வருகிறது 3 டைடல் பூங்காக்கள்… 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், “தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city) அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்,  உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும். பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், “தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)- இந்த அரசு அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட திறன்மிகு மையங்கள், புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்துக் கட்டமைப்புகளும் இந்தத் தொழில்நுட்ப நகரங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க ஆவின் வேலைவாய்ப்பு 2023: ரூ.43,000 சம்பளத்தில் வேலை… வெளியான அசத்தல் அறிவிப்பு

சென்னையில் முதன்முறையாக 2000 ஆம் ஆண்டில், TIDEL பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.  இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், ஏழு மாவட்டங்களில் நியோடைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் நீட்சியாக, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலர ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.


Source link

Related posts

Leave a Comment