வேலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் முற்றிலும் தற்காலிக  தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்த நபர்கள் வரும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

காலியிட விவரங்கள்: 

உளவியலாளர்/ ஆற்றுப்படுத்துநர்:  எண்ணிக்கை 1; கல்வித் தகுதி:  இளங்கலை காமர்ஸ் அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.15,000

பாதுகாவலர்: எண்ணிக்கை -2; கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.12,000

சமையலர்: எண்ணிக்கை 1; கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சம்பளம்: ரூ.10,000.

உளவியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பாதுகாவலர்/சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 33 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதிவாய்ந்த நபர்கள், விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (http:/vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

கட்டாயம் வாசிக்க: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்… இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பங்களை உரியசான்றுகளின் ஒளி நகலுடன் நேரிலோ, தபால் மூலமாகவே அல்லது கொரியர் மூலமாகவே வரும் நாளை (31.03.2023) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை, வேலூர் – 632 001 ஆகும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment