பாரம்பரிய அரிசி வகைகள்

பாரம்பரிய அரிசி

அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். பாரம்பரிய நெல் வகைகளையும் மற்றும் பலன்களையும் இந்தத் தொகுப்பில் காணலாம். அன்னமழகி அறுபதாங்குறுவை பூங்கார் ஒட்டடம் மடுமுழுங்கி மாப்பிள்ளைச் சம்பா கருப்புக் கவுனி சண்டிக்கார் முற்றின சன்னம் பூவன் சம்பா கௌனி வல்லரகன் கூம்பாளை சிகப்புக் குருவிக்கார் குந்தாவி ஆத்தூர் கிச்சிலி கட்டைச் சம்பா கருடன் சம்பா மணல்வாரி நீலச்சம்பா தங்கச்சம்பா ஆற்காடு கிச்சலி வாழைப்பூச் சம்பா தூயமல்லி சேலம் சன்னா கைவரச் சம்பா கிச்சிலிச் சம்பா கருத்தக்கார் நவரா செம்பிளிச் சம்பா இறவைப் பாண்டி சன்னச் சம்பா பனங்காட்டுக் குடவாழை கந்தசாலா கைவிரச்சம்பா சீரகச்சம்பா கொட்டாரச் சம்பா சிகப்புக் கவுனி வெள்ளைப்பொன்னி சின்னப்பொன்னி துளசிவாச சீரகச்சம்பா இலுப்பைப்பூச்சம்பா கொசுவக் குத்தாளை வாசனை சீரகச்சம்பா பால் குடவாழை புழுதிச் சம்பா பாசுமதி சேலம் சம்பா கருங்குறுவை தேங்காய்ப்பூச்சம்பா காட்டுக்…

மேலும் படிக்க

2020 புத்தாண்டு ராசி பலன்கள் – கும்பம்

கும்பம்

இந்த ஆண்டு, சகிப்புத்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் தரும். ராசிநாதன் சனி பகவான் லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறந்திருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவரின் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்ததை மீட்பீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து வரும். பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே சென்று திருத்துவது நல்லது. உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.  வியாபாரத்தில் தள்ளுபடி விற்பனையால் லாபம் கூடும். கடையை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும்…

மேலும் படிக்க

மார்கழி மாத விரதத்தின் மகத்துவம்

மார்கழி

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடினால் திருமணத் தடை நீங்கும். வழிபாட்டிற்கு உகந்தது மார்கழி மாதம் எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற் றப்படுகிறது. பனி விழும் மாதம் மார்கழி. இந்த மாதத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்குச் சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறியபடியும், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களை பாடியபடியும் வீதிகள்தோறும் நடந்து செல்வார்கள். கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். வீட்டில் இருப்பவர்கள் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரிய கோலங்கள் போடுவர். மார்கழி மாதத்தில்…

மேலும் படிக்க

கொங்கு மங்கல வாழ்த்து

கொங்கு மங்கள வாழ்த்து பாடல்

கொங்கு வேளாளர் திருமணங்களில் நடைபெறும் மிக முக்கியமான சடங்குச்சீர்களில் ஒன்று மங்கலவாழ்த்து. குடிமகன் அல்லது மங்கலன் என்று அன்புடன் அழைக்கப்படும் நாவிதர்குலப் பெருமகன் இதனைப் பாடுவார். ஒவ்வொரு நிகழ்ச்சியாக மங்கலன் சொல்லி நிறுத்தும்போதும் மத்தளத்தில் மேளகாரர் ஒருமுறை தட்டுவார். “ இது கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பெருமானால் பாடிக் கொடுக்கப்பட்டதென்று கொங்குநாட்டார் அனைவரும் நம்புகிறார்கள்” என்று 1913-ல் பதிப்பித்த திருச்செங்கோடு அட்டாவதானம் முத்துசாமிக் கோனாரவர்கள் குறிப்பிடுகிறார்கள். திருமண முறைகளை எளிய நாட்டு வழக்கச் சொற்களால் ஒழுங்குபெற அமைத்துப் புலவர்பிரானார் இதனை அருளினர்போலும். அதற்கேற்ப இவ்வாழ்த்தினுள் ‘கங்காகுலம் விளங்கக் கம்பர் சொன்ன வாழ்த்துரைத்து’ எனவரும் அடியாலும் கம்பர் குலத்தார்கள் அகவலும் தரவும் விரவிவரப் பாடினார்கள் என்று கொள்க. கொங்கு வேளாளர் திருமண மங்கலவாழ்த்து கவிச்சக்கிரவர்த்தி கம்பர் பாடியது நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்அல்லல்வினை எல்லாம் அகலுமே – சொல்லரியதும்பிக்கை யானைத்…

மேலும் படிக்க

வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். செயலியில் விரைவில் டார்க் முறை(Dark Mode), குறைந்த தரவு முறை ( Low Data Mode)  மற்றும்  தொடர்பு ஒருங்கிணைப்பு (Contact Integration)

வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். செயலி

வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா செயலியில் டார்க் முறை(Dark Mode), குறைந்த தரவு முறை ( Low Data Mode)  மற்றும்  தொடர்பு ஒருங்கிணைப்பு (Contact Integration) அம்சங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன. டார்க் முறை(Dark Mode): வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் டார்க் மோட் மற்றும் சில புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகின்றன. விரைவில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஒ.எஸ். 2.20.10.23 (iOS 2.20.10.23) அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு டார்க் முறை(Dark Mode), குறைந்த தரவு முறை ( Low Data Mode)  மற்றும்  தொடர்பு ஒருங்கிணைப்பு (Contact Integration) போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். குறைந்த தரவு முறை ( Low Data Mode) : ஐபோன் மொபைல் டேட்டாவில் இருக்கும் போது குறைந்த தரவு முறை மீடியா ஃபைல், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்டவை…

மேலும் படிக்க

குழந்தைகளின் கண்நலத்தை பாதிக்கும் விஷயங்கள்

குழந்தைகளின் கண்நலத்தை பாதிக்கும் விஷயங்கள்

குழந்தைகளின் வளர்ச்சியில் 2 வயது முதல் 12 வயது வரை உள்ள காலம் மிக முக்கிய பருவம். சிறுவயதில் கண்களைச் குழந்தைகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். கண்களில் சிவப்பு மற்றும் நீர் வடிதல் இவையும் இருக்கும். இதற்கு முக்கிய க் காரணம் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை. டெடி பியர் போன்ற மென் பஞ்சு இழைகளாலான பொம்மைகள், தலையணை, மெத்தையில் இருந்து வரும் தூசி, நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் சிறிய ரோமங்கள் இவையே இத்தகைய ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய காரணிகள். இதுபோக மின்விசிறி, ஜன்னல், ஏசியில் ஒட்டியிருக்கும் தூசுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. குடற்புழுக்கள், நகக்கண்களில் தேங்கியிருக்கும் அழுக்குகள், வீட்டைச் சுற்றி இருக்கும் பார்த்தீனியம் செடியின் மகரந்தத்தூள் இவையும் அலர்ஜியை ஏற்படுத்தும். நாள்பட்ட அலர்ஜியால் கண்ணின் மேற்படலம் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் கலந்த பழுப்பு நிறமாக…

மேலும் படிக்க

இடுப்பு, தொடையை வலுவாக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்

சுவிஸ் பால் பயிற்சிகள்

ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும். ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் வெவ்வேறு பலன்கள் இருந்தாலும், இந்த ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும். ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான தோரணை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் வலுவாகும். சில உடற்பயிற்சி முறைகள்: பட் மஸ்கல் கிரன்ச் (Butt muscle crunch): கட்டில் அல்லது படுக்கும் வகையிலான நாற்காலியில், நுனியில் அமர்ந்து கொள்ள வேண்டும். பந்தை கால்களுக்கு இடையில், பக்கவாட்டுப் பாதங்களால் பிடித்துக் கொண்டு, கைகளை கட்டிலின் முனையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது…

மேலும் படிக்க

தமிழர்களின் வரலாற்றுப் படைப்புகள்

கல்லணை

தமிழன் என்ன கண்டுபிடித்தான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனைப் பட்டியல்கள் உங்களுக்காக! கல்லணை : உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. மாமல்லபுரம் : கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.…

மேலும் படிக்க

நலமான வாழ்வுக்கு நான்கு விஷயங்கள்

நலமான வாழ்வுக்கு நான்கு விஷயங்கள்

பிழைத்திருத்தல் என்பது வேறு: வாழ்ந்திருத்தல் என்பது வேறு. பிழைத்துக் கிடப்பதற்கு பெரிய சிந்தனையோ விஷய ஞானமோ தேவையில்லை. நலமான வாழ்வை விரும்புவோர், நிம்மதியான தூக்கம், சீரான நடைப்பயிற்சி, ஒழுங்கான உணவுமுறை, எப்போதும் மகிழ்ச்சி  நான்கு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். வாழ்வை பற்றிய தெளிவு அவசியம். சிரத்தை இல்லையெனில் பல சிக்கல்கள் வந்துவிடும். அதனால்தான் சிரத்தையுள்ளவனே ஆன்மாவைப் பற்றிய அறிவை பெறுகிறான் என்கிறது கீதை. ஆன்மா அறிவை மட்டுமல்ல; நலமிகு வாழ்வை குறித்த அறிவையும் அவன்தான் பெறுகிறான். மனமும் உடலும் சீரான நிலையில் இருந்தால் பிரச்சினைகளுக்கு இடமிருக்காது. நிம்மதியான தூக்கம்: தூங்க வேண்டிய நேரத்தில் சிலர் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருப்பார்கள். செல்போனில் யாரிடமாவது கதைத்துக் கொண்டிருப்பார்கள் அல்லது வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரத்தை பற்றிய உணர்வே இல்லாமல் மூழ்கி கிடப்பார்கள். எவ்வித…

மேலும் படிக்க

குளிர்கால பேஷியல்

குளிர்கால பேஷியல்

குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால் சருமம் வறட்சி அடைந்து பனி வெடிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். பேஷியல் செய்யும்போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும். குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் க்ரீம், மாய்ஸ்சரைசர், சீரம், பேஸ் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தலாம். நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றலாம். இது குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும். பேசியலை தவிர குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் விடும். குளிர்காலத்தில் சருமத்திற்கு பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். கிவி, வாழை, தர்பூசணி  போன்றவை…

மேலும் படிக்க