Horoscope Today, December 1, 2023: Your Daily Astrological Prediction for All Zodiac Signs

ARIES Ganesha says today the environment around you will be cheerful and harmonious. You will continue to receive positive news throughout the day, both from home and outside, keeping your spirits high. However, there’s a possibility of an argument with your spouse. Handle the situation calmly and avoid escalating it. If you’re planning to start a new business, there’s a strong indication of success. Aries natives should embrace opportunities to help others, as it will bring them immense satisfaction. You may consider donating to charitable causes or volunteering to serve…

மேலும் படிக்க

“உள்கட்டமைப்புத் தொழில் துறையினர் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும்” – நாராயண மூர்த்தி | Infrastructure sector should work 3 shifts Narayana Murthy

பெங்களூரு: இளைஞர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் உள்கட்டமைப்புத் தொழில் துறையினர் 3 ஷிப்ட் வேலை செய்ய வேண்டும் என தற்போது அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் ஜெரோதா இணை நிறுவனம் நிகில் காமத் உடனான உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “உள்கட்டமைப்பு தொழில் துறையில் ஈடுபட்டு வரும் நபர்கள் 3 ஷிப்ட் வேலை பார்க்க வேண்டும். காலை 11 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு திரும்பும் ஒரே ஒரு ஷிப்ட் மட்டும் அவர்கள் வேலை பார்க்க கூடாது. பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி சாலையில் அதை தான் நான் பார்க்கிறேன். ஆனால், பிற நாடுகளில் இரண்டு ஷிப்ட்டில் வேலை பார்க்கிறார்கள்.…

மேலும் படிக்க

சூப் குடிப்பது ஆரோக்கியம் என நம்புபவரா நீங்கள்? இந்தத் தகவல்கள் உங்களுக்குத்தான்… |#ExpertOpinion | Are you a daily soup drinker? Don’t miss out on this! – Expert Opinion

சரியான முறையில் சூப் தயாரிக்க, சில குறிப்புகள்! * அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது. * அசைவ சூப் தயாரிக்கும்போது, அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம், அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம். * சூப்பில் நறுமண இலைகள் சேர்க்கும்போது, அவற்றை அரைத்து உபயோகப்படுத்த வேண்டாம். அப்படியே இலைகளாக உபயோகப்படுத்தவும். முடிந்தால் அவற்றின் சாற்றை மட்டும் பயன்படுத்தவும். அரைத்துப் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட அந்தப் பொருளின் மணமும் சுவையும் சூப்பில் அதிகரித்துவிடும். அது, சூப்பின் சுவையை மாற்றிவிடும். * காய்கறி சூப் தயாரிக்கும்போது, காய்கறி தேர்வில் கவனமாக இருக்கவும். எதிரெதிர் வண்ணங்களிலிருக்கும் காய்கறிகளை ஒரே சூப்பில் சேர்த்துவிடாதீர்கள். அது சுவை, மணம் என…

மேலும் படிக்க

உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேமிப்பேன்… ஏன் தெரியுமா? – உலகின் மிக நீளமான முடி உடைய பெண்..! | Indian Woman With Longest Hair sets Guinness World Record

நீளமான முடியின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளவர், தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவுவதாகக் கூறியுள்ளார். நீளமான முடியைக் கழுவவே 30 – 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனைத் தாண்டி தலையை உலர்த்தி, ஜடை போட மூன்று மணிநேரம் வரை பிடிக்கிறது. ஒரு நாள் எனக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டது. உதிரும் முடிகளை கீழே போடுவது என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து நான் எனது உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேகரிக்கத் தொடங்கினேன். சுமார் 20 வருடங்களாக சேமித்து வருகிறேன். இப்போது என்னிடம் உதிர்ந்த நிறைய முடிகள் இருக்கின்றன. 1980-களில் இந்தி நடிகைகள் செய்து வந்த தனித்துவமான சிகை அலங்காரங்களால் ஈர்க்கப்பட்டேன். என் தலைமுடியைப் பார்க்கும் மக்கள் வியந்துபோவார்கள். சிலர் எனது தலைமுடியைத் தொட்டு என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். கூந்தல் பராமரிப்புக்காக நான்…

மேலும் படிக்க

காட்டுப் பன்றிகள், மான்களால் தொடரும் பயிர் சேதம்: உணவு உற்பத்தி பாதிக்கும் அபாயம் @ விருதுநகர் | Continued Crop Damage by Wild Boars, Deer: Threat to Food Production on Virudhunagar

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப் பன்றிகள், மான்களால் தொடரும் பயிர் சேதத்தை கட்டுப் படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உணவு தானிய உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் பயிர் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் சராசரியாக 6,500 ஹெக்டேரில் நெல் பயிர், 5 ஆயிரம் ஹெக்டேரில் சோளம், 350 ஹெக்டேரில் கம்பு பயிர், 20 ஹெக்டேரில் கேழ்வரகு, 10 ஹெக்டேரில் தினை, 13 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச் சோளம், 800 ஹெக்டேரில் சிறு தானியங்கள், 2 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து, 2,500 ஹெக்டேரில் பச்சை பயிறு, 500 ஹெக்டேரில் துவரை , 100 ஹெக்டேரில் இதர பருப்பு…

மேலும் படிக்க

ஓசூரின் 30 கிராமங்களில் 300 விவசாயிகள் பலன் பெறும் திட்டம்: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தகவல் | Increase in additional income of producers through milk procurement scheme: TVS Motor

