தமிழக இளைஞரை நேரில் அழைத்து பாராட்டிய சுந்தர் பிச்சை!

விவசாயிகளுக்கு வேளாண் தகவல்களை தருவதற்காக மொபைல் செயலி நடத்திவரும் தமிழ்நாட்டு இளைஞர் செல்வ முரளியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரைச் சேர்ந்த செல்வ முரளி, பி.எஸ்சி கணிணி அறிவியல் படித்துள்ளார். இவரது தந்தை விவசாயப் பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். ஆனாலும், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. தனது தந்தையும், அவருக்கும் வேளாண் பொருட்களை தரும் விவசாயிகளும் லாபம் கிடைக்காமல் துயரப்படுவதைக் கண்ட செல்வ முரளி, விவசாயம் இன் தமிழ் என்னும் மொபைல் செயலியை 10 வருடங்களுக்கு முன்பு உருவாக்கினார். விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் சார்ந்த தகவல்களை புள்ளிவிவரங்களுடன் அந்த செயலியில் பதிவேற்றி வந்தார். தற்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் அக்ரிசக்தி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துவதோடு, மின்னிதழையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும்…

மேலும் படிக்க

கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நற்செய்தி.. PM Kisan திட்டத்தில் அதிகரிக்கப்படும் நிதி..!?

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு விரைவில் ஒரு நற்செய்தி கிடைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது என்னவென்றால் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை விரைவில் அரசு அதிகரிக்கலாம் என்பதே. இதற்கிடையே இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000. ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மூன்று சம தவணைகளாக 4 மாத இடைவெளியில் தலா ரூ.2000, அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) இணைந்த விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் (BKS) சமீபத்தில் நாட்டின் தலைநகர் டெல்லியில் நாடு தழுவிய கண்டன பேரணியை நடத்தியது. இந்த போராட்டத்தின் போது நாட்டிலுள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்த மேலும் பல நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுக்க வலியுறுத்தப்பட்டது.…

மேலும் படிக்க