நரம்பு மண்டலத்தை வலிமையாக்கும் தாளாசனம்

Talasana Palm Tree Pose

Talasana Palm Tree Pose – ஆஸ்துமா, வெரிகோஸ் வெயின் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யோகாசனம் செய்யும் போது குணமடைவதை காணலாம். செய்முறை விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும். கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும். ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும். மூச்சின் கவனம் கைகளை மேலே உயர்த்தும்…

மேலும் படிக்க

ஒற்றை தலைவலியால் அவதியா? அப்ப மான் முத்திரை செய்யுங்க…

Mrigi Mudra

செய்முறை : கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும். நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம். விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம். காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும். பலன்கள் : மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும். நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். நீர்க்கோவைப் பிரச்னையால் வரும் தலைவலி சரியாகும். மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.…

மேலும் படிக்க

வேளாண்மைத்துறை மானியங்கள்

வேளாண்மைத்துறை மானியங்கள்

தரிசு, களர், உவர் நிலங்களுக்கு மானிய உதவி ஒருசில கிராமங்களில், சாகுபடி செய்யும் நிலங்களில் களர் மற்றும் உவர் நிலப் பிரச்னைகள் காணப்படுகின்றன. அதனால் பயிர் எண்ணிக்கை பராமரிக்க முடியாமலும், இடப்படும் எரு, உரங்கள் மற்றும் நீர் வேரினால் உறிஞ்ச முடியாத தன்மையாலும் பயிர் வளர்ச்சி குன்றியும், நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் பெரும் மகசூல் இழப்பும் ஏற்படுகிறது. என்ன செய்ய வேண்டும்? களர் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் செய்ய நிலம் 25 முதல் 30 சென்ட்  பரப்புக்குட்பட்டதாக இருக்க வேண்டும். பெரிய நிலமாக இருந்தால் நடுவில் வாய்க்கால் அமைக்கலாம். நிலத்தின் சரிவுக்கு ஏற்ப வடிகால்கள் அமைக்க வேண்டும். வயலின் பரப்பிற்கேற்ப ஜிப்சத்தை கணக்கிட்டு பரவலாக இட்ட பிறகு சுமார் 10 செ.மீ. நீர் தேக்கி நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தில் தேக்கிய நீர் தானாகவே…

மேலும் படிக்க

மூலிகை பயிர்கள்

Aloe Vera Benefits

அவுரி மூலிகை செடி சாகுபடி அவுரி “அவுரி’ என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் வரை சத்தமில்லாமல் வருவாய் ஈட்டலாம். தூத்துக்குடி சென்னா என்றழைக்கப்படும் இந்த மூலிகைச் செடிகள் 90 நாட்கள் பயிராகும். ஆண்டுதோறும் பருவ மழையை ஒட்டி நவம்பர் இறுதியில் விதைள் விதைக்கப்படுவது வழக்கம். எக்டேருக்கு 20 கிலோ விதை விதைத்தால் போதுமானது. களை எடுப்பு மற்றும் உரம் போட தேவையில்லை. அதுவாகவே வளர்ந்து பயன்தரக் கூடியது. முறைகள் செடிகள் முழுவதும் மஞ்சள் நிறத்தில் பூ பூத்து, காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும். மல்லிகைக்கு ஊடு பயிராக இந்த “அவுரி’யை பயிரிட்டுள்ளேன். வறட்சியை தாங்கி விளையக்கூடியது. குறைந்த அளவே தண்ணீர் போதுமானது. எக்டேருக்கு ஒரு டன் வரை காய்ந்த இலைகள் மற்றும் காய்கள்…