ஓசூர்: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சமூகநல செயல்பாட்டுப் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட்டின் பால் கொள்முதல் திட்டத்தின் மூலம் ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ.13 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company) மற்றும் சுந்தரம் – கிளேட்டன் லிமிடெட் (Sundaram-Clayton Limited) ஆகியவற்றின் சமூக நல செயல்பாட்டுப் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (SST), கிராமப்புற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சுயஉதவி குழுக்களை உருவாக்கி, அந்த சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளுக்கான இணைப்பு வசதியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புற பெண்களுக்கு வருவாய் ஈட்டும் திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய 11,000 பெண்கள் கால்நடைகள் மூலம் தங்களது வாழ்வாதாரத்துக்கு அவசியமான வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்த…

மேலும் படிக்க

பூப்பெய்தாத பெண்கள்: காரணம், தீர்வு என்ன? திருமணம் செய்துகொள்ளலாமா? | Delayed Puberty

பூப்பெய்தாமை… அரிதினும் அரிதாக சிலருக்கே இந்தப் பிரச்னை நிகழ்கிறது. இது ஏன் நடக்கிறது, இதற்குத் தீர்விருக்கிறதா? ‘“இன்றைக்கு 50+ ல் உள்ள பல பெண்கள் 15 அல்லது 16 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இவர்களின் மகள்கள் 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இந்தக் காலச் சிறுமிகளில் சிலர் பத்து வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். மரபணு, உணவு, சுற்றுச்சூழல் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 14 வயதுக்கும் மேல் உங்கள் மகள் பூப்பெய்தவில்லை என்றால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைப் பார்க்க வேண்டும். பூப்பெய்தாமை என்பது அரிதான பிரச்னை என்றாலும், பெரும்பாலும் இதைச் சரி செய்து விடலாம்…’’ என்று சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் சிறுநீரகவியல் நிபுணருமான ராஜ மகேஸ்வரி பகிர்ந்த தகவல்கள் இங்கே… Teen girl பெண் குழந்தைகள் நலனில் அக்கறை… செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தமிழகம் 2-வது…

மேலும் படிக்க

`தோழிகளுக்குப் பிடிக்கல, எனக்கும் மாப்பிள்ளையப் பிடிக்கல'… திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு… பூவை தொடுத்து சேலை உடுத்தி பொண்ணும் வந்தாச்சு”… அப்புறம் என்ன கல்யாணம் தான் என்று நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை.  அங்குதான் ட்விஸ்டே இருக்கிறது. பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில், திருமணம் செய்து கொள்ளும் ஜோடியைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பிடித்து இருந்தால்தான் திருமணம் நல்லபடியாக நடந்து முடியும். நல்ல விஷயத்தை குறித்து பேச்சு எடுத்தாலே அதுவரை இல்லாத சொந்தபந்தங்கள் கூட பத்திரிகை முதல் பந்தி வரை குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். தாலி கட்டும் கடைசி நேரத்தில் கூட `நிறுத்துங்க’ என்று ஸ்லோமோஷனில் யாராவது ஓடிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. marriage call off (Representational image) நேரத்தை மிச்சப்படுத்தும் ரெடி டு குக் உணவுகள்… ஆபத்தை அறிவீர்களா? `கோபம் அதிகமாக வருகிறது’,…

மேலும் படிக்க

“ஸ்மார்ட் மீட்டர்” மூலம் மின் கணக்கீடு துல்லியமாக இருக்கும்: தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தினர் தகவல் | Electricity Billing will be Accurate with “Smart Meter”: TN Electricity Consumers Association Informs

கோவை: நெட்வொர்க் தொடர்பான பிரச்சினைகள், தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்படுத்தப்பட்டால், நுகர்வோருக்கு மிகுந்த பயன் தரும் என, நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சில சமயங்களில் தவறுகள் நடப்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஆளில்லாமல் மின் பயன் பாட்டைக் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. மூன்று கட்டங்களாக இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் என்.பிரதீப் கூறியதாவது: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால் தொழில்முனைவோர் தேவையின்றி அதிக மின்நுகர்வு செய்யப்படும் இடங்களை கண்டறிந்து ஆற்றல் சேமிப்பு மற்றும் மின் கட்டணத்திற்கு செலவிடும்…

மேலும் படிக்க

No Shave November, Movember: “புற்றுநோய் ஆண், பெண் பேதம் பார்க்காது!”-காவேரி மருத்துவமனை அலெர்ட்! |Awareness on Men’s Cancer by Kauvery Hospital

“ஆண்கள் தங்களது உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். மேலும் அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை குறித்து மருத்துவர்களிடம் பேச தயக்கம் காட்டக்கூடாது. புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் அதை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் ரெகுலர் செக் அப்களை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்” என்று கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர் மருத்துவர் வைத்தீஸ்வரன் கூறினார். No Shave November, Movember காவேரி மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறை தலைவர் மருத்துவர் வேல்முருகன் தேசிங் பேசியாதாவது, “புற்றுநோய் ஆண், பெண் என யாருக்கும் பாகுபாடு காட்டாது. அதனால் ஆண்களும் தங்களது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது அவசியம்” என்று கூறினார். காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் மற்றும் தலைமை கதிர்வீச்சு சிகிச்சையியல் இயக்குநர் மருத்துவர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காது, மூக்கு, தொண்டை பிரிவின் அறுவை…

மேலும் படிக்க