வறட்சியில் வளம் தரும் மரங்கள்

Trees For Dryland

அகர் மரத்தின் மையப்பகுதியில் சந்தன மரத்தில் இருப்பதுபோல வாசனை மிகுந்த வைரப்பகுதி உருவாகும். இந்த வைரப்பகுதியை அரைத்து அகர் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரங்களை தென்னை, பாக்கு, மா, மலைவேம்பு, சந்தனம், சவுக்கு மற்றும் பல வகையான தோப்புகளிலும் கலந்து பயிர் செய்யலாம். பத்து ஆண்டுகள் வளர்ந்த ஒரு அகர் மரம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம்.சந்தன மரங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளர்க்க சுதந்திரம் உண்டு. அறுவடை செய்திட வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். வறண்ட பாறை நிலங்களில் கூட வளமுடன் வளர்ந்து பலகோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் தெய்வீக மரமாகும். வீடுகள், தோட்டங்கள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் அதிக பராமரிப்பு இன்றி வளர்க்கலாம். வளர்க்க அனுமதி பெற வேண்டியது இல்லை. அச்ச மின்றி வளர்க்கலாம். ஏக்கருக்கு 450 மரங்கள் வளர்க்கலாம். பதினைந்து ஆண்டுகளில்…

மேலும் படிக்க

விநாயகர், முருகன், ஐயப்பன் ஆறு படை வீடுகள்

Vinayagar-Murugan-Iyyappan

ஆறு படை வீடு என்றாலே, முருகப்பெருமான்தான் நினைவுக்கு வருவார். அவருக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பதுதான் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆறு படை வீடு என்றாலே, முருகப்பெருமான்தான் நினைவுக்கு வருவார். அவருக்கு ஆறு படை வீடுகள் உண்டு என்பதுதான் பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் விநாயகருக்கும், ஐயப்பனுக்கும் கூட ஆறு படை வீடுகள் இருக்கின்றன. அதுபற்றி தெரிந்துகொள்ளலாம்.. விநாயகர் படைவீடு 1. திருவண்ணாமலை செந்தூர் விநாயகர் 2. விருத்தாச்சலம் ஆழத்து விநாயகர் 3. திருக்கடையூர் கள்ளவாரணப் பிள்ளையார் 4. மதுரை சித்தி விநாயகர் 5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் 6. கடலூர் பொள்ளாப் பிள்ளையார் முருகன் படைவீடு 1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் 2. திருச்செந்தூர் செந்திலாண்டவர் 3. பழனி பாலதண்டாயுதபாணி 4. சுவாமிமலை சுவாமிநாதர் 5. திருத்தணி சுப்பிரமணியர் 6. பழமுதிர்சோலை முருகன் ஐயப்பன் படைவீடு…

மேலும் படிக்க

அழகியமலையில் வீற்றிருந்தருளும் தம்பிரானே

Lord Murugan Temples

க்ஷேத்ரக் கோவைப் பாடலில் இனி வருவது ‘குன்று தோறாடல்’. இது முருகன் குடிகொண்டிருக்கும் பல மலைகளுக்கும் பொதுவான ஒரு சொல். முருகப் பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள் ஆதலின், ‘மலைக்கு நாயகன், மலைக் கிழவோன், கிரிராஜன் எனப் பலவாறாக அழைக்கப்படுகிறான். முருகன் குன்று தோறாடும் குமரன்’ எனும் பொருளில் ஐந்து தனிப் பாடல்கள் பாடியுள்ளார், அருணகிரிநாதர். ‘‘அதிருங் கழல் பணிந்துன் அடியேனுன்அபயம் புகுவதென்று நிலைகாணஇதயந்  தனிலிருந்து க்ருபையாகிஇடர் சங்கைகள்  கலங்க அருள்வாயேஎதிரங்கொருவரின்றி  நடமாடும்இறைவன் தனது பங்கில்  உமைபாலாபதியெங்கிலுமிருந்து விளையாடிப்பல குன்றிலுமமர்ந்த பெருமாளே ’’ ஒலிக்கின்ற கழலணிந்த உன் திருவடியைப் பணிந்து, பிறவிக் கடலிலிருந்து பிழைத்தெழும் நிலையைக் காண்பதற்கு நீயே அபயம் என்று கூறி உன்னிடம் சரணடைவது எப்போது?என் உள்ளத்தில் நீ விற்றிருந்து அருள்புரிந்து எனக்கு நேர்கின்ற துன்பங்கள் அஞ்சி என்னை விட்டு அகல அருள் புரிவாயாக,தனக்கு ஒப்பானவரென…

மேலும் படிக்க

ஓம் வடிவிலுள்ள ஓம்காரேஷ்வர் ஆலயம்

Omkareshwar Temple

இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு. மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து 281 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓங்காரம். இங்கு ஓம்காரேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அமலேஸ்வரர் என்றும் இவரை அழைப்பார்கள். இது மலை முகட்டில் உள்ள சுயம்புலிங்கமாகும். இந்தத் தலத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவையே சாளக்கிராம கற்களாக மாறியதாக வரலாறு. இங்கு ஜோதிர்லிங்கம் தோன்றக் காரணமான விந்திய மலை, முதலில் ஓம்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து, அதில் சிவலிங்கம் வைத்துப் பூஜித்ததால் இத்தலம் ஓங்காரம் எனப்பெயர் பெற்றது என்பர். மற்றும் ஒரு காரணம் கூறுகின்றனர். நர்மதை நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும்…

மேலும் படிக்க

கும்பகோணத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்கள்

Karkadeswarar Temple

கும்பகோணத்தில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் திருத்தலங்களாக இருப்பது கூடுதல் சிறப்பு. அப்படிப்பட்ட சில ஆலயங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம். மன நோய் அகல: சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்து வழிபட்ட சிவலிங்கம் இருக்கும் திருத்தலம், திருவிடைமருதூர். இத்தல இறைவன் மகாலிங்கம் என்று அைழக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, மன நோய் அகலும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டால் அதற்கான தீர்வு கிடைக்கும். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்…

மேலும் படிக்க