அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ,திருச்செந்தூர்,தூத்துக்குடி

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ,திருச்செந்தூர்,தூத்துக்குடி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும். இத்தலம் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தல வரலாறு: தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார்.…

மேலும் படிக்க

தக்காளி ரகங்கள்

Tomatto-Varities

இரகங்கள்: கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி அர்கா அஹ்தி. தக்காளி வீரிய ஒட்டு கோ – 3 HN2 x CLN2123A வின் வீரிய ஒட்டு. மகசூல் 96.2 டன்/ எக்டர். பயிரின் வயது 140-145 நாட்கள். பயிர் பாதி நிர்ணயிக்கப்பட்டு (90-95 செ.மீ) மற்றும் அதிக அடர்த்தி நடவு முறைக்கு உகந்தது. பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவு, குழுக்கள் 3-5 ஆகவும் அதிக விளைச்சல் இலைசுருள் வைரசிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டதுடன், வேர் முடிச்சு நூற்புழுவிற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. கோ.டி.எச் 1 (1998) வீரிய…

மேலும் படிக்க

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ,திருப்பரங்குன்றம்,மதுரை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர். மூலவர் சுப்பிரமணிய சுவாமி உற்சவர் சண்முகர் அம்மன்/தாயார் தெய்வானை தல விருட்சம் கல்லத்தி தீர்த்தம் லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் ஆகமம்/பூஜை காமிகம், காரணம் புராண பெயர் தென்பரங்குன்றம் ஊர் திருப்பரங்குன்றம் மாவட்டம் மதுரை மாநிலம் தமிழ்நாடு ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடவறைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இக்கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே “திருப்பிய பரங்குன்றம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூர் “திருப்பரங்குன்றம்’ என்று மருவியது. அருணகிரியார் திருப்புகழில், “”தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை…

மேலும் படிக்க

பூச்சி, நோய்க் கட்டுப்பாடு

pest and disease control

இந்தத் தொகுப்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு போன்றவற்றை பற்றி பார்ப்போம். நெல் மழைக்காலங்களில் நிலவும் காலநிலை நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு, புகையான் பூச்சி தாக்குதலுக்கு சாதகமானதாக உள்ளது. இலை சுருட்டுப் புழு தொடர் மழை, பனி மூட்டம் காரணமாக நெல்லில் இலை சுருட்டுப் புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இளம் பயிர்கள், தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள பயிர்களை தாக்கும் இந்தப் புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இந்த பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயம் தழைச்சத்து உரங்களை வயலில் இடுவதை குறைக்க வேண்டும். வயலில் புழுவின் அந்தி பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து விளக்கு பொறி வைத்து கவர்ந்து அழிக்கலாம். தாவர பூச்சிக் கொல்லியான…

மேலும் படிக்க

வளர்பிறை அஷ்டமியான இன்று சொல்ல வேண்டிய பைரவர் 108 போற்றி

பைரவர் 108 போற்றி

தினமும் அல்லது தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். தினமும் அல்லது தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதியில் இந்த பைரவர் 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30 – 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த 108 போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம். 108 பைரவர் போற்றி ஓம் பைரவனே போற்றிஓம் பயநாசகனே போற்றிஓம் அஷ்டரூபனே போற்றிஓம் அஷ்டமித் தோன்றலே போற்றிஓம் அயன்குருவே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அகந்தையழிப்பவனே போற்றிஓம் அடங்காரின்…

மேலும் படிக்க

ராகு-கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம் திருக்கோவில்

திருப்பாம்புரம் திருக்கோவில்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம். இங்கு பாம்புபுரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மிகச் சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாம்புரம். இங்கு பாம்புபுரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற, தென்கரை தலங்களில் 59-வது தலம் என்று சிறப்பு இந்தக் கோவிலுக்கு உண்டு. மேலும் இந்தக் கோவில் மிகச் சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்தக் கோவிலில் உள்ள இறைவனை, ஆதிசேஷன், ராகு மற்றும் கேது, அஷ்டமா நாகங்கள் ஆகியோர் சிவராத்திரியின் மூன்றாம் ஜாமத்தில் வழிபட்டு தங்கள் சாபங்களில் இருந்து விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இந்தக் கோவிலில் பாம்புபுரேஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவனும், வண்டார் பூங்குழலியம்மை என்ற பெயரில் இறைவியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். ஒரு முறை கயிலாயத்தில் இருந்த சிவபெருமானை, விநாயகப்பெருமான் வழிபட்டார். அப்போது ஈசனின் கழுத்தில் இருந்த பாம்பு,…

மேலும் படிக்க

குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவானுக்குரிய மந்திரம்

குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவானுக்குரிய மந்திரம்

குரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, தானியங்களை கொண்டு வழிபாடு செய்தால் மிக நல்ல பலன்களை தரும். குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கியம் எனும் மகத்தான பலனை தரக் கூடியவர். புத்திர பாக்கியத்தை பெற சொல்ல வேண்டிய குரு மந்திரத்தை இங்கு பார்ப்போம்… குழந்தை பாக்கியம் பெற குரு பகவானுக்குரிய மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் சொல்லி வர கிடைக்கும் என நம்பப்படுகிறது. குரு பகவான் என்பவர் ஆசிரியராக மட்டுமல்லாமல் நம் உடலுக்கு ஏற்படும் பிரச்னை, நோய்களுக்கு மருந்தாக இருந்து அருள்புரிகிறார். குரு பகவான் புத்திர பாக்கியத்தை தருவதோடு, காது, கல்லீரல், இடுப்பு உள்ளிட்ட நோய்களுக்கு அவர் மருந்தாக குருவின் மந்திரம் இருக்கிறது. குரு மந்திரத்தை வியாழக் கிழமை தோறும் நெய்…

மேலும் படிக்க