பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது. மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். பாண்டிச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7913 சதுர அடி பரப்பளவில் இக்கோவில் பரந்து விரிந்துள்ளது. மணலைக் குறிக்கும் ‘மணல்’ மற்றும் கடலுக்கு அருகில் உள்ள குளத்தைக் குறிக்கும் ‘குளம்’ ஆகிய இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து மணக்குள என்ற பெயர் வந்தது. மணக்குள விநாயகர் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. இன்று இக்குளம் இல்லை. ஆனாலும் மூலவருக்கு அருகே இடது புறத்தில் ஒரு சிறிய சதுர அளவில்…

மேலும் படிக்க

அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில்- திருநெல்வேலி

அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில்- திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள்  அழகு நாச்சியம்மன். நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழும் குற்றாலம், தென்காசிக்கு இடையில் அமைந்துள்ளது சிந்தாமணி கிராமம். மூன்று போக நெல் விளையும் முத்தான பூமி. அங்கு தனது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை வெட்டி, திருத்தி அதிலும் பயிர் வைக்க எண்ணினார் குப்பாண்டி. அதன் படி ஐப்பசி மாதம் வளர்பிறையில் அந்த நிலத்தில் ஏர் கட்டினார். அந்த நிலத்தின் தென்பகுதியில் ஏர் வரும் போது கலப்பையின் கொழுவில் ரத்தம் படிந்திருந்தது. அதைக்கண்ட குப்பாண்டி பாம்பு…

மேலும் படிக்க

ஓங்காரம் ஓம்

powe of om chanting

ஓம் என்பதிலே எல்லா வேதங்களும் மந்திரங்களும் பிறந்தன. ஆதலால் இதனைச் செபித்தால் எல்லா மந்திரங்களையும் செபிப்பதால் உண்டாகும் பயனை அடையலாம். “ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி  ஈதெழுத் தாலே இசைந்தங் கிருவராய்  மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை  மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே”  -திருமூலர் “ஓ” என்னும் முன்னெழுத்தாலே உலகம் எல்லாம் கலப்பால் தானாகி; “ஓ” என்பதை பிரித்தால் அ+உ என்ற ஈரெழுத்தாய் நிற்கும்.அது சிவன், சிவை என்னும் இரு பொருளாய் தோற்றம் பெரும்.மூன்றெழுத்தாகிய அ+உ+ம் என்பவற்றால் தோன்றுகின்ற பேரோளியினை “ஓம்” என்பதின் கடையெழுத்தாகிய ம் என்னும் மகர எழுத்தால் உயிர்க்கு மயக்கம் வந்து பொருந்தும்.“அ” என்றால் சூரியன். “உ” என்றால் சந்திரன். “ம்” என்றால் அக்கினி அதாவது “ஓம்” என்பது எல்லா பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுயவடிவமாகும்.ஓம் என்னும் மகா மந்திரம் உயிர்களை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் ஆற்றலை கொண்டிருப்பதால்…

மேலும் படிக்க

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது

sleeping positions benefits

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது. Sleeping Positions Benefits தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும் இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று. சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண் இதன் விளக்கம் :- இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.…

மேலும் படிக்க

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில்

கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில்

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது. சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொடுமுடி. பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும். மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி…

மேலும் படிக்க

மனக்குறைகளை தீர்க்கும் ஏழு வியாழக்கிழமை விரதம்

ராகவேந்திரர்

ஏழு வியாழக்கிழமைகள் விரதம் கடைப் பிடித்தால் நம் மன குறைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான நிறைவு வாழ்க்கை அமையும். மகான் ஸ்ரீ ராகவேந்திரர் விரதத்துக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். விரதம் தொடங்கும் முதல் வியாழக்கிழமை காலையில் குளித்து, தூய ஆடை அணிந்து பூஜையை ஆரம்பிப்பக்க வேண்டும். பூஜைக்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம்,குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து வணங்க வேண்டும். நிவேத்தியமாக மங்களப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, பழம்,தேங்காய் முதலியவைகளை படத்தின் முன் வைத்த பின் பூஜையைத் தொடர வேண்டும். பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் மகான் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம்,குங்குமம்,துளசி மாலை சாத்த வேண்டும். அதே போல…

