இயற்கையான முறையில் பளபளக்கும் சருமம் பெற குறிப்புகள்

Beauty Tips

இரசாயனங்கள் என்றும் உங்களுக்கு நிரந்திரமான தீர்வை தரவல்லது அல்ல. தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்ற லாப நோக்குடன் தான் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மற்றும் இதில் சிலவன பக்கவிளைவுகள் தரக்கூடியதும் கூட. எனவே, இயற்கையான முறையை பின்பற்றுவது தான் சரியான தீர்வை அளிக்கும். கேரட் மற்றும் பால் கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும். கேரட், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும் எலுமிச்சை சாறு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன்…

மேலும் படிக்க

ஆரோக்கியமான கூந்தலுக்கு நெல்லிக்காய்

ஆரோக்கியமான கூந்தலுக்கு நெல்லிக்காய்

கூந்தல் சாதாரணமாகவே நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் அதனை சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் தான் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அத்தகைய நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. தற்போது நிறைய மக்கள் ஆம்லா/நெல்லிக்காய் எண்ணெய், நெல்லிக்காய் இருக்கும் ஹென்னா போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது, அடர்த்தியான கூந்தலை வளரச் செய்வது என்ற பலனைத் தருகின்றன. மேலும் நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும். ஏனெனில் இவை உடலில்…

மேலும் படிக்க

ஆண்கள் தலைமுடியைப் பாதுகாக்க சில குறிப்புகள்

ஆண்கள் தலைமுடியைப் பாதுகாக்க சில குறிப்புகள்

ன்றைய தலைமுறை ஆண்களுக்கு சீக்கிரமே வழுக்கை விழுந்துவிடுகிறது. இதற்கு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் முக்கிய காரணம். மேலும் சில ஆண்கள் தங்கள் தலைமுடிக்கு ஆரம்பத்தில் இருந்தே சரியான பராமரிப்பு கொடுக்காமல், தலைமுடி ஆரோக்கியத்தை இழந்து உதிரத் தொடங்கும் போது, தலைமுடி மீது அக்கறை காண்பிப்பார்கள். ஆண்களின் அழகை அதிகரித்துக் காண்பிப்பதில் அவர்களது தலைமுடியும் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே ஒவ்வொரு ஆண்களும் தங்களது தலைமுடிக்கு சற்றும் தளராமல் பராமரிப்புக்களைக் கொடுத்து வர வேண்டும். இங்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஹேர் ஸ்டைலிங் பொருட்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கடைகளில் விலைக் குறைவில் கிடைக்கும் தரமற்ற ஹேர் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால்,…

மேலும் படிக்க

அழகை பாதுகாக்கும் விட்டமின்கள்

அழகை பாதுகாக்கும் விட்டமின்கள்

அழகிற்கும் விட்டமின்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. எவ்வாறு கார்போஹைட்ரேட், புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு தேவையோ, அவ்வாறு உடல் மெருகூட்டவும். செல்களின் போஷாக்கிற்கும் விட்டமின்கள் தேவை. விட்டமின்கள் எடுத்துக் கொள்ளும்போது அழகு மெருகேருகின்றன என்பது உண்மை. இரண்டு விதமான விட்டமின்கள் உள்ளன. கொழுப்பில் கரையும் விட்டமின்கள், நீரில் கரையும் விட்டமின்கள். கொழுப்பில் கரையும் விட்டமின்கள் உடலில் சேமித்துவைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது அவை உபயோகப்படுத்தப்படுகிறது. கொழுப்பில் கரையும் விட்டமின்கள் ஏ,டி ஈ, கே ஆகியவை இளமையாகவும் சுருக்கங்களை தடுக்கவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்கிவிடும். நீரில் கரையும் விட்டமின்கள் விட்டமின் பி காம்பளக்ஸ் மற்றும் சி ஆகியவை உடலில் சேமித்து வைக்கமுடியாது. அதிகப்படியான சத்து வெளியேறிவிடும். இந்த வகை விட்டமின்கள் எவ்வாறு அழகை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம். விட்டமின் பி1 விட்டமின் பி1 கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்கி, சுருக்கங்களை போக்குகிறது. சிவப்பு…

