வேண்டும் வரம் தரும் விருட்ச கல்யாணம்… திருமண வரம் தரும் தாமிரபரணி நதிக்கரை முருகன்

திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர்… முருக பக்தர்களின் மனம் கவர்ந்த ஊர். திருச்செந்தூரின் மூலவரான செந்தில் ஆண்டவருக்கு அருகே சிவலிங்க மூர்த்தம் ஒன்று அமைந்திருக்கும் திருத்தலம் அது. அதே சிறப்போடு திகழும் திருத்தலம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே உள்ளது. திருச்செந்தூரில் கடற்கரை என்றால் இங்கே நதிக்கரை. வாருங்கள் நதிக்கரை சுப்பிரமண்ய சுவாமியை தரிசிப்போலம். திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் சாலையில், புதுக்குடியையும் ஶ்ரீவைகுண்டத்தையும் இணைக்கும் பாலத்துக்குக் கீழ், தாமிரபரணியின்கரையில் அமைந்துள்ளது இந்த முருகனின் ஆலயம். சிறிய கோயில்தான் இது எனினும் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கிறது. வெளிப் பிராகாரத்தில் கன்னிமூல விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பாலதண்டாயுதபாணி ஆகிய தெய்வங்களை தரிசிக்க முடிகிறது. உள் பிராகாரத்தில் பைரவர் காட்சி தருகிறார். திருச்செந்தூரில் மூலவர் தவநிலையிலும் சிவனைப் பூஜிக்கும் தன்மையுடனும் திகழ்வதாக ஐதிகம். அதனால் அங்கே, கருவறையில் செந்தில் ஆண்டவரின் இடப்புறத்தில் சிவலிங்கம்…

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க முத்தான யோசனைகள்!

Organic Farming Tips

விவசாயத் துறையில் தமிழக அரசு பல புதிய மாற்றங்களை உருவாக்கும் சூழல் தெரிகிறது. குறிப்பாக, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பது முதலமைச்சரின் பேச்சு, அறிக்கைகளில் தெரிகிறது. ‘மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்று பசுமை விகடனின் தாரக மந்திரத்தை முதலமைச்சர் உச்சரிக்கிறார். இது வரவேற்புக்குரிய செயல். விவசாயத்துக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசு, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவும், விவசாயிகள் நலன்களைக் கவனத்தில் கொள்ளவும் சில ஆலோசனை களை முன்வைக்கிறேன். இயற்கை விவசாயத்தைத் தீவிரமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டுமென்றால், அதற்காகத் தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கெனத் தனியான இயற்கை விவசாயக் கொள்கை ஒன்றையும் உருவாக்க வேண்டும். விவசாயி களின் அறிவு, தமிழகத்தின் விவசாயப் பண்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும். வேளாண் துறையில் உள்ள அலுவலர்களுக்கு…

மேலும் படிக்க

யூடியூபில் வருமானம் ஈட்ட அடிப்படை விதிமுறைகள் என்னென்ன?

YouTube

யூடியூபில் நாம் பெறக்கூடிய வருமானம் என்பது, நம்முடைய காணொலிகளில் எத்தனை விளம்பரங்கள் இடம்பெறுகின்றன, அந்த விளம்பரத்தை எத்தனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள், எத்தனை பேர் அந்த விளம்பரத்தை கிளிக் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. யூடியூபில் காணொலிகளைப் பதிவிடுவதன் மூலம் குறிப்பிட்ட அளவு வருமானத்தைப் பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை எப்படிச் சம்பாதிக்க வேண்டும், அதற்கான வழிமுறைகள் என்ன, அதற்கான அளவுகோல்கள் என்ன என்பது பற்றிப் பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. யூடியூப் காணொலிகள் மூலம் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒரு வழி யூடியூபில் மானிடைசேஷன் (Monetization) செய்வது. யூடியூபில் அதை எப்படிச் செய்வது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பார்க்கலாம். யூடியூப் பார்ட்னர் புரோக்ராம் (YouTube Partner Program) என்ற திட்டத்தின் கீழ் பல வசதிகளை யூடியூபில் காணொலிகளைப்…

மேலும் படிக்க

திருப்பம் தரும் திருச்சி கோயில்கள் – 7: வினைகள் தீர்க்கும் திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள்!

திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள்

நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை அளிக்கும் திருவெள்ளறை திருக்கோயில் திருவரங்கத்துக்கு இணையான பெருமை கொண்டது என்பார்கள் பெரியோர்கள். பாவங்கள் செய்த ஆன்மா என்றாலும், பரம்பொருளின் கருணையால், இறுதி வாய்ப்பாக இந்த கேள்வி கேட்கப்படும். ‘பூலோக வைகுந்தமாம் திருவெள்ளறையின் திருக்கோபுரத்தை தொலைவிலாவது தரிசித்த புண்ணியம் உமக்குண்டா!’ ஆம் என்று அந்த ஆன்மா கூறினால், அந்த ஆன்மா உடனே வைகுந்தத்தில் அனுமதிக்கப்படுமாம். நினைத்தாலோ, தரிசித்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தியை அளிக்கும் திருவெள்ளறை திருக்கோயில் திருவரங்கத்துக்கு இணையான பெருமை கொண்டது என்பார்கள் பெரியோர்கள். சோழ நாட்டு திவ்ய தேசங்களில் இது நான்காவது திருத்தலம். திருமகள் க்ஷேத்திரம், ஸ்வேதகிரி, நீலிகா வனம், வராகபுரி, உத்தம க்ஷேத்திரம், ஹித க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது திருவெள்ளறை. சிபி மன்னன் காலத்தில் திருமாலோடு 3700 வைஷ்ணவ பெரியோர்கள் வாழ்ந்த தலமிது. மாலவனின் பக்தனான சிபி மன்னன்…

மேலும் படிக்க

காய்க்காத நெல்லிக்கு நம்மாழ்வார் சொல்லிய தீர்வு!

Amla

‘‘எங்கள் தோட்டத்தில் 5 வருஷம் ஆன நெல்லி மரங்கள் உள்ளன. ஆனால், இவை இன்னும் காய்க்கவில்லை. என்ன காரணம், காய்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?’’ – டாக்டர் டி.அருள்மொழிவர்மன், முசிறி. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி மனோகரன் பதில் சொல்கிறார். ‘‘உங்களைப் போலவே என் தோட்டத் திலிருந்த நெல்லி மரங்களும் காய்க்காமலிருந்தன. 2012-ம் வருஷம் ஜூன் மாசம் 3-ம் தேதி என் வாழ்கையில் மறக்க முடியாத நாள். என்னுடைய நீண்ட நாள் வேண்டு கோளுக்கு இணங்க பண்ணைக்கு வந்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா. என் ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அங்குலம் அங்குலமாக நடந்து நின்று நிதானித்துச் சுற்றிப் பார்த்தார். ‘நெல்லிக்காய் ஆயுளைக் கூட்டும் அற்புதக்கனி. மலைப்பிரதேசத்தில் நன்றாக வளரக்கூடிய மரம். இங்கு அந்த அளவுக்குச் சிறப்பாக வளராது. இருந்தாலும் நான் சொல்லுற விஷயத்தை…

மேலும் படிக்க

நுண்ணூட்டக் கலவை இயற்கையா, செயற்கையா?

நுண்ணூட்டக் கலவை

‘‘இயற்கை வழியில் விவசாயம் செய்து வருகிறோம். தென்னை மரங்களுக்குத் தனியாக நுண்ணூட்டச்சத்து கொடுத்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று வேளாண்மைத் துறையில் சொன்னார்கள். அதன்படி நுண்ணூட்டக் கலவையை வாங்கித் தென்னை மரங்களுக்கு வைத்தோம். ஆனால், அது இயற்கையான பொருள் அல்ல. ரசாயன கலவை என்று ஒரு நண்பர் சொல்கிறார். இது உண்மையா? இயற்கை முறையில் நுண்ணூட்டச் சத்துகளைக் கொடுப்பது எப்படி?’’ வெங்கடேச பெருமாள், சோழவரம். தஞ்சாவூரைச் சேர்ந்த மூத்த வேளாண் விஞ்ஞானி முனைவர் அ.உதயகுமார் பதில் சொல்கிறார். “வேளாண்மைத்துறை மூலமும் உரக்கடைகள் மூலமும் விற்பனை செய்யப்படும் நுண்ணூட்டக் கலவை (Mineral Mixture) ரசாயனப் பொருள்தான். இயற்கை வழி பண்ணையில் இதைப் பயன்படுத்த வேண்டாம். இதற்கு மாற்றாக இயற்கை இடுபொருள்கள் நிறைய உள்ளன. சத்துக்குறைபாட்டில் உள்ள மனிதனுக்கு வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தும் உடல் நலனைக் காக்கலாம். சத்து நிறைந்த…

மேலும் படிக்க

ஆடி அம்மன் தரிசனம் – சிக்கல்களைத் தீர்ப்பாள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன்!

