சிவராத்திரி தேதிகள் 2022

Siva Rathiri Dates 2022

இந்துக்களால் கொண்டாடப்படும் விரதங்களில் ஒன்று சிவராத்திரி. இது சிவனுக்குரிய விரதங்களில் முக்கியமான விரதம். சந்திர சூரிய சுழற்ச்சிப்படி சிவராத்திரி கணக்கிடப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாதமும் பௌர்ணமி அடுத்து வரும் 13 – ஆவது நாள் இரவும் 14 -ஆவது நாள் பகலும் சிவராத்திரியை (அதாவது மாத சிவராத்திரி) குறிக்கும். ஓவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறையில்(கிருஷ்ண பட்ச) வரும் சிவராத்திரியை “மகா சிவராத்திரி” என்று அழைக்கப்படும். பல லட்ச பக்தர்கள் விரதம் இருந்து மகா சிவராத்திரியை கொண்டாடுகின்றனர். சிவராத்திரியன்று விரதமிருப்போர் மகாசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டுமே உணவருந்த வேண்டும். பின்பு மகாசிவராத்திரியன்று அதிகாலையில் குளித்து, திருநீறு தரித்துக்கொண்டு, சிவாலயம் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும். இரவு முழுக்க கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்துகொள்ளலாம். விரதம் முடித்த…

மேலும் படிக்க

அஷ்டமி நவமி தேதிகள் 2022

Asthami-Navami-Days-2022

அஷ்டமி அஷ்டமி என்பது ஒரு வடமொழி சொல். அஷ்ட என்றால் எட்டு என பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட சுழற்சி முறையில் எட்டாவது நாளாக வருவதால் அஷ்டமி என அழைக்கப்பட்டது. நமது மரபுவழிக் காலக் கணிப்பு முறைகளான சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அஷ்டமி கணிக்கப்பட்டுள்ளது. அமாவசை, அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி. பௌர்ணமி அடுத்து வரும் எட்டாவது திதி அஷ்டமி. அமாவாசைக்கு அடுத்த அஷ்டமியை சுக்கில பட்ச அட்டமி என்றும், பௌர்ணமி அடுத்து வரும் அஷ்டமியை கிருட்ண பட்ச அட்டமி என்றும் அழைக்கின்றனர். இந்துகள், அஷ்டமியில் பல பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். கிருஷ்ணன் ஆவணி மாதம் அஷ்டமி தினத்தில் அவதரித்தார் ஆகையால் இந்நாளையை ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என கொண்டாடுகின்றனர். த்ரிலோசன் அஷ்டமி என்ற பண்டிகையை, ஒடிசா மற்றும் வட இந்தியாவில் அஷ்டமி…

மேலும் படிக்க

கிருத்திகை தேதிகள் 2022

Kiruthigai Days 2022

ஓவ்வொரு மாதமும் சந்திரன் கார்த்திகை விண்மீன் மண்டலத்தை(ஆறு நட்சத்திரங்களாள் உருவானது) கடந்து செல்லும் நாளே ‘கிருத்திகை’ அல்லது ‘கார்த்திகை’ என்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமான் பிறந்தார். ஆகையால் ‘கார்த்திகேயன்’ என்றும் அழைக்கப்பெற்றார். முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி வழிபடுவது வழக்கம். ஓவ்வொரு மாதமும் கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். தை மாதத்தில் வரும் கிருத்திகை ‘தை கிருத்திகை’ என அழைக்கப்படுகிறது. தை கிருத்திகை தினத்தில் மக்கள் விரதம் இருந்து, பூஜை செய்து முருகனை வழிபடுவது வழக்கம். ஆடி மாதத்தில் வருவது ‘ஆடி கிருத்திகை’. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து புனித தீர்த்தங்களில் நீராடி பால்காவடி,…

மேலும் படிக்க

சங்கடஹர சதுர்த்தி தேதிகள் 2022

Sankasthi-Chaturthi

முழு முதற்கடவுளான விநாயகருக்கு உகந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம். சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை – துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும். விநாயகரை வழிபடுவதின் மூலம் ஒருவர் துன்பத்திலிருந்து விடுபடமுடியும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. சந்திரமானம் எனும் கால கணிப்பின்படி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. அதாவது தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி. இந்நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து பூஜை செய்வர். விநாயக விரதைகளில் ஒன்றாக கருதப்படுவது சங்கடஹர சதுர்த்தி . செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் முக்கியத்துவம் கொண்டது. செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை “அங்கராகி சதுர்த்தி” எனப்படும். மஹராஷ்டிராவிலும், தமிழ் நாட்டிலும் மக்கள் அங்கராகி சதுர்த்தியை சிறப்பாக…