மேலும் படிக்க

பாதங்களுக்கு மசாஜ் தெரபி

Foot Massage

மிகவும் பயனுள்ள ஓர் மருத்துவ சிகிச்சையில் ஒன்று தான் மசாஜ் தெரபி. ஏனெனில் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும் போது, டென்சன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை. ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில்…

மேலும் படிக்க

20 வகையான பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும். உதட்டு வெடிப்பு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில்…

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியம் பேணிக் காக்க சில தகவல்கள்

உடல் ஆரோக்கியம் பேணிக் காக்க சில தகவல்கள்

உடற்பயிற்சி மனிதனுக்கு மிகவும் முக்கியம், எனவே காலை அல்லது மாலை கட்டாயமாக 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக உறங்க வேண்டும். அனைவரும் வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிட வேண்டும். பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால் ஏற்படும் தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து விடுப்படலாம். மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது. உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு அடுத்த வேளை உணவு உண்ண கூடாது. பிராய்லர் கோழிக்கறி உண்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக…

மேலும் படிக்க

வைகுண்ட பதவி தரும் ஏகாதசி தோன்றிய கதை

Vaikunda Egadasi Story

‘மாதங்களில் நான் மார்கழி’ என்பது கீதாசார்யனின் அமுதமொழி. வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான். அந்தப் புராணச் சம்பவம்…. கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான். தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார். அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகாசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார். பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக்கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான். அப்போது மகாவிஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள். ஆயுதங்களுடன் காட்சி தந்த…

மேலும் படிக்க

வாட்ஸ்அப்பில் ’இன்-ஆப் நோட்டிபிகேஷன்’ என்ற புதிய அம்சம் அறிமுகம்

WhatsApp_In_App_Notifications

வாட்ஸ்அப் என்பது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தி தளங்களில் ஒன்றாகும். பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்த மெசேஜிங் சேவை அதன் பயன்பாட்டின் எளிமைக்காக மிகவும் பிரபலமானது. மேலும் நிறுவனம் வாட்ஸ் அப் குறித்த பல அற்புதமான அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ் அப் குறித்த அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் செயலியில் இன்-ஆப் நோட்டிபிகேஷன்ஸ் (in-app notifications) என்ற புதிய அம்சத்தை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் அம்சம் மூலம் நிறுவனம் தங்களது பல புதிய அப்டேட்டுகளை பயனர்களுக்கு தெரிவிக்க அனுமதிக்கும். செட்டிங்ஸ் ஆப்ஷன் மூலம் பயனர்கள் இந்த அம்சத்தை இயக்கவோ, முடக்கவோ முடியும். பெயர் குறிப்பிடுவது போலவே இந்த அம்சம், பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியைத் திறக்கும்போது இரு வெவ்வேறு முறைகளில் அலெர்டுகள் அல்லது பிற நோட்டிபிகேஷன்களை…

மேலும் படிக்க

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்துவது எப்படி?

Rice_Gall_Midge

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈயின் புழுக்கள் தண்டை துளைத்து குருத்தை தாக்கி சேதம் ஏற்படுத்தும். இந்த ஈக்கள் கொசுவைப்போல நீண்ட கால்களுடன் இருக்கும். இவை இரவு வேளையில் சுறுசுறுப்பாக இருக்கும். தளிர் இலைகளின் அடிப்பரப்பில் தனியாக அல்லது குவியலாக 100 – 300 முட்டைகள் இடும். 2 – 3 நாட்களில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். இதன் புழுக்கள் தண்டை துளைத்து குருத்தை தாக்கும் போது உட்கருத்தின் இயல்பான வளர்ச்சி தடைபடுகிறது. அதிலிருந்து தோன்றும் இலை உறை, புழு தோற்றுவிக்கும் சில நொதிகளால் நீண்ட குழாய் போன்ற பாகம் வளரும். இதை ஆனைக்கொம்பு என்கிறோம். இப்புழுக்கள் 5 முதல் 6 வார வயதுள்ள இளம்செடிகளை அதிகம் தாக்கும். ஈயாக வெளிவந்த பின், குழாய் காய்ந்துவிடும். இதனால் 50 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். கருப்புநிற ‘பிளாட்டிகேஸ்டர் ஒரைசா’…

மேலும் படிக்க