படைத் தமிழ்

பாரதிதாசன்

இருளினை, வறுமை நோயைஇடருவேன்; என்னுடல் மேல்உருள்கின்ற பகைக்குன்றைநான் ஒருவனே உதிர்ப்பேன்;நீயோ கருமான்செய் படையின் வீடு;நான் அங்கோர் மறவன்! கண்ணற்பொருள்தரும் தமிழே!நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!

மேலும் படிக்க

தமிழை என்னுயிர் என்பேன்

பாரதிதாசன்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்கழையிடை ஏறிய சாறும்பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்பாகிடை ஏறிய சுவையும்நனிபசு பொழியும் பாலும் – தென்னைநல்கிய குளிரிள நீரும்இனிய என்பேன் எனினும் – தமிழைஎன்னுயிர் என்பேன் கண்டீர்.

மேலும் படிக்க

ஆற்றுநடை

பாரதிதாசன்

நோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார்,நூற்றுக்கு நூறு பேரும்!ஓய்வின்றிக் கலப்பை தூக்கிஉழவுப்பண் பாடலானார்!சேய்களின் மகிழ்ச்சி கண்டுசிலம்படி குலுங்க ஆற்றுத்தாய் நடக்கின்றாள், வையம்தழைகவே தழைக்க வென்றே!

மேலும் படிக்க

சீரடி சாய்பாபா கோவில் பற்றிய அரிய தகவல்கள்

Shirdi-Sai-Baba-Temple

சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஸ்தல வரலாறு : மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார். சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை. அங்குள்ள `கண்டோபா’ என்ற மசூதியில் தான்…

மேலும் படிக்க

வாழ்க்கையில் துன்பங்கள் போக்கும் அழியா நிலை ஆஞ்சநேயர் கோவில்

அழியா நிலை ஆஞ்சநேயர் கோவில்

அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆஞ்சநேயரை வேண்டி வணங்கினால் துன்பம் பறந்தோடும். அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. இரண்டு அடிபீடத்தில், ஒன்பது அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இவர். அவருக்கு அருகில் செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அசோக வனத்தில் வேதனையில் தவித்த சீதாப்பிராட்டியின் முன் தோன்றிய ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து ஆறுதல் கூறினார். அதே விஸ்வரூபத்தில் இங்கே எழுந்தருளி இருப்பது இப்பகுதி மக்கள் செய்த தவப்பயன். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு, வெண்ணெய், மலர், பழங்கள், செந்தூரம் மற்றும் பலவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதை பக்தர்கள் பார்த்து ஆனந்தம் அடைகின்றனர். ஆலயத்தின் அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதன் முன்பாக 23…

மேலும் படிக்க

திருக்கொள்ளம்புதூர் அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில்

திருக்கொள்ளம்புதூர் அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. மூலவர்:வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர், திருக்கொள்ளம்பூதூருடையார்)அம்மன்/தாயார்:சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)தல விருட்சம்:வில்வம்தீர்த்தம்:பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்ஆகமம்/பூஜை :காமிக ஆகமம்புராண பெயர்:கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்ஊர்:திருக்கொள்ளம்புதூர் இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 177 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம். பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது. பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில்…

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்

குறிக்கோள்கள் பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்களை இணைத்து செயல்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையைப் பின்பற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்து விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், வருடம் முழுவதும் தொடர்ந்து பண வரவுக்கு வழி செய்தல், வருடம் முழுவதும் குறிப்பாக விவசாயிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருள்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளத்தை மேம்படுத்துதல், பயிரின் மகசூலை பெருக்குவதோடு உரச் செலவுகளைக் குறைக்க முடியும். துணைத் தொழில்கள் நன்செய் நிலத்தில் பயிருடன் கோழி அல்லது புறா அல்லது ஆடு அல்லது மீன் வளர்ப்பு போன்ற தொழில்களை ஒருங்கிணைக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் 70 சதவீதம் பயிர்ச் சாகுபடி செய்வதற்கும், 10 சதவீதம் தீவனப் பயிர்ச்…

