முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள்

முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள்

வீட்டில் இருக்கும் பொருள்களை எப்படி எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். முகத்துக்கு அடிக்கடி பயன்படுத்தகூடாத பொருள்கள் என்னவென்று பார்க்கலாம். பொதுவாகவே பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களை அழகாக காட்டிகொள்வதில் சற்று அதிகமாகவே மெனக்கெடுகிறார்கள். ஒரு பக்கம் பியூட்டி பார்லர் சென்று அழகு படுத்திகொள்கிறார்கள். பிறகு வீட்டிலிருக்கும் போதும் அழகு பராமரிப்பு செய்கிறார்கள். குறிப்பாக வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு அழகுப்படுத்தி கொள்வது சாத்தியம் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும். ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருள்களுடன் கூடுதலாக கலக்கும் பொருள்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். சமயங்களில் அவை சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. முகப்பருவுக்கு என்ன செய்யலாம் கரும்புள்ளி வந்தால் என்ன போட வேண்டும், கருவளையம் மறைய செய்ய வேண்டியது என்ன முகம் வெள்ளையாகுமா இப்படியான அழகு தரும் கேள்விகளை முன் வைக்கும் பெண்கள்…

மேலும் படிக்க

கேரட் தேங்காய் பர்ஃபி

Carrot-Coconut-Barfi

கேரட்டில் வைட்டமின் A சத்து நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு தேவையான நல்ல வைட்டமின்கள் உள்ளன. இன்று கேரட்டை வைத்து அருமையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய்த் துருவல் – கால் கப்கேரட் துருவல் – கால் கப்சர்க்கரை – ஒரு கப்நெய் – தேவையான அளவுஏலக்காய் – 4 (பொடித்துக் கொள்ளவும்) செய்முறை: வாணலியில் தேங்காய்த் துருவல், கேரட் துருவல், சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி கிளறவும். இடைஇடையே நெய் சேர்த்து கிளறவும். சர்க்கரை தானே இளகி வரும்போது கேரட் துருவல் வெந்துவிடும்.கலவை சுருண்டு நெய் வெளியில் வரும்போது ஏலக்காயை சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட்டு துண்டுகள் போடவும். சுவையான கேரட் தேங்காய் பர்ஃபி ரெடி

மேலும் படிக்க

தமிழர் பாரம்பரிய ரசம் வகைகள்

ரசம் வகைகள்

இந்தத் தொகுப்பில் தமிழர்களின் பாரம்பரிய ரசம் வகைகளை கொடுத்துள்ளோம். பிடித்திருந்தால் பகிரவும்.

மேலும் படிக்க

சோம்பு கீரை பொரியல்

சோம்பு கீரை

சோம்பு கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கீரையை வைத்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சோம்பு கீரை – 2 கப்சின்ன வெங்காயம் – 50 கிராம்காய்ந்த மிளகாய் – 4உப்பு – தேவையான அளவுதுருவிய தேங்காய் – தேவையான அளவு தாளிப்பதற்கு: நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுந்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை  – சிறிது செய்முறை: சோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.…

மேலும் படிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை ரசம்

herbal-rasam

இந்த மூலிகை ரசம் இருமல், சளி, அலர்ஜி ஆகிய அனைத்திற்கும் நல்லது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள்: புளி – ஒரு நெல்லிக்காய் அளவுதுளசி இலை – 10கற்பூரவல்லி இலை – 3வெற்றிலை – 2நார்த்த இலை – 3கறிவேப்பில்லை – தேவையான அளவுகொத்தமல்லி இலை, புதினா – தலா 1 கைப்பிடிமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்ரசப் பொடி (கடைகளில் கிடைக்கும்) – ஒன்றரை ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 5கடுகு – தாளிக்கவெந்தயம் – தாளிக்கபெருங்காயம் – கால் ஸ்பூன் செய்முறை: முதலில் புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து மண் இல்லாத படி நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை,…

மேலும் படிக்க

சளி, இருமலுக்கு இதம் தரும் பூண்டு மிளகு சாதம்

பூண்டு மிளகு சாதம்

சளி, இருமல், தொண்டைவலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் பூண்டு, மிளகு சேர்த்து சாதம் செய்து சாப்பிடலாம். இந்த சாதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தேவையான பொருட்கள்: பாஸ்மதி (சாதம்) – ஒரு கப்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – அரை டீஸ்பூன்கடலை பருப்பு – அரை டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 3வெங்காயம் – ஒன்றுபூண்டு – 10 பல்மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லித்தழை- சிறிதளவுநெய், உப்பு – தேவைக்கு செய்முறை: வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு உருகியதும், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும். கூடவே, காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பொடியாக நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இந்நிலையில்,…

