உடல் பருமன், மூட்டு வாதம் நீக்கும் கோமுகாசனம்

Gomukhasana-benefits

கோமுகாசனம் என்ற ஆசனத்தின் மூலம் நம் உடம்பிற்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அதனை விரிவாகப் படித்த பின் ஒவ்வொருவரும் நிச்சயமாக இந்த ஆசனத்தைப் பயில்வது உறுதி. கோமுகாசனம் (Gomukhasana) செய்முறை: விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். வலது காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும். இடதுகாலை மடித்து வலது தொடை மீது வைத்து, வலது பாதத்தை இடது தொடையின் பக்கத்தில் தரை மீது படியும்படி வைக்கவும். இடது கையை தலைக்கு மேல் உயர்த்தி மடித்து கையை முதுகுக்கு பின்புறம் கொண்டு வந்து முதுகை தொடவும். வலது கையை சாதாரணமாக பின்புறம் கொண்டு வந்து இடது கை விரல்களை பிடிக்க முயற்சிக்கவும். சாதாரண மூச்சில் 20 எண்ணிக்கை இருக்கவும். பின் கைகளைப் பிரித்து கால்களை பிரித்து அமரவும். மாற்று ஆசனமாக இடது காலை மடித்து, பின்…

மேலும் படிக்க

தலை முதல் கால் வரை அழகு தரும் கற்றாழை

aloe-vera

இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள் இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம். கற்றாழை ஒரு குளிர்ச்சி தன்மையுடைய பொருள் என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த கற்றாழை ஜெல், பல மருத்துவ பயன்களை கொண்டது. பல ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது. சரி இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நம் உடலை அழகாக்க, சில அழகு குறிப்புகள்  இந்த பகுதியில் நாம் படித்து கொள்வோம் வாங்க. வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து…

மேலும் படிக்க

பனை மரம் சில பயனுள்ள தகவல்கள்🌴🌴

PalmTree

பனை மரம் நமக்கு பல்வேறு பயங்களைத் தருகிறது. இதை தொகுப்பில் பனையின் வகைகள் மற்றும் பயன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள். வகைகள்: 1. ஆண் பனை2. பெண் பனை3. கூந்தப்பனை4. தாளிப்பனை5. குமுதிப்பனை6.சாற்றுப்பனை7. ஈச்சம்பனை8. ஈழப்பனை9. சீமைப்பனை10. ஆதம்பனை11. திப்பிலிப்பனை12. உடலற்பனை13. கிச்சிலிப்பனை14. குடைப்பனை15. இளம்பனை16. கூறைப்பனை17. இடுக்குப்பனை18. தாதம்பனை19. காந்தம்பனை20. பாக்குப்பனை21. ஈரம்பனை22. சீனப்பனை23. குண்டுப்பனை24. அலாம்பனை25. கொண்டைப்பனை26. ஏரிலைப்பனை27. ஏசறுப்பனை28. காட்டுப்பனை29. கதலிப்பனை30. வலியப்பனை31. வாதப்பனை32. அலகுப்பனை33. நிலப்பனை34. சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவு பொருட்கள் : 🌴நுங்கு🌴பனம் பழம்🌴பூரான்🌴பனாட்டு🌴பாணிப்பனாட்டு🌴பனங்காய்🌴பனங்கள்ளு🌴பனஞ்சாராயம்🌴வினாகிரி🌴பதநீர்🌴பனங்கருப்பட்டி🌴பனைவெல்லம்🌴சில்லுக் கருப்பட்டி🌴பனங்கற்கண்டு🌴பனஞ்சீனி🌴பனங்கிழங்கு🌴ஒடியல்🌴ஒடியல் புட்டு🌴ஒடியல் கூழ்🌴 புழுக்கொடியல்🌴முதிர்ந்த ஓலை🌴 பனை குருத்து🌴 பனங்கருப்பட்டி🌴பனைவெல்லம்🌴சில்லுகருப்பட்டி🌴சுக்கு கருப்பட்டி🌴பனங்கற்கண்டு🌴பனஞ்சக்கரை🌴 பனங்கிழங்கு மாவு🌴 பனங்கிழங்கு சத்துமாவு🌴பதநீர்🌴பனம்பழம் ஜுஸ்🌴பனை விதை🌴பனங்கன்று🌴பனங்கிழங்கு🌴பனைப்பாய்🌴புழுக்கொடியல்🌴ஒடியல் வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் : 🌴பனையோலை🌴நீற்றுப் பெட்டி🌴கடகம்🌴பனைப்பாய்🌴கூரை வேய்தல்🌴வேலியடைத்தல்🌴பனைப்பாய்🌴பாயின் பின்னல்🌴பனையோலைப் பெட்டி🌴பனை ஓலைச் சுவடிகள்🌴பனை ஓலைத் தொப்பி🌴குருத்தோலை🌴பனம் மட்டை🌴வேலியடைத்தல்🌴நார்ப் பொருட்கள்🌴தட்டிகள் பின்னல்🌴கங்குமட்டை🌴தும்புப் பொருட்கள்🌴விறகு🌴மரக்கட்டை விவசாயப் பயன்பாட்டுப்…

மேலும் படிக்க

தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சி

Lying-side-leg-raise

தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise) பயிற்சி உங்களுக்கு நல்ல பலனைத்தரும். உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது. இந்த பயிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise). இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும். இடது…

