தமிழ் பொது அறிவு வினாக்கள்

தமிழ் பொது அறிவு வினா விடை

கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் – செங்கல் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை – வில்லுப்பாட்டு தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் – கன்னியாகுமரி தொண்டி யாருடைய துறைமுகம்  – சேர அரசர்கள் முசிறி யாருடைய துறைமுகம் – சேர அரசர்கள் சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் – கோவை, கேரளம் சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் – திருச்சி, தஞ்சாவூர் தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் – பந்தமடை பந்தமடை அமைந்துள்ள மாவட்டம் – திருநெல்வேலி சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – வேலூர் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் – திருநெல்வேலி உறையூர் யாருடைய தலைநகரம் – சோழர்கள் ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் – சோழர் பண்டைய சோழர்களின்…

மேலும் படிக்க

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு

குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாடு

குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை தவறாது செய்யுங்கள். குருபகவானின் நல்லருளை பெறுங்கள். குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பணிவது? நவக்கிரக குருவையா, ஞான குருவையா? சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர் களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா? இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக்…

மேலும் படிக்க

ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் கதை

ஆண்டாள்

அன்று கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கொத்திக்கொண்டிருக்கும் போது ஒரு அழகிய பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. அவரும் அக்குழந்தையை தன் மகளாகவே கருதி “கோதை” என்று பெயரிட்டு மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். கோதை, நாய்ச்சியார் என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும் அழைக்கப்பட்ட ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார். விஷ்ணு சித்தர் கோதைக்கு வட பெருங் கோயிலுடையான் பெருமையும் வைணவ தர்ம சாராம்சமும் சொல்லி வளர்த்தார். ஆண்டாளும் , துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டாள். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஆழ்வார்…

மேலும் படிக்க

மிளகாய் சாகுபடி முறைகள்

மிளகாய்

காய்கறிகளில் நிலைத்த வருவாய் பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். மிளகாய் பொதுவாக வண்டல் மண் அல்லது களிமண்ணும் மணலும் கலந்த இரு மண்பாடு வகைகளில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 இருக்குமாறு பராமரித்தல் மிகவும் நன்மை பயக்கும். ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி நாமே குழித்தட்டு முறையில் நாற்றுகள் தயாரிக்கலாம் அதிக மகசூல் தரும் மிளகாய் வகைகள்: பெரிய குளம், கோவில்பட்டி, சுப்ரியா, இந்திரா, என். எஸ் 110, 230, 237 மற்றும்  1701. நடவுமுறைகள் ஒரு எக்டேருக்கு 2,300 நாற்றுகள் தேவை. டிரைக்கோடெர்மா விதை 5 கிராம் அல்லது சூடாமோனாஸ் 10 கிராம் விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதையுடன் கலந்து நாற்றுக்களை நிழல் வலை நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்தால்…

மேலும் படிக்க

12 ராசிகளுக்கான பெயர் வைக்கும் குறிப்புகள்

12 ராசிகளுக்கான பெயர் வைக்கும் குறிப்புகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, 12 ராசிகள் உள்ளன. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து தான் அவருடைய ராசி அமையும். பல நூற்றாண்டு காலமாக ராசியை பொறுத்து தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் உள்ளது. பிறந்த நேரத்தின் போது, நிலா எந்த ராசியில் உள்ளதோ, அதுவே குழந்தையின் ராசியாகிவிடும்.   மேஷம் எழுத்துக்கள் : சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது மேஷம். ஆற்றல் திறன் மற்றும் சுறுசுறுப்பு நிறைந்தவர்களாக இருப்பவர்களே மேஷ ராசிக்காரர்கள். மக்களை தங்களின் வசீகரம் மற்றும் கவர்ச்சியால் ஆளக்கூடிய புகழ்பெற்ற தலைவர்களாக இருப்பார்கள் இவர்கள். புதிய தளத்தில் காலூன்ற தயங்க மாட்டார்கள். ரிஷபம் எழுத்துக்கள் : ஈ, உ, ஏ, ஓ, வா, வீ,…

மேலும் படிக்க

தினசரி வாழ்க்கைக்கு சில ஆன்மீக குறிப்புகள்

தினசரி வாழ்க்கைக்கு சில ஆன்மீக குறிப்புகள்

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும். தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத் துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும். கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை. கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும். நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில் இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும். வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண் டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60…

மேலும் படிக்க

செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி

செம்மை நெல் சாகுபடி-நாற்றங்கால் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற தற்போதுள்ள நடைமுறையைவிட செம்மை நெல் சாகுபடி முறையினை கையாளுவது அவசியம். பாய் நாற்றங்கால் தயாரிக்கும் முறை ஏக்கருக்கு 3 கிலோ விதை நெல் தேவைப்படும். ஒரு ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) நாற்று மேடை தேவை. அருகிலிருக்கும் மண்ணை எடுத்து நடவு வயலின் ஓரத்தில் ஒரு மீட்டர் அகலம் ஐந்து மீட்டர் நீளம் (1மீ து 5 மீ) அளவுள்ள 8 மேடைகளை உருவாக்க வேண்டும். மேடையை நன்கு சமப்படுத்தி 1 து 5 மீ அளவுள்ள பாலிதீன் சீட்டை விரித்து விட வேண்டும். தொழி மண்ணை 2 செ.மீ. உயரத்திற்கு சமமாக இடவேண்டும். பின் விதைநேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் மூன்று கிலோ விதைக்கு ஒரு பாக்கெட் (200 கி) என்ற அளவிலும் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றை தேவையான…

மேலும் படிக்க

புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை சோதனை செய்யும் ஃபேஸ்புக்

Facebook_Google

ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம், வீடியோக்களை கூகுள் மற்றும் இதர சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை சோதனை செய்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. இந்த அம்சம் புகைப்படஙகள் மற்றும் மீடியா தரவுகளை மற்ற ஆன்லைன் சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள வழிசெய்யும். முதற்கட்டமாக ஃபேஸ்புக்கில் இருக்கும் மீடியா தரவுகளை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் முதலில் அயர்லாந்தில் உள்ள பயனர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் பயனர் மதிப்பீட்டிற்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க இந்த அம்சம் 2020 ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் வழங்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கட்டுப்பாட்டு வாரியங்கள் ஃபேஸ்புக் பயனர் விவரங்களை இயக்குவதில் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்…

மேலும் படிக்க