மேலும் படிக்க

பறவை , விலங்குகளின் இளமைப் பெயர்கள்

பறவை , விலங்குகளிஇளமைப் பெயர்கள்

இந்தத் தொகுப்பில் சில பறவை மற்றும் விலங்குகளின் இளமை பெயர்களைக் காண்போம். அணில் குஞ்சு, குட்டி, பறழ், பிள்ளை ஆடு குட்டி எருமை கன்று எலி குஞ்சு, குட்டி கமுகு கன்று, பிள்ளை கரடி குட்டி, குடாவடி காகம் குஞ்சு, பிள்ளை கிளி குஞ்சு, பிள்ளை கீரி குட்டி, பிள்ளை குதிரை குட்டி குரங்கு குட்டி, பறழ் கோழி குஞ்சு தவளை குஞ்சு, பேத்தை தென்னை கன்று, பிள்ளை நாய் குட்டி, குருளை நெல் நாற்று பயிர்கள் நாற்று பலா கன்று பனை வடலி பாம்பு குட்டி புலி குட்டி, குருளை பூனை குட்டி, பறழ் மா கன்று மான் கன்று, குட்டி மீன் குஞ்சு யானை கன்று, களபம், போதகம் வாழை கன்று வேம்பு கன்று புகையிலை நாற்று சிங்கம் குட்டி, குருளை ஆமை குஞ்சு…

மேலும் படிக்க

கொள்ளு சாகுபடி மானாவாரியிலும் மகத்தான மகசூல்

கொள்ளு சாகுபடி

கொள்ளு பயிரானது செப்டம்பர் – நவம்பர் – மாத காலங்களில் சாகுபடி செய்வது மிகச் சிறந்தது. இது தமிழகத்தில் சுமார் 60,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  ரகங்கள்: கோ-1, பையூர் -1, பையூர் – 2.  சாகுபடி முறைகள்:  நிலத்தை ஐந்து கலப்பை அல்லது ஒன்பது கலப்பை கொண்டு புழுதி படிய நன்கு உழவு செய்ய வேண்டும். விதையளவு:  ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். ரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா (1 பாக்கெட்) 200 உயிர் உரத்தை 400 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, 1 ஏக்கருக்குத் தேவையான விதைகளைக் கலந்து, பின் நிழலில் உலர்த்தி…

மேலும் படிக்க

கூடுதல் வருவாய் கிடைக்க தரிசு நிலத்தில் பயறு வகை சாகுபடி

கூடுதல் வருவாய் கிடைக்க தரிசு நிலத்தில் பயறு வகை சாகுபடி

பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பு, மெழுகுபதத்தில் பயறு வகைகள் விதைக்கப்படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர்ப்பயிர்கள் என்னும் பெயர். நெல் தரிசு ஈரம் மற்றும் சத்துகளைப் பயன்படுத்திப் பயிரிடுவதால், அதிக செலவின்றி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மண் வகை: களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர்நிலத்தில் பச்சைப் பயிறு நன்கு விளையும். ஏடிடீ 3, 5, டி.எம்.வி 1 கோ-4 ஆகிய உளுந்து வகைகளும், ஏடிடீ 3, கே.எம் 2 ஆகிய பாசிப்பயறு வகைகளும் நல்ல மகசூலைத் தரும். சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த  வேண்டும். தைப்பட்டம் மிகவும் ஏற்றதால், ஜனவரி 15-இல் தொடங்கி பிப்ரவரி 15- ஆம் தேதிக்குள் விதைத்துவிட வேண்டும்.  ஏனெனில், அந்த நாள்களில் வயலில் காணப்படும் ஈரப்பதமும், பனிஈரமும்…

மேலும் படிக்க

கோடையை சமாளிக்க

summer-tips

கொளுத்தும் வெயில், ஒவ்வொரு நாளும் உஷ்ணம் தாங்க முடியாமல், நம்மில் பலருக்கு சோர்வு, எரிச்சல், தலைவலி, மயக்கம், தசைபிடிப்பு, சிறுநீரக தொற்று போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு, ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வந்து, பாடாய் படுத்தும். வெயில் காலத்திற்கே உரிய இந்த கொடும் பிரச்னைகள் நம்மை தாக்காமல் இருக்க, சில எளிய வழிகளை சொல்கின்றனர், இயற்கை நல மருத்துவர்கள்.(summer tips) கோடையில், காலையில் எழுந்ததும், பல் துலக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். இதனால், உடல் உஷ்ணம் குறையும். உடனே, வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறும். உடம்பும் சூடு தணிந்து, குளிர்ச்சியாக துவங்கும்.மற்ற பருவத்தில், நாள் ஒன்றுக்கு, எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால், கோடையில், 12 டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். உடல் ஈரப்பதம் குறைந்து, வறண்டு போகாமல் இருக்கும். இயல்பாகவே உடல் சூடு அதிகமுள்ளோர், மோரில்…

மேலும் படிக்க