மேலும் படிக்க

இந்திய நாணயங்கள் அன்று முதல் இன்று வரை

Indian Currencies

இந்தத் தொகுப்பில் இந்திய நாணயங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். இந்திய ரூபாய் நாணயங்கள் (Coins of the Indian rupee) 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த அம்சமாக உள்ளன. செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர 50 பைசா (அதாவது 50 பைசா அல்லது ₹0.50), ₹1, ₹2, ₹5, ₹10. ஆகிய அனைத்து நாணயங்களும் தற்போது பழக்கத்தில் உள்ளன. இவை அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு காசாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. வரலாறு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் பிரித்தானிய அரசின் நாணய அமைப்பும் நாணயங்களும் இந்தியா குடியரசான 1950 ஆம் ஆண்டுவரை தக்கவைத்துக் கொள்ளப்பட்டன. இந்திய குடியரசு…

மேலும் படிக்க

இரும்புச்சத்து நிறைந்த கம்பு இடியாப்பம்

Tamil_News_Kambu-Idiyappam-Bajra-Idiyappam

அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது கம்பு. அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. தேவையான பொருட்கள் : கம்பு மாவு – 1 கப், தேங்காய்த்துருவல், வெல்லத் துருவல் – தலா 1 கப்,ஏலப்பொடி – சிறிது,நெய், உப்பு- தேவைக்கு. செய்முறை : கம்பு மாவில் உப்பு, தண்ணீர் தெளித்து பிசறி கொள்ளவும். இடியாப்ப அச்சில் கம்பு மாவை போட்டு இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெந்த கம்பு மாவில் தேங்காய் துருவல், வெல்லத்துருவல், நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். சத்து நிறைந்த கம்பு இடியாப்பம் ரெடி. வெல்லம் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் வெந்த இடியாப்பத்துடன் சட்னி, குருமா சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் படிக்க

நேர்மை வளையுது

பாரதிதாசன்

தொழிலாச்சு – உலகம்கொள்ளை யடிப்பவர்க்குநிழலாச்சு!வறுமைக்கு மக்கள்நலம்பலியாச்சு – எங்கும்வஞ்சகர் நடமாடவழியாச்சு! சோகச் சுழலிலேஏழைச் சருகுகள்சுற்றுதடா – கண்ணீர்கொட்டுதடாமோசச் செயலாலேமுன்னேற்றம் கண்டோரின்ஆசைக்கு நீதிஇரையாகுதடா – அன்பைஅதிகார வெள்ளம்கொண்டுபோகுதடா (சோக) பழந்துணி அணிந்தாலும்பசியாலே இறந்தாலும்பாதை தவறாதபண்பு உள்ளம்இருந்தநிலை மறந்துஇழுக்கான குற்றம்தன்னைப்புரிந்திட லாமென்றுதுணியுதடா – நேர்மைபொல்லாத சூழ்நிலையால்வளையுதடா

மேலும் படிக்க

புது நாளினை எண்ணி உழைப்போம்

பாரதிதாசன்

சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்சோம்பலில்லாமே ஏர் நடத்திகம்மாக் கரையை ஒசத்திக்கட்டிகரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிசம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத்தகுந்த முறையில் தண்ணீர் விட்டு நெல்லு வெளைஞ்சிருக்கு – வரப்பும்உள்ளே மறைஞ்சிருக்கு மண்ணைக் கிளறிக் குழியமைச்சுவாழைக் கன்னுகளை ஊடாலே வச்சுதண்ணி பெற அக்களை பறிச்சுச்சந்திர சூரியர் காண ஒழைச்சுஒண்ணுக்கு பத்தாக் கிளைவெடிச்சுகண்ணுக் கழகா நிண்ணு தழைச்சு இலை விரிஞ்சிருக்கு – காய்க்குலை சரிஞ்சிருக்கு பெண்: வாழை நிலைக்குது சோலை தழைக்குதுஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது? கூழைக் குடிக்குது; நாளைக் கழிக்குதுஓலைக் குடிசையில் ஒட்டிக் கிடக்குதுகாடு வெளைஞ்சென்ன மச்சான் – உழைப்போர்க்குகையுங்காலுந்தானே மிச்சம்? ஆண்: நாடு செழிச்சிட மாடா ஒழைச்சவன்நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்மூடாத மேனியும் ஓடா எளச்சவன்போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் – சிலநாள்அதுவுங் கிடைக்காமத் துடிக்கிறான் பெண்: மாடா உழைச்சவன் வீட்டினிலே – பசிவந்திடக்…

மேலும் படிக்க