உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று தெரியுமா?

கணநாயகாஷ்டகம்

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது. இதனால் தடையில்லாமல் செய்யப் போகிற காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த வகையில் நம்முடைய ஆசைகள் நிறைவேறுவதற்கு, பாவங்கள் நீங்கி நற்கதி அடைவதற்கு இந்த கணநாயகாஷ்டகத்தை எப்படி படிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம். விநாயகருடைய மந்திரங்களில் மிக முக்கியமான மந்திரமாக இருக்க கூடிய இந்த கணநாயகாஷ்டகம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி மற்றும் புதன் கிழமைகளில் வெள்ளருக்கு மற்றும் அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபட எத்தகைய வேண்டுதலும் வேண்டியபடி தடையில்லாமல் பலிக்கும் என்கிறது ஆன்மீகம். விநாயகருக்கும், அரச மரத்திற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு.…

மேலும் படிக்க

அதிகமான பண வரவை கொடுக்கக்கூடிய அதிர்ஷ்ட குளியல். தினம் தினம் இந்த தண்ணீரில் குளித்தால் பண மழையில் நனையலாம்!

Pomegranata bath for wellness

நம் கையில் இருக்கக்கூடிய பணம் பல மடங்காக பெருகாமல், அப்படியே இருந்தாலும் அதன் மூலம் நமக்கு எந்த லாபமும் கிடையாது. பணத்தை செலவு செய்ய போவதும் கிடையாது. கையில் இருக்கும் பணத்தை ஏதாவது முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க போவதும் கிடையாது. பின்பு பணம் இருந்து என்னதான் பயன். ஒன்று, கையில் பணம் இருந்தால் அதை சந்தோஷமாக செலவு செய்து நல்லபடியான வாழ்க்கையை வாழுங்கள். அப்படி இல்லை என்றால் அந்த பணத்தை பிரயோஜனமாக வேறு ஏதாவது ஒரு காரியத்திற்கு பயன்படுத்துங்கள். எதுவுமே செய்யாமல் பெட்டிக்குள் பூட்டி வைக்கும் பணம்மும், வெறும் காகித பேப்பருக்கு சமம் தான். பணம் என்றாலே அது பயன்பாட்டிற்கு தான். முதலில் நீங்கள் இதை உணர்ந்து கொள்ளுங்கள். பதுக்கி பதுக்கி வைத்து பணத்தை எதுவுமே செய்யப் போவது கிடையாது. இன்று காலம் இருக்கக்கூடிய சூழ்நிலையில், இன்று இருக்கக்கூடிய மனிதர்கள் நாளை…

மேலும் படிக்க

திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில்

திருக்கொடியலூர் சனீஸ்வரர் கோவில் (Thirukodiyalur saneeswaran temple) பற்றிய சிறப்பு பதிவு! கொடியவன் என்று அழைக்கப்படும் சனீஸ்வர பகவான் பிறந்த­­ இடத்திற்கு அந்தப் பெயரையே வைக்கப்பட்டுள்ள திருக்கொடியலூர் சனீஸ்வரர் பற்றிய சிறப்பு பதிவு! மக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும். நாம் அனைவரும் ‘எனக்கு இது வேண்டும்’ என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம். வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம். அதே வேளையில் எதிர்பாராத விதமாக நாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு, நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். அப்படியொரு பாக்கியத்தை வழங்ககூடிய தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள…

மேலும் படிக்க

இந்த நாளில் பூஜை பொருட்கள் தேய்த்தால் செல்வம் வீட்டில் தங்காது…

when to clean pooja items

பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. பூஜைப் பொருட்களில் பச்சை நிறத்தை எந்த காரணம் கொண்டும் படிய விடக்கூடாது. பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பொருட்களை மிகவும் கூர்மையானதாக வாங்கக் கூடாது. எல்லா விஷயத்திலும் நாள், நட்சத்திரம், கிழமை போன்றவற்றை பார்த்து செய்யும் பொழுது அதில் தடைகள், தாமதங்கள் ஏற்படுவது இல்லை. நம் முன்னோர்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கும், ஒவ்வொரு விதமான பலன்களும் கூறிச் சென்றுள்ளனர். அந்த வகையில் விளக்கு, பூஜை சாமான் போன்றவற்றை எந்த நாளில் தேய்க்கக் கூடாது? இதனால் செல்வம் சேருவது தடைப்படுமா? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்களில் ஒரு சில பொருட்களை வாங்கினால் நல்லது என்றும், வாங்கக் கூடாது என்றும் கூறப்படுவது உண்டு. அது போல பூஜை பொருட்களை தேய்ப்பது என்பதற்கும் ஒரு…

மேலும் படிக்க