மேலும் படிக்க

பிரதோஷம் நாட்கள் 2022 – Pradosham Dates 2022

Pradosham Days 2022

சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாளாக கருதப்படும் நாள் பிரதோஷம். மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்ச்சி முறையை வைத்து கணக்கிடப்படுள்ளது. அமாவாசை அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும். வளர்பிறையில் வரும் பிரதோஷம் சுக்ல பட்ச பிரதோஷம் ஆகும். பௌர்ணமி அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும். தேய்பிறையில் வரும் பிரதோஷம் கிருஷ்ண பட்ச பிரதோஷம் எனப்படும். புராணக் கதையில், செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும்படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். அவ்விஷம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை…

மேலும் படிக்க

கிழமைகளும்… விரத பலன்களும்…

Daily Fasting Benefits

ஒவ்வொரு கிழமைகளிலும் கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு ஒவ்வொரு பலன் உண்டு. அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம். ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம். திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும். புதன்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.…

மேலும் படிக்க

ஹைக்கூ கவிதைகள்

Haiku

உதிரும் வலி… விடுபடும் வரை! பயமின்றி பிணைக்கப்பட்ட பந்தம் … பலமிழப்பதில்லை!!! சுற்றமும் சூழ்ந்திருந்தாலும்…என் நினைவுகள் உன்னைச் சுற்றியே!!! விருப்பத்தின் ஆரம்பம்… மறுத்தலின் முடிவு! புரட்டிப் போட்டது புத்தகம் மட்டுமல்ல… நின் நினைவுகளும்! தேநீரின் தித்திப்பு போல.. தெவிட்டாத நின் நினைவுகள்! என் ஒவ்வொரு துளி நினைவிலும்… வீழ்ந்து நிரம்பும் தீரா பிம்பம் நீ! சரி செய்தாலும், சில வடுக்களின் ரணங்கள் மறைவதில்லை! அழையா விருந்தாளியாய்… அவ்வப்போது சில நினைவுகள்!!! தொலைத்தலும், தொலைதலுமே வாழ்க்கை!! திரியைப் பற்ற வைத்தாலும்… வெடிக்கு வேதனையில்லை!!! காற்றுக்கும் திசையுண்டு என்பதை… நின் விழிமொழியால் கண்டுகொண்டேன்! ஒரு காய்ந்து போன மரத்திலிருந்து கடைசியாக விடைபெறும் பறவை போலத்தான், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் நிலைமையும்! கேள்விகள், பதிலுக்காக எப்பொழுதும் காத்திருப்பதில்லை! மொழியில்லா நின் விழிப்பார்வையை, மொழிபெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பம்…காதல்!!! விடையறியா என் கேள்விகளுக்கு நின்…

மேலும் படிக்க

ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்

Hanuman-Pancharatnam

அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் ‘ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக… வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம் ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் கருத்து: எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகிய வற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன். தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் கருத்து: பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன். ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம் கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே கருத்து: மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல்…

மேலும் படிக்க

கந்த குரு கவசம் பாடல் வரிகள்

Kandha Guru Kavasam

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்சரவணபவ குகா சரணம் சரணம் …… (10) குருகுகா சரணம் குருபரா சரணம்சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவேஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமேதத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …… (15) அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனேஅறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதாஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ …… (20) காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதாபோற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதாபோற்றி போற்றி ஸ்கந்தா போற்றிபோற்றி போற்றி முருகா போற்றிஅறுமுகா போற்றி அருட்பதம்…

மேலும் படிக்க

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

Varahi Amman 108 potri

பிரச்சனைகள் அகல ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி (108 varahi amman potri).. வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள். சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர வழக்கு விவகாரங்கள், வியாபார சிக்கல்கள், கோர்ட் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து வாராஹி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீர்கின்றன. ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி ஓம் வாராஹி போற்றிஓம் சக்தியே போற்றிஓம் சத்தியமே போற்றிஓம் ஸாகாமே போற்றிஓம்…

மேலும் படிக்க