உங்கள் ஆன்மாவை வளப்படுத்த கோயம்புத்தூரில் உள்ள 12 கோவில்கள்

வார இறுதி என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல, அது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியான உணர்வு. தொழில் வல்லுநர்கள் அல்லது மாணவர்களே, நீண்ட மற்றும் சோர்வான வாரத்திற்குப் பிறகு புத்துயிர் பெறுவதற்கான அற்புதமான வார இறுதித் திட்டங்களை நாம் அனைவரும் கொண்டுள்ளோம். நம்மில் சிலர் சிலிர்ப்பான மற்றும் சாகச வார இறுதி நாட்களைத் திட்டமிடுகிறோம், சிலர் நம் மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு பெற அமைதியான சூழலைத் தேர்வு செய்கிறோம். இந்த நேரத்தில் அமைதியான வார இறுதியை கழிக்க நீங்கள் திட்டமிட்டால், கோயம்புத்தூர் செல்ல வேண்டிய இடம் . தென்னிந்தியாவில் இருப்பதால், பல வரலாற்றுச் செழுமையான மற்றும் அற்புதமான கோயில்கள் உள்ளன, இது ஒரு மயக்கும் அனுபவத்திற்காக உங்களை வரவேற்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், நகரத்தின் ஆன்மாவில் இருக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான இந்து கலாச்சாரத்தில் திளைக்க…

மேலும் படிக்க

திருப்பதி மலை பற்றிய அரிய தகவல்

Tirupati Tirumala Temple

திருமலை திருப்பதி (tirumala tirupati) ஏழுமலையான் திருக்கோவில் இந்திய அளவில் மட்டுமின்றி உலகத்திலேயே அதிக வருமானம் பெறும் இந்து கோவிலாகவும், வருடம் முழுவதும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாகவும் உள்ளது. பல அதிசயங்களையும், அற்புதங்களையும், அபூர்வ சக்திகளையும் உள்ளடக்கியது திருமலை. இந்த மலையே சந்திரகல்லால் ஆனது என சொல்லப்படுகிறது. அதனால் தான் இங்கு அதிகமானவர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. திருமலை, சந்திரன் மற்றும் குபேரனின் ஆதிக்கம் நிறைந்த இடமாகும். சந்திரனுக்குரிய தெய்வமாக விளங்குபவர் திருமால். அதனால் திருமலை திருப்பதி சந்திர பரிகார தலமாக உள்ளது. இங்கு சுக்கிரன் மற்றும் குபேரனின் ஆதிக்கம் நிறைந்திருப்பதாலேயே திருமலையில் உண்டியலில் பணம் கோடிக் கணக்கில் கொட்டுவதாக சொல்லப்படுகிறது. திருமலை திருப்பதி : உலகின் பணக்கார கடவுளாக இருக்கும் திருப்பதி வெங்கடேஷ பெருமாள் ஏராளமானவர்களுக்கு குலதெய்வமாக இருந்து வருகிறார். கலியுகத்தில் கேட்டதை…

மேலும் படிக்க

திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில்

திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில் (Thirukodiyalur saneeswaran temple) பற்றிய சிறப்பு பதிவு! கொடியவன் என்று அழைக்கப்படும் சனீஸ்வர பகவான் பிறந்த­­ இடத்திற்கு அந்தப் பெயரையே வைக்கப்பட்டுள்ள திருக்கொடியலூர் சனீஸ்வரர் பற்றிய சிறப்பு பதிவு! மக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும். நாம் அனைவரும் ‘எனக்கு இது வேண்டும்’ என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம். வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம். அதே வேளையில் எதிர்பாராத விதமாக நாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு, நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். அப்படியொரு பாக்கியத்தை வழங்ககூடிய தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள…