மேலும் படிக்க

3 வகை உடல் 6 வகை பருமன்

6 types of obesity

உடல் அமைப்பு உலகத்திலேயே மிகவும் முக்கியமானது ஆரோக்கியமான உடல்தான்!  ஆனால், அந்த ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்க முடியாமல் பலவித நோய்களால் கஷ்டப்பட்டு, எல்லாம் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாத எத்தனையோ பேரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு மிக அவசியம் அளவான எடை. பருமன் என்கிற பிரச்னையே பலவித பயங்கர நோய்களுக்கும் அடிப்படை. மனிதர்கள், அவர்கள் பிறக்கும் தருணத்தில் இருந்து சிறிது காலம் வரை  பரம்பரை (Genetics) வழியில் 3 வகை  உடல் அமைப்பை பெறுவார்கள். இவையே அடிப்படை உடல் அமைப்புகள். மிக மெலிந்த உடல்வாகு (Ectomorph) ‘என்னப்பா இது… இந்த ஆளைப் பார்த்தா ஒரு மாதம் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தாற்போல, வாடிப்போய் எலும்பும் தோலுமாக இருக்கானே’  என்று சொல்லும்படி உள்ளவர்கள்… பார்ப்பதற்கு எந்த நேரமும் ஒடிந்து, முறிந்து விடுவது போல இருப்பார்கள். சிறிய…

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட SMS – திட்டம் குழந்தைகளுக்கு தடுப்புசி போடுவத்றகு SMS மூலம் நினைவூட்டும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. செல்போன் மூலம் பதிவு செய்தால் போதும், தடுப்பூசி போடுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும். இதற்கு national vaccine reminder என்று பெயர். எப்படி பதிவு செய்வது? உங்களுடைய செல்போனின் மெசேஜ் பாக்ஸில் Immunize என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு உங்கள் குழந்தையின் பெயரை டைப் பெய்து விட்டு, ஒரு ஸ்பேஸ் விட வேண்டும். பின்னர் உங்கள் குழந்தையின் பிறந்த தேதியை டைப் செய்து 566778 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு, Immunize Harish 10-09-2015 என்று டைப் செய்து அனுப்பினால், உடனே…

மேலும் படிக்க

பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில்

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும். வரலாறு இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது இருக்கும் கோவில் 1950s புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது.இந்த இடம் புராண காலத்தில் பாரபுரி என்று அழைக்கபட்டது. கொண்டத்துக் காளியம்மன் ஆற்றுப்படை என்ற பழைமையான ஓலைச்சுவடி இத்தலச்சிறப்பினை விளக்குகிறது. இதற்கு முன் இவ்விடம் அழகாபுரி/ பாராபுரி என வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள அம்மன் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குலதெய்வம் என நம்பப்படுகிறது. எனவே, “பாரியூர்” என்று பெயர் மாற்றம் பெற்றது. அருள்மிகு கொண்டத்து மாரியம்மன் ஊரின் வளமைக்கு முக்கியக் காரணமாக இருந்தாள் என்று கூறப்படுகிறது. கோபிசெட்டிபாளையம் முன்பு வீரபாண்டி கிராமம் என அழைக்கப்பட்டது. கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம்…

மேலும் படிக்க

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்

Temples In Erode District

பாரியூர் அம்மன் கோவில் இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் ஆகும். கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் சவண்டப்பூர் மற்றும் கூகலூர் வழியாக அந்தியூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் விசேஷம் வாய்ந்தவை. மேலும் இது பாரி வள்ளலால் போற்ற பெற்ற தலமாகும். அம்மன் தங்க தேரில் தினமும் உலா வந்து காட்சி அளிப்பார். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மூன்று வாரங்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் கலந்து கொள்ள லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம். பச்சைமலை மற்றும் பவளமலை முருகப்பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்…

மேலும் படிக்க

சனி பகவான் காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்லோகம்

சனி பகவான் காயத்ரி மந்திரம் மற்றும் ஸ்லோகம்

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன். சனி காயத்ரி மந்திரம் : ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்! சனி பகவான் ஸ்லோகம் : நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்! கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன் என்று பொருள்.…

மேலும் படிக்க

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி. ஓம் ச்யாமளாயை வித்மஹேஹல ஹஸ்தாயை தீமஹிதன்னோ வாராஹி ப்ரசோதயாத் ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் : 1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹிஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. 2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :ருத்தே ருந்தினி நம :ஜம்பே ஜம்பினி நம :மோஹே மோஹினி நம :ஸதம்பே ஸ்தம்பினி நம:ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதிஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் 3) ஓம் வாம் வாராஹி நம:…

மேலும் படிக்க