியேகமான ஒரு வழிபாட்டைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வழிபாட்டு முறைக்கு நமக்கு கட்டாயம் தேவையான பொருள் எருக்கம் பூ. ஏழு நாட்களும் விநாயகருக்கு இந்த பூஜையை செய்யும் போது நமக்கு கட்டாயமாக எருக்கம்பூ தேவை. உங்களுடைய வீட்டின் அருகில் எருக்கஞ்செடி இருந்தால் அந்த செடியில் இருந்து தினமும் 5 எருக்கன் பூக்களை முந்தைய நாளே…

மேலும் படிக்க