மதுரகாளியம்மன் கோயிலுக்கு எதிரே சோலை முத்தையா கோயிலும் உள்ளது. இவரே அம்மனின் காவல் அதிகாரி என்கிறார்கள். இங்கே வீரபத்திரர் சிலையும் உள்ளது. வடக்கு நோக்கிய காளி என்றால் மிக மிக விசேஷமானவள், ஆவேசமானவளும் கூட. தீமைகளை வேரறுக்கும் உக்கிரமான சக்திகளே வடக்கு நோக்கி வீற்றிருக்கும் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம். அப்படி சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக ஆவேசத்தோடு எழுந்தருளி நம்மை எல்லாம் காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தியே சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன். மதுரகாளி என்றால் அமிர்த வர்ஷிணியாக வரங்களை அள்ளித் தருபவள், மதுரமாக மனங்களை குளிர்விப்பவள் என்றும் சொல்லலாம். ஆனால் இங்கு மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த காளி என்பதால் இவள் மதுரகாளி என்றானாளாம். ஆம், மதுரையை கடும் கோபம் கொண்டு எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் என்று ஒரு தகவல் இந்த ஊர்…

மேலும் படிக்க

ஏற்றம் தரும் ஏலகிரி வேங்கடரமணர்

Yelagiri-Venkataramanar

திருமலையில் அருளும் அந்த வேங்கடேச பெருமாள், வேறு பல மலைகளிலும் கோயில்கொண்டு அருள்புரிவதைப் போலவே, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள ஏலகிரி மலையிலும் கல்யாண வேங்கடரமணனாகத் திருக்கோயில் கொண்டு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டான் போலும்! சென்னையில் முதலீடு மற்றும் நிதி ஆலோசகராக இருக்கும் ஈஸ்வரபிரசாத், ஓய்வுநேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அவர்தான் அந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். அவருக்கு அப்படி ஓர் எண்ணம் எப்படி ஏற்பட்டது? ”ஒருமுறை நான் என்னுடைய நண்பரும், பெருமாளின் தீவிரமான பக்தருமான கார்த்திகேயனுடன் ஏலகிரிக்குச் சென்றிருந்தபோது, அவருக்கு மலை உச்சியில் ஒரு ஜோதி தோன்றி மறைந்ததுபோல் இருந்ததாகச் சொன்னார். அது அவருடைய மன பிரமையாக இருக்கும் என்று நினைத்து, அப்போதே மறந்துவிட்டேன். பிறகு, ஏலகிரி மலையில் இருந்த அத்தனாவூர்ங்கற கிராமத்தில் மனைகளைப் பார்வையிடப் போயிருந்தபோது, ஒரு பாறையில் சங்கு சக்கரம்…

மேலும் படிக்க

மூச்சு விடும் மூலவர்

மூச்சு விடும் மூலவர்

கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச்சுடர் அசைந்தாடுகிறது. இந்த அதிசய கோயில் ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் உள்ளது. கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு அகத்தியர் வந்த போது வானில் அசரீரி ஒலித்தது. “அகத்தியரே! நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசிம்மரின் சிலை ஒன்று உள்ளது. அதைப் பிரதிஷ்டை செய்த பிறகு உமது தீர்த்த யாத்திரையைத் தொடருங்கள்” என்றது. அதன்படி அகத்தியரும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். நாளடைவில் இங்கு வழிபாடு இல்லாமல் போகவே சிலை மண்ணுக்குள் புதைந்தது. நான்காம் நுாற்றாண்டில் ரெட்டி ராசுலு என்பவரால் நரசிம்மரின் சிலை மீண்டும் வெளிப்பட்டது. 1377ல் கோயில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது. சுவாமி சிலையில் இருந்து மூச்சு வெளிப்படுவதை பூஜை செய்த அர்ச்சகர் உணர்ந்தார். அதை சோதிக்க மூக்கின் அருகில் விளக்கை பிடித்த போது சுடர்…

மேலும் படிக்க

குல தெய்வம் வழிபாடு முறைகள்

குல தெய்வம் வழிபாடு முறைகள்

முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத் தோடு வந்த வண்ணம் இருக்கும்.இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம்.அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே,…

மேலும் படிக்க