127 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

Govt Jobs: டெல்லி உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 60 மூத்த அலுவலக உதவியாளர், 67 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் 30ம் தேதி வரை பெறப்படம். www.delhihighcourt.nic.in அல்லது recruitment.nta.nic.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 காலியிட விவரம்:  மூத்த அலுவலக உதவியாளர் பதவிக்கு  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும். கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க  வேண்டும். நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் சுருக்கெழுத்து செய்ய வேண்டும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கவேண்டும். கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் சுருக்கெழுத்து செய்ய வேண்டும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2023 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பித்தார் 02.01.1991 என்ற தேதிக்கு முன்பும், 01.01.2005 என்ற தேதிக்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே பட்டியல் சாதிகள்/ பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாண்டு வயது வரம்பு சலுகை உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: தட்டச்சுத் தேர்வு, சுருக்கெழுத்துத் தேர்வு,  முதன்மைத் தேர்வு (Main Examination), Interview (நேர்காணல் தேர்வு) ஆகிய நிலைகளில் தேர்வு முறை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.800 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். டெல்லி உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment