இடுப்பு எலும்புகளை வலுவாக்கும் ஏக பாத ராஜ கபோடாசனம்

ஏக பாத ராஜ கபோடாசனம்

யோகாவில் இடுப்பு எலும்புகள் பலம்பெற்று தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை தருவது போல் ஆசனம் உள்ளது. அதுதான் ஏகபாத ஏக பாத ராஜ கபோடாசனம். பாதி உடலை இடுப்புதான் தாங்குகிறது. அது சமனாகும்போது, இடுப்பைதாங்கும் மூட்டு மற்றும் பாதங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாது. இடுப்பு பலம்பெற உடற்பயிற்சி செய்வது நல்லது. அதனினும் யோகா செய்வது மிக நல்லது. யோகாவில் இடுப்பு எலும்புகள் பலம்பெற்று தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை தருவது போல் ஆசனம் உள்ளது. அதுதான் ஏகபாத ராஜ கபோட்டாசனா. ஏக பாத என்றால் ஒற்றி பாதம், ராஜ என்ரால் அரசன், கபோட் என்றால் புறா. புறாவை போன்ற தோற்றத்தில், ஒற்றை காலைக் கொண்டு ஆசனத்தை செய்வதால் இந்த பெயர் பெற்றுள்ளது. தலைக்கும் காலுக்கும் இடைப்பட்ட உறுப்புகளுக்கு பயிற்சி தருவது இந்த யோகாவின் பயனாகும். எப்படி செய்வது என்று பார்க்கலாம். முதலில் மண்டியிட்டு அமருங்கள்.…

மேலும் படிக்க

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

ராகி கூழ் காலையில் ராகி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அத்தகைய ராகியை கூழ் அல்லது கஞ்சி போன்று செய்து சாப்பிடலாம். பலரும் கடையில் விற்கப்படும் ராகி மாவு கொண்டு தான் கூழ் செய்து குடிப்பார்கள். ஆனால் ராகியை வாங்கி ஊற வைத்து அரைத்து பால் எடுத்து கூழ் செய்து குடித்தால், அதன் சுவையே அலாதி தான். இங்கு அப்படி ராகியை ஊற வைத்து பால் எடுத்து எப்படி கூழ் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் ராகி – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – தேவையான அளவு, நெய் – 1/4 டீஸ்பூன், வெல்லப்பாகு – 2 டீஸ்பூன். செய்முறை முதலில் ராகியை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் மீண்டும் ராகியைக் கழுவி, மிக்ஸியில் போட்டு…

மேலும் படிக்க

ஆப்பிளில் உள்ள நன்மைகள்

ஆப்பிளில் உள்ள நன்மைகள்

ப்பிள் உடல் நலத்திற்கு நல்லது என புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. தோலுடன் சாப்பிடக் கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. இதில் நிறைய விட்டமின்கள், மினரல் சத்துக்கள் உள்ளன. அதுபோலவே நம் சருமத்திற்கான அழகுக் குறிப்புகள் ஆப்பிளிடம் நிறைய இருக்கிறது. அவை சருமத்தில் நிறைய நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும். சுருக்கங்கள், கருமை, போக்கி, தேகத்திற்கு மினுமினுப்பை அள்ளித் தரும். ஆப்பிளை அரைத்து பேக்காக முகத்தில் போடுவதால் உண்டாகும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். முகத்திற்கு இளமையை தரும் ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் இளமையாக முகம் இருக்கும். ஆப்பிள் + தயிர் மாஸ்க் ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அதிகப்படியான…

மேலும் படிக்க

அல்சருக்கு ஏற்ற உணவு தயாரிக்கும் முறைகள்

அல்சருக்கு ஏற்ற உணவு தயாரிக்கும் முறைகள்

அல்சர் எப்படி உருவாகிறது வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவாரணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும். டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும். அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, ‘ஹெச் பைலோரை’ (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகையான பாக்டீரியா.…

மேலும் படிக்க

டயட்டில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சாறுகள்

டயட்டில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சாறுகள்

ஜூஸ் குடிப்பது எல்லாருக்குமே பிடித்தமானது. குடிப்பதும் எளிது, சத்துக்களும் நிறைய கிடைக்கும். அப்படி பழச்சாறுகளை குடிப்பதனால் எளிதில் நீர்ச்சத்துக்கள் கிடைக்கும். எளிதில் ஜீரணமாகிவிடும். தேவைப்படும் மினரல்கள் உடலுக்கு கிடைக்கும். சில பழங்களை, காய்களை அப்படியே சாப்பிட்டால் நல்லது. ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை ஜூஸ் போட்டு குடிப்பதனால் நார்சத்துக்களை இழக்க நேரிடும். அவற்றை அப்படியே சாப்பிடுவது நல்லது. சிலவகைகளில் ஜூஸ் போட்டு குடிப்பதனால் சத்துக்களும் கிடைக்கும். ஜீரணமும் ஆகும். அவ்வகையான உடலுக்கு நன்மைகளைத் தரும் ஜூஸ் பற்றி பார்க்கலாம். அவற்றை தினமும் டயட்டில் சேர்த்துக் கொண்டால், இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம். நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் துவர்ப்பு சுவை கொண்டது. நாம் நெல்லிக்காயில் துவையல், ஊறுகாய் போன்றவற்றை செய்து சாப்பிடுவோம். உப்பு மிளகாய்பொடியுடன், தொட்டுக் கொண்டு சாப்பிடுவதும் விருப்பமானதாக இருக்கும். இருப்பினும் அதன் துவர்ப்பு சுவை எல்லார்க்கும் அவை பிடிப்பதில்லை.…

மேலும் படிக்க

வாட்ஸ்அப் வெப், டெஸ்க்டாப் ஆப்ஸிகளில் வாய்ஸ், வீடியோ கால் அம்சம் விரைவில் அறிமுகம்!

whatsapp-web-and-desktop-app-may-soon-get-voice-and-video-calling-feature-now-available-in-beta

சமீபத்தில், பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் ஆப்ஸ் ஆன வாட்ஸ்அப் In-App Notifications என்ற புதிய அம்சத்தையும் வெளியிட்டுள்ளது. இப்போது நம் வாழ்க்கை முறையில் வாட்ஸ்அப் (WhatsApp) ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு ஆப்ஸ்கள் இருந்தாலும், வாட்ஸ்அப் (Whatsapp) மிகவும் பிரபலமானது. ஏனென்றால், அதன் பயனர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் உண்மையில் முயற்சிக்கிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் (Facebook-owned WhatsApp) நீண்ட காலமாக வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப்ஸ் மற்றும் வாட்ஸ்அப் வெப் கிளைண்டிற்கான (WhatsApp desktop app and WhatsApp Web client) வாய்ஸ் / வீடியோ அழைப்பு (voice/video calling) அம்சத்தில் செயல்படுவதாக வதந்தி பரவி வந்தது.  பல மாதங்களுக்கு பிறகு, இந்தத் தளத்தை பற்றிய வதந்தியை, உண்மையாக்க நிறுவனம் மெதுவாக அதற்கான வேலைகளை செய்து வருவதாக…

மேலும் படிக்க