மேலும் படிக்க

அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்தும் பிராணாயாமம்

பிராணாயாமம்

ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை தான் பிராணாயாமம். ஒழுங்கில்லாமல் நடந்துகொண்டிருக்கும் மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதின் மூலம் அலை பாயும் மனதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஒருபயிற்சி முறை. இப்பயிற்சி ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்களை விரட்டியடிக்கும் திறன் படைத்தது. மூச்சுக்காற்றிற்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒருவர் பயம்கொள்ளும் போது மூச்சுக்காற்று தடைபடும். மனது சஞ்சலப்படும்போது மூச்சுக்காற்றும் சலனப்படுவதை கணலாம். மனதில் பயஎண்ணங்கள் வரும்போது கீழ்மூச்சு,மேல்மூச்சு ஏற்படுவதை காணலாம். வாழ்க்கையில் சலிப்படையும் போதோ அல்லது மனதில் பொறாமை எண்ணம் ஏற்பட்டாலோ ”பெருமூச்சு” விடுவதை காணலாம். இதயநோய் உள்ளவர்கள் மனதில் அதிகளவு சந்தோஷப்படுவதோ, துக்கப்படுவதோ கூடாது என்பார்கள். ஏனெனில் இந்த அதிகப்படியான மன உணர்ச்சிகள் மூச்சுக்காற்றில் தடையை ஏற்படுத்தி அதன்மூலம் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இதயத்தின் இயக்கத்தை…

மேலும் படிக்க

மாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA

mappillai-samba

பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வைப்பர். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். இந்த ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்கும் பலம் (Strength) உடையவர்களாக இருப்பார்கள். இதனால், இதற்கு மாப்பிள்ளை சம்பா(Samba Groom) என்று பெயர் இட பெற்றது. தனித்துவம் (Specialty): இந்தியாவில் தொன்றுதொட்டு பயிரிடப்படும் பாரம்பரிய (Traditional)நெல் வகைகள் மிகவும் மருத்துவக் குணம்(Medicinal Value) வாய்ந்தவை. அவற்றிலும் மாப்பிள்ளை சம்பா தனித்தன்மை  உடையது. அதற்குக் காரணம், மாப்பிள்ளை சம்பாவின் நோய் எதிர்ப்பு சக்தி((Immunity Power). இதில் புரதம்(Protein), நார்சத்து (Fibre) மற்றும் உப்பு (Salt) சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த நெல் ரகம் ஆளுயரம் வளர்கிறது. மாப்பிள்ளை சம்பா  உண்பதால் ஏற்படும் பயன்கள்: நீரிழிவு நோயாளிகளுக்கு(Diabetes)…

மேலும் படிக்க

சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை

சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய இனிப்பு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: கம்பு – ஒரு கப், தினை – ஒரு கப், கேழ்வரகு – ஒரு கப், ஏலக்காய் – 4, கருப்பட்டி – 2 கப், தேங்காய்த் துருவல் – 1 கப் செய்முறை: கம்பு, தினை, கேழ்வரகு ஆகியவற்றைத் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியை துருவி, மிக்ஸியில் தனியாகப் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவலைத் தனியாக வதக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்துக் கொழுக்கட்டை…

மேலும் படிக்க

பப்பாளிப்பழ மில்க் ஷேக்

papaya-milkshake

பப்பாளி பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பப்பாளி பழம், தேங்காய்ப்பால் சேர்த்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பழுத்த பப்பாளிப்பழம் – 1/2தேங்காய்ப் பால் – 1 கப்வெல்லம் – 1/4 கப்ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை : பப்பாளிப்பழத்துடன் வெல்லம், தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும். நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும். சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.

மேலும் படிக்க

வாழைப்பழ அல்வா

வாழைப்பழ அல்வா

வாழைப்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று வாயில் வைத்தாலே கரையும் வாழைப்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வாழைப்பழம் – 8சர்க்கரை – ஒரு கப்நெய் – 6 டேபிள் ஸ்பூன்பாதாம் – 5முந்திரி – 5சோள மாவு – 5 டீஸ்பூன் செய்முறை: முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரியை போட்டு வறுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் நெய்விட்டு உருகியதும், வாழைப்பழ விழுதை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும்.வாழைப்பழம் பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வாழைப்பழ கலவையுடன் சேர்த்து கிளறவும். இடை இடையே…

மேலும் படிக்க

பாலக்கீரையில் சாம்பார் செய்வது எப்படி?

பாலக்கீரை சாம்பார்

பாலக்கீரை சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. இதில் பொதுவான பருப்புக்கூட்டு மசியல் என செய்வோம். ஆனால் பாலக் கீரையில் சுவையான சாம்பாரும் செய்ய முடியும். தேவையான பொருட்கள் : பாலக் கீரை – 1 கட்டுவேகவைத்த துவரம் பருப்பு – 1 கப்சின்ன வெங்காயம் – 1 டேபிள்ஸ்பூன்தக்காளி – 1சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்புளி – 1 எலுமிச்சை அளவுகடுகு – 1 டீஸ்பூன்உளுந்து – 1 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்வெந்தயம் – 1 டீஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்கொத்துமல்லித்தழை – சிறிது செய்முறை : கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி கீரையை வேகவைத்து கொள்ளவும்.நன்றாக கீரை வெந்ததும் அதை மத்தால்…

மேலும் படிக்க