மேலும் படிக்க

உணவு தானியங்கள், அழுகக்கூடிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வசதிக்கான கிசான் ரத் செயலி

Kisan Rath App

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை விவசாயிகள் நலனுக்கான செயலியைத் உருவாக்கியுள்ளது. இந்தச் செயலி, விவசாய மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை போக்குவரத்து வாகனங்களைத் தேடும் விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்குப் பெரிதும் பயன்படும். விளை நிலங்களில் இருந்து மண்டிகள், விவசாய உற்பத்தி அமைப்பின் சேகரிப்பு மையங்கள், உணவுக் கிடங்குகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்வது உள்ளிட்டவை முதல்நிலை போக்குவரத்தாகும். மண்டிகளில் இருந்து பொருள்களை மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலான மண்டிகள், பதப்படுத்தும் நிலையங்கள், ரயில் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், மொத்த விற்பனையாளர்களுக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை இரண்டாம் நிலை போக்குவரத்தாகும். சாகுபடியும், அறுவடையும் தொடர்ந்து நடக்கும் போது, கிசான் ரத் செயலி, விளையும் இடத்திலிருந்து மண்டிக்கும், அங்கிருந்து நாடு முழுவதும் உள்ள பிற மண்டிகளுக்கும் பொருள் போக்குவரத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கும்,…

மேலும் படிக்க

ஆராய்ச்சி மண் வள அட்டை அறிமுகம்

ஆராய்ச்சி மண் வள அட்டை

மண் வள அட்டை விவசாயிகளின் நிலங்களை அளவிட்டு, மண்ணை வகைப்படுத்தி, மகசூலை அதிகரிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யும் ஆராய்ச்சி மூலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் துறையும் புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக மண் வகையை அறிந்து, மகசூலைப் பெருக்க மண் வள அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி வசூலிக்கக் கிராமங்கள் வாரியாக நில அளவீடு செய்து, புல எண் வாரியாகக் கிராம வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரைபடங்களைக் கொண்டே நில அளவீடும், புல எண் வாரியாகக் கிராம வரைபடங்களும் கையாளப்பட்டு வருகின்றன. முதுகெலும்பு இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனைக் காக்கவும், அவர்களுடைய தொழில் வளர்ச்சி பெறுவதற்கான மேம்பாட்டு வசதிகளையும் அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டுச் செய்வது கானல் நீராகவே இருந்து வந்தது. இந்நிலையை மாற்றக் கிராமங்களில் புல எண் வாரியாக விவசாய நிலங்களைப் பிரித்து,…

மேலும் படிக்க

சந்தை விவரம்

சந்தை விவரம்

தினசரி சந்தை நிலவரம் (DMI) வேளாண் விளைபொருட்களின் விற்பனையில், குறிப்பாக விரைவில் அழுகும் தன்மையுள்ள காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களின் பொருட்களின் விற்பனையில், உரிய நேரத்திற்குள்ளான சந்தை தகவல் பரிமாற்றம் மிக முக்கியம். சரியான சந்தை நிலவரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு இல்லாமையாலும், இடைத்தரகர்களின் தலையீடுகளாலும் பெரும்பான்மையான விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை அருகாமையிலுள்ள ஏதோ ஒரு சந்தையில் அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு தங்களின் அருகாமையிலுள்ள பிற முக்கிய சந்தைகளின் விலை நிலவரங்களை அன்றாடம் தேவைக்கேற்ப தெரியப்படுத்தினால், அது அவர்கள் தங்களின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க ஏதுவாக அமையும். தகவல் தொடர்பு மற்றும் மொபைல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இத்தகைய சேவைகளை சாத்தியமாக்கியுள்ளது. ‘தினசரி சந்தை நிலவரம்’ (DMI) சேவையின் நோக்கம் விவசாயிகளுக்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை விவரங்களை அவர்களின் தேவைக்கேற்ப…

மேலும் படிக்க