மேலும் படிக்க

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். பாண்டிச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7913 சதுர அடி பரப்பளவில் இக்கோவில் பரந்து விரிந்துள்ளது. மணலைக் குறிக்கும் ‘மணல்’ மற்றும் கடலுக்கு அருகில் உள்ள குளத்தைக் குறிக்கும் ‘குளம்’ ஆகிய இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து மணக்குள என்ற பெயர் வந்தது. மணக்குள விநாயகர் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. இன்று இக்குளம் இல்லை. ஆனாலும் மூலவருக்கு அருகே இடது புறத்தில் ஒரு சிறிய சதுர அளவில்…

மேலும் படிக்க

அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில்- திருநெல்வேலி

அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில்- திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள்  அழகு நாச்சியம்மன். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி. அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன் படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு…

மேலும் படிக்க

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில்

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில்

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது. சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொடுமுடி. பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும். மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி…

மேலும் படிக்க

ஆனந்த வாழ்வருளும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம். மூலவர்: வடபத்ரசாயி, ரெங்கமன்னார் தாயார்:ஆண்டாள், கோதைநாச்சி தீர்த்தம்: திருமுக்குளம், கண்ணாடி தீர்த்தம் * ரெங்கமன்னார் இங்கு சுயம்புவாக இருக்கிறார். வலது கையில் தற்காப்பு கோல், இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள், காலில் செருப்பு அணிந்து ராஜகோலத்தில் அருள்கிறார். * ஆண்டாளின் அவதாரத் தலம் இது. ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் மகளாக இத்தலத்தில் ஆண்டாள் அவதரித்தார். * புரட்டாசியில் நடைபெறும் பிரமோற்சவத்திற்கு, ஆண்டாள் மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு அனுப்பப்படும். * ஆண்டாள் திருக்கல்யாணத்திற்கு, திருப்பதியில் இருந்து பட்டுப்புடவை கொண்டுவரப்படும். * மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவார். * மார்கழியில் தன்னுடைய பிறந்த வீட்டுக்கு ஆண்டாள் செல்வார். அப்போது கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால்,…

மேலும் படிக்க

கரூர் கல்யாண பசுபதீசுவரர் திருக்கோவில்

Karur Pasupateeswarar Temple

கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். கரூரில் அமைந்துள்ளது, பசுபதீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறு புறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணப்படுகிறது. மூலவர்: பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்) அம்மன்: அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி தல விருட்சம்: வஞ்சி மரம் தீர்த்தம்: தாடகை தீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி) பதிகம் பாடியவர்கள்:- திருஞானசம்பந்தர்- தேவாரம், கருவூரார்- திருவிசைப்பா, அருணகிரிநாதர் – திருப்புகழ். கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில்…

மேலும் படிக்க

கரூர் கல்யாண பசுபதீசுவரர் திருக்கோவில்

Karur Pasupateeswarar_temple

கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். கரூரில் அமைந்துள்ளது, பசுபதீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறு புறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணப்படுகிறது. மூலவர்: பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்) அம்மன்: அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி தல விருட்சம்: வஞ்சி மரம் தீர்த்தம்: தாடகை தீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி) பதிகம் பாடியவர்கள்:- திருஞானசம்பந்தர்- தேவாரம், கருவூரார்- திருவிசைப்பா, அருணகிரிநாதர் – திருப்புகழ். கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில்…

மேலும் படிக்க

11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்

11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்

முருகப்பெருமானுக்காக அமைந்த சுவாமிநாத சுவாமி ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். ராமநாதபுரம் அருகே உள்ளது, குண்டுக்கரை என்ற ஊர். இங்கு சுவாமிநாத சுவாமி கோவில் இருக்கிறது. முருகப்பெருமானுக்காக அமைந்த இந்த ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்து தங்கியதாக தல புராணம் சொல்கிறது. இங்கு முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது. ராமநாதபுரம் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்கர சேதுபதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தினமும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவது வாடிக்கை. அவரது கனவில் ஒருநாள் தோன்றிய முருகப்பெருமான், தற்போது குண்டுக்கரையில் இருக்கும் முருகன் சிலையை எடுத்து விட்டு, புதியதாக…

மேலும் படிக்க